இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி? வேற கதையே இல்லையா? சுந்தரி சீரியல் "பரிதாபங்கள்”.. திட்டும் ரசிகர்கள்

சுந்தரி சீரியலின் கதையை ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் மார்ச் 14-வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கார்த்திக் செய்த இரண்டாவது திருமணத்தால் சுந்தரி வீட்டில் ஒவ்வொருத்தராக ஹாஸ்பிடலுக்கு போய்க்கொண்டிருப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தொடர்ந்து சுந்தரி சீரியலில் அரச்ச மாவையே அரைக்கிறார்கள் என்று ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.

சுந்தரியின் சோதனை

சுந்தரியின் சோதனை

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஒரு கிராமத்தில் இருக்கும் பெண், தான் படித்து சாதிக்க வேண்டும் என்று இருக்கும் நிலையில் அவருக்கு எதிர்பாராத விதமாக திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்க்கை இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த பெண்ணிற்கு அந்த திருமண வாழ்க்கையே ரணமாக மாறிவிடுகிறது. தன்னுடைய கணவர் தன்னை பிடிக்காமல் அவமானப்படுத்துகிறாரே என்று வேதனையில் இருக்கும் அந்தப் பெண்ணிற்கு அடுத்ததாக அந்தப் பெண்ணின் கணவர் வேறு திருமணம் செய்து இருப்பது தெரிய வருகிறது.

கணவரின் துரோகம்

கணவரின் துரோகம்

தனக்கு கணவர் துரோகம் செய்தாலும் தான் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று வீராப்போடு இருந்த சுந்தரியை ஆரம்பத்தில் ரசிகர்கள் அதிகமாக ரசித்தார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சுந்தரி சீரியலில் அதிகமான அழுகாச்சி சீன்கள் தான் ரிப்பீட் ஆகிக் கொண்டே இருக்கிறது. சுந்தரிக்கு அடைக்கலம் கொடுத்த அனு நன்றாக இருக்க வேண்டும் என்று சுந்தரி தன் கணவர் தான் கார்த்திக் என்ற ரகசியத்தை மறைத்து வைத்துக் கொண்டு இருந்தாலும், அணுவின் அம்மா அந்த ரகசியத்தை கண்டுபிடித்து மருமகன் கார்த்திக்கை அடிக்கடி மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இந்த விஷயம் அனுவிற்க்கு தெரிந்து விட்டால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயந்து இவர்கள் செய்யும் செயலால் அடுத்தடுத்து சுந்தரியின் வீட்டில் மரணமும் பிரச்சனையும் வந்து கொண்டே இருக்கிறது.

தொடரும் பிரச்சனை

தொடரும் பிரச்சனை

கார்த்திக் சுந்தரியை விட்டு விட்டு அனுவை திருமணம் செய்த ரகசியம் தெரிந்த கார்த்திக்கின் அப்பா கார்த்திக்கிடம் சண்டை போடும்போது தான் திடீரென கீழே விழுந்து ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அவரை தொடர்ந்து சுந்தரியின் அம்மாவிற்கும் கார்த்திக்கின் ரகசியங்கள் எல்லாம் தெரிந்ததால் கார்த்திக்கின் சட்டையை பிடித்து சுந்தரியின் அம்மா சண்டையிட அப்போது கார்த்திக் சுந்தரியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது அதனால் தான் நான் அனுவை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியதால் அந்த அதிர்ச்சியில் சுந்தரியின் அம்மாவுக்கு மயக்கமாகி விழுந்து விட இப்போது அவருக்கும் பேச்சு வராமல் ஆகிவிட்டது .

ரசிகர்களின் கணிப்பு

ரசிகர்களின் கணிப்பு

இன்னும் எத்தனை பேர்தான் இந்த ரகசியம் தெரிந்து இறந்து போக போகிறார்களா அல்லது இப்படி மருத்துவமனையில் பேஷண்டாக மாறப் போகிறார்களா? என்று தெரியவில்லை. ஒரு பக்கம் அனுவிற்கு தெரிந்து விடக்கூடாது என்று மொத்த பிரச்சனையும் சுந்தரி அனுபவித்துக் கொண்டிருக்க, சுந்தரியை தொடர்ந்து தப்பாக அனு நினைத்துக் கொண்டிருக்கிறார். இனி அனுவிற்கு எப்போது உண்மை தெரிந்து போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில், அனுவிற்கு உண்மை தெரிவதற்குள் இந்த சீரியலில் மொத்த குடும்பமும் இறந்துவிடும் என்று ரசிகர்கள் திட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தினமும் இந்த சீரியலில் அழுகாசி சீன்கள் மட்டும் தான் ரிப்பீட் ஆகிக்கொண்டே இருக்கிறது. இந்த சீரியலில் அனு கர்ப்பமாக இருப்பது போன்று காட்டி இதோடு 14 வது மாதம் தொடங்கிவிட்டது என்றும் அவருக்கு இப்ப வரைக்கும் குழந்தை பிறக்கவில்லையே என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறனர். சுந்தரி வீட்டில் இருக்கும் மொத்த குடும்பமும் இறந்து போன பிறகு தான் அனுவிற்கு குழந்தை பிறக்கும் என்று ரசிகர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+