6 வருஷத்திற்கு பிறகு விஜய் டிவிக்கு வந்த விஜே.. இனி பிரியங்காவிற்கு பதில் சூப்பர் சிங்கரில் இவரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பல வருடங்கள் கழித்து விஜே பாவனா மீண்டும் தொகுப்பாளராக வந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக விஜய் டிவியை விட்டு விலகி இருக்கும் பாவனா சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 பைனல் ரவுண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த நிலையில் இப்போது மீண்டும் பாவனா வந்திருப்பதால் பிரியங்கா இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டாரா? என்ற கேள்விகள் எழுகிறது.

விஜய் டிவியில் புதியது புதியதாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. அதில் 2007 ஆம் ஆண்டு முதல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வரும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி ஜூனியர் சீனியர் என்று ஆண்டுதோறும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் இப்போது வரைக்கும் ஜூனியர் 9 சீசன் வரை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவரின் காம்போவிற்க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால் பிரியங்காவிற்கு முன்பு மாகாவோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது விஜே பாவானா தான். பிறகு இடையில் பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறி இருந்தார்.
இதனால் கடந்த ஆறு வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பாவனா வரவில்லை. அதே நேரத்தில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல பிரபலமாகவே பாவனா இருந்து வந்தார். அடிக்கடி போட்டோ சூட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். அப்போது அவரிடம் நீங்கள் எப்போதும் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவீர்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ப்ரீ இறுதிசுற்று நடக்க இருக்கும் நிலையில் பிரியங்காவிற்கு பதில் இந்த வாரம் விஜே பாவனா தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில் இனி பிரியங்காவிற்கு பதிலாக பாவனா தான் தொடர்வாரா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

அதே நேரத்தில் ஒரு வேலை விஜய் டிவியில் இருந்து விலகி விட்டாரா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒரு வழியாக ஆறு வருடமாக விஜய் டிவியை விட்டு விலகிப் போயிருந்த பாவனா மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனாலேயே பலர் உங்களுக்காகவே இந்த வாரம் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்று கமெண்ட்களை கொட்டுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications