சன் டிவி டாப் சீரியல் கதாநாயகி அதிரடியாக மாற்றம்.. காரணம் இதுதானா? புதியதாக வரும் விஜய் டிவி நடிகை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் ரெஜினா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஜிவி டிம்பிள் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக விஜய் டிவியில் நடிக்கும் நடிகை அறிமுகமாகி இருக்கிறார். புதியதாக அறிமுகமான நடிகை யார்? எந்த சீரியலில் நடித்திருக்கிறார் என்ற தகவலை குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சன் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தை தொடர்ச்சியாக சிங்க பெண்ணே சீரியல் பிடித்து வருகிறது. இந்த சீரியல் தொடங்கி சில மாதங்கள் ஆகி இருந்தாலும். சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.

சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பொதுவாக மக்கள் மத்தியில் அதிகமான இடத்தை பிடித்து விடுகிறது. அந்த வரிசையில் இந்த சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. எத்தனையோ சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பானாலும் இந்த சீரியலுக்குத்தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
சீரியலின் கதைப்படி ஆனந்தி கிராமத்தில் இருந்து தன்னுடைய வீட்டு சூழ்நிலைக்கு சென்னைக்கு வேலைக்கு வந்து இருக்கிறார். அங்கு அவர் சந்திக்கும் பிரச்சனைகள், காதல், நட்பு என்று கலவையாக இந்த சீரியலின் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. அதாவது சீரியலின் கதாநாயகன் அன்பு, அழகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்க அழகனை ஆனந்தியும் காதலித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இதை தெரிந்து கொண்ட வில்லி குரூப் ஆனந்தியை ஏமாற்றுவதற்காக வேறு வகையில் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஆனந்தி ஏமாறுவாரா? அல்லது அழகன் அன்பு தான் என்பதை கண்டுபிடிப்பாரா? என்ற முக்கியமான திருப்பங்களோடு கதை இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஆனந்தியின் தோழியாக ரெஜினா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஜிவி டிம்பிள் திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவர் சன் டிவியில் மட்டுமல்லாமல் ஜீ தமிழில் இந்திரா சீரியலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலில் இருந்தும் விலகி விட்டார். தொடர்ச்சியாக இவர் சீரியலில் இருந்து விலகி இருக்கும் நிலையில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதற்கான சூட்டிங்கில் இவர் கலந்து கொண்டிருப்பதால் சிங்க பெண்ணே சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ரெஜினா கேரக்டரில் ஜிவி டிம்பிள்க்கு பதிலாக வீஜே கல்யாணி நடித்து இருக்கிறார். விஜே கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல கனா காணும் காலங்கள் சீரியலிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் இனி ரெஜினாவாக விஜே கல்யாணி நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications