மனசாட்சியே இல்லையா..? இது கூட கவனிக்கவில்லையே? சுந்தரி சீரியலை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
சுந்தரி சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் பிரச்சனைகளை பார்த்து ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் மார்ச் 8ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதை நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள்.
சுந்தரி அனுவிற்க்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று கார்த்திக் தன்னை திருமணம் செய்த விஷயத்தை மறைத்து வருகிறார்.
இதனால் சுந்தரியின் வீட்டில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் விறுவிறுப்பான கதை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியல் எந்த அளவிற்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறதோ அதே அளவிற்கு ரசிகர்களால் வெறுக்கவும் படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இந்த சீரியல் கிராமத்தில் இருந்து ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு வந்த நிலையில் தன்னுடைய கணவர் தன்னை பிடிக்கவில்லை என்று கூறி இன்னொரு பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்திருக்கும் செய்தி தெரிந்த பிறகு அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகளை ரசிகர்கள் ரசித்து வந்தனர். அதுவும் ஆரம்ப கட்டத்தில் சுந்தரி ஐஏஎஸ் படிப்பதற்காக பல போராட்டங்களை தாண்டிக் கொண்டிருந்தார். இதையும் பலர் பாராட்டிக் கொண்டிருந்தனர்.

அடுத்தடுத்து இழப்புகள்
ஆனால் சுந்தரி சீரியலில் சமீப காலமாக கதை அரச்ச மாவையே அரைக்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தப்பட்டு புரோமோகளில் திட்டி கமாண்டுகளால் நிறைத்து வருகிறார்கள். காரணம் அடுத்தடுத்து சுந்தரிக்கு இழப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. அனு கர்ப்பமாக இருப்பதால் அனுவிற்கு கார்த்திக் தான் தன்னுடைய கணவர் என்ற ரகசியத்தை சொல்லாமல் சுந்தரி மறைத்து வருகிறார். இதனால் அடுத்தடுத்து சுந்தரிக்கு தான் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கார்த்திக்கின் அப்பாவிற்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்து அவர் கொஞ்சம் பிரச்சனைகள் செய்து வந்த நிலையில் திடீரென்று அவரும் இறந்து விட்டார்.

அடுத்து சுந்தரி அம்மா தான் டார்கெட்
அதைத்தொடர்ந்து தற்போது சுந்தரியின் அம்மாவிற்கும் கார்த்திக் பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிந்திருக்கிறது. உண்மை தெரிந்து சுந்தரியின் அம்மா மயக்கம் போட்டு விழுந்த நிலையில் அவரை கூட்டிக்கொண்டு இன்றைய பிரமோ வில் சுந்தரி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் இருந்தபடியே அவருடைய ஹவுஸ் ஓனருக்கு போன் பண்ணுகிறார். அப்போது என்னுடைய ஆத்தா மயக்க போட்டு விழுந்தது இன்னும் முழிக்கவே இல்லை என்று அழுதபடியே சுந்தரி சொல்ல, ஏன் இப்படி அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறது என்று அந்த ஹவுஸ் ஓனர் அம்மா கேட்க? அதற்கு நான் அதை பத்தி சொல்லல அக்கா என்று சில ரகசியங்கள் பேசுகிறார். தற்போது இதைப் பார்த்து ரசிகர்கள் திட்டி வருகிறார்கள். அனு மட்டும் நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று சுந்தரி வீட்டில் அடுத்தடுத்து அனைவரும் இறந்து போக சுந்தரி காரணமாக இருக்கப் போகிறாரா என்று கலாய்கின்றனர்.

மிரட்டும் அனு
அதுமட்டுமல்லாமல் நீ சொன்னதெல்லாம் உண்மை என்று இப்போ ப்ரூப் பண்ணு என்று அனு கார்த்திக்கிடம் மிரட்டிக் கொண்டு, வா இப்போ சுந்தரி வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். இந்த நிலையில் அனு நல்ல நிலையில் தான் ஸ்ட்ராங்காக இருக்கிறார் ஆனால் இந்த சுந்தரி அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். எப்போதும் அனுவை காப்பாற்றுவதற்காக போராட வேண்டுமா? என்று அதிகப்படியான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. ஆனாலும் இந்த சீரியல் ப்ரோமோ வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் 4.1கே லைக் கிடைத்திருக்கிறது.
-
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications