“சுந்தரி” கேபி எடுத்த அதிரடியான முடிவு.. சீரியலை தாண்டியும் அசத்தல்.. இனி கலெக்டர் இல்ல நிஜ வாத்தியாரு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கேப்ரில்லா நேற்று மே ஒன்று உழைப்பாளர் தினத்தில் புதியதாக நடிப்பு பள்ளி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் அதிகமாக அடுத்த மாநில நடிகைகள் தான் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இயக்குனர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோருமே அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலர்தான் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பல நடிகைகள் பல்வேறு திறமைகளோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில நடிகைகள் தங்களுடைய நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் கவிதை படிப்போமா? என்று கதை, கவிதை படித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அந்த நிலையில் தான் அவருக்கு சன் டிவியில் தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் ஆரம்பத்திலேயே இவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு மக்களுக்கு தொடங்கிவிட்டது.
ஆனாலும் இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே போட்டியிலிருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு தான் சினிமா மற்றும் சீரியலின் வாய்ப்புக்காக அதிகமாக முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் கேப்ரில்லாவிற்கு சுந்தரி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டு மற்றும் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
சிவப்பாக அழகாக இருந்தால்தான் வாய்ப்பு என்று இல்லை என்று கருப்பு நிறமும் அழகுதான் என்று இவருடைய நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் சுந்தரி சீரியலில் படிக்காத பெண்ணாக இருந்த கேபி தன்னுடைய சொந்த உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் படித்து கலெக்டர் ஆகி இருக்கிறார்.
அதுபோல சொந்த வாழ்க்கையிலும் நடிப்பிற்காக சொந்த ஊரை விட்டு வெளியே வந்து பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று தனக்குன்னு ஒரு இடத்தை பிடித்த கேபி தன்னைப்போல சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்காக சொந்தமாக ஒரு நடிப்பு பள்ளி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதற்கு கேபி, "சினிமா ஃபேக்டரி தியேட்டர்" என்ற பெயர் வைத்திருக்கிறார்.
அதன்மூலம் 20 பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக உயர்ந்திருக்கிறார். நேற்று மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தை ஒட்டி தன்னுடைய சொந்த நடிப்பு பள்ளியை ஆரம்பித்து இருப்பதை பற்றி இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். அது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications