பார்த்ததும் காதல்... வீட்டில் தெரிந்ததும் திடீர் நிச்சயதார்த்தம்.. பாடகி அனுராதாவின் திருமண ரகசியங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி அனுராதாவின் சொந்த திருமண வாழ்க்கையில் நடை பெற்ற பல சுவாரசிய தகவல்களை முதல் முறையாக பகிர்ந்து இருக்கிறார்.

அமெரிக்காவில் முதல் முறையாக சந்தித்த நபரையே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அனுராதாவும் அவருடைய கணவரும் இல்லாமல் அவருடைய நிச்சயதார்த்தம் பெரியோர்களின் முன்னிலையில் நடைபெற்று இருக்கிறது.

ஆரம்ப காலம்

ஆரம்ப காலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் அனுராதா ஸ்ரீராம் பலருடைய ஃபேவரிட் பாடகியாக இருந்து வருகிறார். கண்களை மூடி ரசிக்கும் பாடல்களாக இருந்தாலும் சரி, குத்தாட்டம் போடும் பாடல்களாக இருந்தாலும் சரி தன்னுடைய இனிமையான குரலால் அனைவரையும் கவர்ந்து இழுத்து வைக்கும் அனுராதா இதுவரைக்கும் 90க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார். ஆறு வயதாக இருக்கும் போதே இசை பயிற்சியை தொடங்கிய அனுராதா காளி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார். அமெரிக்காவிலும் பல இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி கச்சேரிகளில் செய்திருக்கிறார்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

அனுராதா சமீபத்தில் தன்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அது ரசிகர்கள் பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய கண்டிப்பையும் ,கருத்தையும் சிரித்த முகமாகவே எடுத்து வைக்கும் இவருடைய வாழ்க்கையில் காதல் திருமணம் பெரிய ஒரு எதிர்பார்க்காத நிகழ்வாக நடைபெற்று இருக்கிறதாம். அனுராதா ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் தான் சந்தித்து இருந்தார்களாம். அங்கு தமிழ் தெரிந்த ஒரு நபர் புதியதாக வருபவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்ரீராமை போட்டிருந்தார்களாம். அப்போதெல்லாம் இன்டர்நெட் கிடையாதுதால் கடிதம் தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து கடிதம் வந்ததும் அதனை அனுராதாவின் அப்பா படித்துவிட்டு ராமரிடம் இருந்து கடிதம் வந்துவிட்டது என கூறி இருந்தாராம்.

பிடித்துப் போன தருணம்

பிடித்துப் போன தருணம்

அனுராதா அவருடைய கணவரை சந்தித்து மூன்றாவது மாதமே ஒரு கச்சேரி அங்கே நடந்திருக்கிறது. அப்போது அவருடைய வீட்டிற்கு அனுராதா சென்றிருந்தாராம். அங்கே ஸ்ரீராம் அவருடைய அப்பா, அம்மா,அக்கா, தம்பி எல்லோரும் அமர்ந்து பாட்டு பாடி கொண்டிருந்தார்களாம். அப்போது அனுராதா அங்கே சென்றபோது அவரையும் அமர வைத்து பாட்டு பாட சொன்னார்களாம். இதுதான் அனுராதாவின் முதல் இம்ப்ரஸர். ஏனென்றால் ஒரு பெண் பாடல் துறையில் வெற்றியடைய வேண்டும் என்றால் கண்டிப்பாக குடும்பத்தினரில் ஒத்துழைப்பு தேவைப்படும் ஆனால் இவர்களுடைய வீட்டில் இருப்பதை பார்த்தது இவருக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். அந்த நேரத்தில் இருந்து தான் ஸ்ரீராம் மீது அனுராதாவுக்கு காதல் ஏற்பட தொடங்கியதாம்.

பொருத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை

பொருத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை

அப்படியே சில நாட்கள் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நாள் அனுராதாவே தன் உடைய காதலை ஸ்ரீராமிடம் கூறிவிட்டாராம். அதற்குப் பிறகு ஸ்ரீராமின் அப்பா வந்து இவரிடம் பேசி சோதனை செய்தாராம். ஆனால் இவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருக்கும்போதே இவர்கள் இருவருடைய குடும்பமும் மும்பையில் சந்தித்து நிச்சயதார்த்தம் செய்து விட்டார்களாம். ஆனால் இவர்களுடைய திருமணத்தில் ஜாதகத்தில் இருக்கும் 10 பொருத்தத்தில் இரண்டு பொருத்தங்கள் மட்டும்தான் இருந்ததாம். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருப்பதாக இவர் மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+