+2 தேர்வில் சூப்பர் சிங்கர் பாடகி ஹர்ஷினி அசத்தல்.. அரசு பள்ளியில் படித்து மாஸ் காட்டிட்டாரே!
சென்னை: தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் பல மாணவர்களின் சாதனைகளை வெளிப்படுத்தியுள்ளன. அந்த வரிசையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஹர்ஷினி நேத்ராவும் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

சூப்பர் சிங்கர் ஹரிணி +2 மதிப்பெண்
தனது தேர்வு முடிவுகளை அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, ஹரிணி நேத்ரா மொத்தம் 556 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தனிப்பட்ட பாட வாரியாக பார்க்கும்போது:
தமிழ் - 96
ஆங்கிலம் - 89
புள்ளியியல் - 100
பொருளாதாரம் - 86
வர்த்தகம் - 89
கணக்குப்பதிவியல் - 96
என சிறப்பான மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குறிப்பாக புள்ளியியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
அரசு பள்ளி மாணவி
'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்குப் பிறகு ஹர்ஷினி நேத்ரா பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி ரசிகர்களை கவர்ந்து வந்தார். பாடல் பயணத்துடன் படிப்பையும் சமநிலைப்படுத்தி இவ்வளவு உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பது பலரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.
மேலும், அவர் அரசு பள்ளியில் படித்து இந்த அளவுக்கு மதிப்பெண் எடுத்திருப்பது, "அரசுப் பள்ளி மாணவர்களும் முயற்சி செய்தால் பெரிய சாதனைகள் செய்ய முடியும்" என்பதற்கான உதாரணமாக பார்க்கப்படுகிறது.
குவியும் வாழ்த்துக்கள்
சமூக வலைதளங்களில் அவரது பதிவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கலை மற்றும் கல்வி - இரண்டிலும் திறமையை நிரூபித்துள்ள ஹர்ஷினி நேத்ரா, இளம் தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக மாறியுள்ளார். அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் மொத்தம் 7.91 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த மார்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6 முதல் 20 வரை மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று, இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்த்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இருந்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 95.20% ஆக பதிவாகியுள்ளது. மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்துள்ள நிலையில், மாணவர்கள் 93.19% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் மாணவிகளை விட மாணவர்கள் 3.82% குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளி வாரியாக பார்க்கும்போது:
அரசுப் பள்ளிகள் - 92.16%, அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.14%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.72%. இதில் பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 6.59% அதிகமாகவும், இருபாலர் பள்ளிகள் 4.81% அதிகமாகவும் தேர்ச்சி பெற்றுள்ளன.
பாட வாரியாக தேர்ச்சி விகிதமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல் போன்ற முக்கிய பாடங்களில் 98% முதல் 99% வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications