உடைந்த சிம்பு மனசு.. டூரிஸ்ட் ஃபேமிலி ரூ.4 கோடி சக்சஸ்.. தக் லைஃப் பெயிடு புரமோஷன் செய்தும்: பிரபலம்
சென்னை: தவறான விமர்சனம் செய்து, ஒரு நல்ல படத்தை தோற்கடிக்க வைக்கவும் முடியாது.. எந்த காலத்திலும் நல்ல படங்கள் தோற்றதே கிடையாது.. இதுதான் நிஜம்.. ஒரு நல்ல படமாக இருந்தால், அதுவே தனக்கான விளம்பரத்தை தேடி கொள்ளும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்துள்ளார்.. பேட்டி ஒன்றில் இதுகுறித்து விரிவாகவும் பேசியிருக்கிறார் தயாரிப்பாளர். இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் திரைப்படத்தை விமர்சிப்பவர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்றது.. ஒரு பக்கம் யூடியூப்களின் சினிமா விமர்சனம் செய்பவர்களும், மறுபக்கம் அவர்களின் விமர்சனங்களில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டுபவர்களும் என இரு தரப்பு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

இதில், விமர்சகர்கள் பெரிய நடிகர்களின் ரசிகர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் பாசிட்டிவான விமர்சனங்கள் வழங்க பணம் தரப்படுவது (Paid Promotion) பற்றியும் பேசப்பட்டது. இதுகுறித்த பரபரப்பும், விவாதமும் இன்னமும் அடங்கவில்லை.
சித்தரித்து தோல்வி படம்
சுமாரான படத்தை, paid promotion செய்து, நல்ல படமாக சித்தரித்து வியாபாரம் செய்துவிட்டார்கள் என்று ஒருபுறமும், மிகப்பெரிய படங்களை paid review செய்து, தோல்வியடைய செய்வதாக மறுபக்கமும் விவாதம் வெடித்துள்ள நிலையில், AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு தந்த பேட்டியில் பாலாஜி பிரபு தன் கருத்தை சொல்லி உள்ளார்..
அதில், "ஒரு நல்ல படத்தை பணம் தந்து, ஓடவிடாமல் செய்ய முடியும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.. காரணம் அந்த படம் நேரடியாகவே தியேட்டருக்கு வருகிறது.. மக்கள்தான் படத்தை பார்த்து முடிவு செய்ய போகிறார்கள்.. படம் மோசமாக விமர்சனம் செய்யப்படுகிறது என்பதற்காக மட்டுமே அந்த படம் ஓடாமல் போய்விடாது..
தவறான விமர்சனம் செய்து, ஒரு நல்ல படத்தை தோற்கடிக்க வைக்கவும் முடியாது.. எந்த காலத்திலும் நல்ல படங்கள் தோற்றதே கிடையாது.. இதுதான் நிஜம்.. ஒரு நல்ல படமாக இருந்தால், அதுவே தனக்கான விளம்பரத்தை தேடி கொள்ளும்..
பெயிட் புரமோஷன்
விமர்சனங்கள் தவறாக இருந்தாலும்கூட, ஒரு நல்ல படத்தின் வெற்றியை தடுக்க முடியாது.. உதாரணத்துக்கு தக் லைஃப் படத்தை எடுத்துக் கொண்டால், PAID PROMOTION செய்தார்கள். 400 யூடியூப் நபர்களை அழைத்து வந்து, மகாபலிபுரம் ரிசார்ட்டில் தங்க வைத்து, கமல், சிம்பு கலந்து கொண்டு, ஒரு பெரிய நிகழ்ச்சியே செய்தார்கள்..அந்த 400 பேருக்கும் பணம் தந்தார்கள்.. அதுதான் உண்மை..
அப்படியானால் அந்த 400 பேரும், படத்தை பற்றி நல்லாதானே புரமோஷன் செய்து பேசியிருப்பார்கள்? ஆனால் முதல்நாளே படம் நன்றாகயில்லை என்று மக்கள் சொன்னார்களே ஏன்? 400 பேர் படத்தை பற்றி நன்றாக பேசியிருந்தும், அதை வைத்து ஏன் மக்கள் படத்தை பாராட்டவில்லை? ஏன் படம் ஓடவில்லை?
டூரிஸ்ட் ஃபேமிலி, ரெட்ரோ
சூர்யாவின் ரெட்ரோ படத்தின்போதுதான், டூரிஸ்ட் ஃபேமிலி படமும் வெளியானது.. 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டது டூரிஸ்ட் ஃபேமிலி .. இத்தனைக்கும் சசிகுமாருக்கு மார்கெட் இல்லை, சிம்ரனுக்கு ஃபீல்டிலேயே இல்லை.. ஆனால் படம், மக்களுக்கு பிடித்திருந்தது.. யாருமே ஒரு படத்தை நெகட்டிவ் புரமோஷன் செய்து தோற்கடிக்கவும் முடியாது, பாசிடிவ் புரமோஷன் செய்து வெற்றி பெற வைக்கவும் முடியாது..
சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் வந்தாலும், யார் சரியாக விமர்சனம் செய்வார்கள், செய்ய மாட்டார்கள் என்பதை மக்களே நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்..படம் நல்லா இல்லை என்று நெகட்டிவ் விமர்சனத்தை முன்வைக்கும்போது, பொதுமக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கவே தயங்குகிறார்கள் என்ற குமுறலை தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் சொல்கிறார்கள்.. தயாரிப்பாளர்களின் வருத்தம் நியாயமானதே..
ப்ளூ சட்டை மாறன்
எனினும், விமர்சனங்கள் செய்பவர்கள் தங்களது கருத்தை முன்வைக்கிறார்கள்.. தங்களின் கருத்திலிருந்து நல்லது, கெட்டதை பிரித்து பேசுகிறார்கள்..
உதாரணத்துக்கு, ப்ளூ சட்டை மாறன் விமர்சனமானது, பலரது எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. ஒரு படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறன் சொல்கிறார்.. நன்றாக இருக்கும் படங்களை, நல்லாவே இல்லை என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை.. தன் கருத்தை ஒருவர் சொல்வதை, எப்படி தவறு என்று சொல்ல முடியும்?
அதுவும் இல்லாமல் ப்ளூ சட்டை மாறன் போன்றோர் விமர்சனங்களை மக்களே எதிர்பார்க்கிறார்கள்.. ஒரு படத்தை 2 நாள் கழித்து விமர்சனம் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள்.. ஆனால் 2 நாளில், சில படங்களே தியேட்டரில் இருப்பதில்லை..
உண்மை கசக்கிறது
பல நேரங்களில் விமர்சனங்கள்கூட, பல படங்களை நன்றாக ஓடவைத்திருக்கிறது.. எத்தனையோ சின்ன படங்கள், நல்ல நல்ல விமர்சனங்களால் நன்றாகவே ஒடியிருக்கிறது.. அப்படியிருக்கும்போது, மாஸ் ஹீரோக்களை வைத்து, கமர்ஷியல் மசாலா படம் எடுத்தால் எப்படி? அடிதடி, பழிவாங்குதல், துப்பாக்கி சூடு, வெட்டுகுத்து, என ஒரே பாணி படங்களை எடுத்து கொண்டிக்கிறார்கள்.. இந்த உண்மையை ஒருவர் விமர்சித்தால், இவர்களுக்கு கசக்கிறது.. அது வியாபாரத்தை பாதிக்கத்தான் செய்யும்..
முதலில் விமர்சனத்தை ஏற்கக்கூடிய மனப்பக்குவம் வேண்டும்.. சினிமாவை விமர்சிக்கலாமே தவிர, சினிமாவில் நடித்தவர்களை பற்றிய தனிநபர் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
சிம்பு, திரிஷா
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த பாலாஜி பிரபு, தக் லைஃப் படத்தில் இந்த கேரக்டரில் திரிஷாவை ஏன் நடிக்க வைத்தார்கள்? திரிஷாவை இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது" என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. அதனால், ஏன்தான் இந்த கேரக்டரில் நடித்தோம் என்று திரிஷாவும் புலம்பி தவிப்பதாகவும், தூக்கத்தையே தொலைத்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.
அதேபோல, செவனேன்னு இருந்த சிம்புவை கூட்டிட்டு போய் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம்.. இப்போது மீண்டும், உங்களுக்காக கதையை டெவலப் பண்ணியிருக்கேன் என்று சொல்லி நடிக்க வைத்துள்ளார்.. இத்தனைக்கும் நிறைய முயற்சிகளை இந்த படத்தில் தந்திருந்தார் சிம்பு.. முதல் நாள் இந்த படத்தை பார்த்துவிட்டு, அப்போதே துபாய்க்கு கிளம்பிவிட்டார்" என்று தக் லைஃப் பட தோல்வி குறித்து பாலாஜி பிரபு கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications