Sun tv Serials: சீரியல்களில் மட்டும் இப்படி சகுனம் காமிக்குதே!
சென்னை: அனைத்து தொலைகாட்சி சீரியல்களிலும் ஏதாவது கெட்டது நடக்கப் போகிறது என்றால் சகுனம் காண்பிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
நாட்டில் அதது அன்றைய பிழைப்புக்கு, அங்கே வேலை செய்ய ஓடலாமா,,இங்கே வேலை செய்ய ஓடலாமா என்கிற தீர்மானத்துக்குள் வருவதற்குள் பூனை குறுக்கே போகிறது என்கிற சகுனம்.
காலையில் வேகமா சமைச்சுக்கிட்டு வேலை பார்த்துகிட்டு இருப்பாங்க, அவசரமா தலையில வச்ச பூ விழுந்துடும். அல்லது முகம் பார்க்கும் கண்ணாடி கை தவறி விழுந்திரும். அன்னிக்கு முழுக்க சகுனத் தடை என்று அந்த பெண்னின் முகம் எப்போதும் பாவம் பார்ப்பது போலவே இருக்கும்.

சீரியல் கண்மணி
கண்மணி சீரியலில் தர்மதுரை மனசு சரியில்லாமல் இருக்கிறார்.அதற்குள் சின்ன பொண்ணுக்கு கீழே விழுந்து காலில் அடிபட்டு விட்டது என்று குடும்பமே ஆஸ்பத்திரிக்கு கிளம்புகிறார்கள்.அப்போது கணவனை விட்டுவிட்டு விஜயலட்சுமியும் போறாங்க. அவங்க தலையில இருந்த பூ கீழே விழுந்துருது. விஜயலட்சுமி பூ கீழே விழுந்துருச்சு பாருன்னு சொல்லி எடுத்து கொடுக்கிறார்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த ஓரிரு மணி நேரங்களில் தர்மதுரை இறந்து விடுகிறார்.

சீரியல் மின்னலே
நேற்று மின்னலே சீரியலில் கணவனை கயவன் ஒருவன் கொல்ல போகிறான்.மனைவிக்கு மனது சரியில்லை. அவங்க பூஜை அறையில் உட்கார்ந்து இருக்காங்க. விளக்கு ஏத்தினால், விளக்கு பற்றவில்லை. ஒரு வழியாக பல தீக்குச்சியை செலவு செய்து விளக்கை ஏத்தியாச்சு.
மருமகள் ஷாலினி, அத்தை சாப்பிட வாங்க அத்தைன்னு கூப்பிட,எனக்கு மனசு சரியில்லை. சகுனமும் சரியில்லை ஷாலினி.இத்தனை தடவை விளக்கு ஏத்தியும் பத்திக்கலை. கற்பூரம் காண்பிச்சுட்டு வரேன்னு அவங்க சொல்லி, கற்பூரம் ஏத்தறாங்க. அது விளக்கு நடுங்கி இவங்க புடவையில் விழுந்து தீ பிடிச்சுருது.
சகுனத்துக்கு பயந்தது போலவே, கடைசியில் இவங்க புருஷனும் கொலை செய்யப்பட்டு செத்துடறார்.

நிலா சீரியல்
நிலா சீரியலில் நிலாவின் வளர்ப்பு அப்பா என்று சொல்லப்படும், தாய் மாமன் ராஜசேகர் நீலாம்பரியிடம் கையும், களவுமாக தனது தங்கை கணவரின் போட்டோவை எடுத்து வந்தவர் மாட்டிக்கொள்கிறார். அவரை நீலாமபரி வில்லி மாதிரி மிரட்டிக்கொண்டு இருக்க, இங்கு கவுசல்யாவுக்கு தலையில் இருந்த பூ கீழே விழுகிறது.

வாடிப்போச்சுக்கா பூ
பூ வாடிப் போச்சுக்கா..இதையா மறுபடி வச்சுக்க போறேன்னு தம்பி கேட்கறான்.இல்லடா எப்படி இவ்வளவு சேர்க்கிறம் வாடுச்சுன்னு தெரியலைன்னு இவை சொல்ல, இரு பக்கத்துல இருக்கற முக்குல கடையில பூ வாங்கிட்டு வரேன்னு கிளம்பிடறான்.

வெள்ளைப் புடவை
இதுக்கு நடுவுல மகள் ஸ்வேதா, அம்மா உனக்கு ஒரு புடவை வாங்கிட்டு வந்து இருக்கேம்மா.நானும் உன் மாப்பிள்ளை சஞ்சயும் ஷாப்பிங் போனோம். உனக்கும் ஒரு புடவை எடுத்தோம்.. இந்தம்மான்னு குடுக்கறா. அதை பிரித்துப் பார்த்தால் வெள்ளைப் புடவை.இதையும் ஒரு சகுனத் தடையா நினைச்சு மனம் கலங்கி கண்ணீர் விடறாங்க கவுசல்யா..
இப்படி சகுனம் சகுனமென்று நன்றாக இருக்கும் மக்களையும் அதன் பின்னோக்கியே, தவிர மக்களை பின்னோக்கியும் கொண்டு செல்வது போல் இருக்கிறதே...இந்த நினைப்பு சரிதானா?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications