சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்.. எந்த நிகழ்ச்சி தெரியுமா? ஆரம்பமே அசத்தல் தான்
சென்னை: நடிகர் மைக் மோகன் பல வருடங்கள் கழித்து "ஹரா" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் மைக் மோகன் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான பாராட்டுகளை பெற்று வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் தான் மைக் மோகன் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுத்திருக்கிறார். விஜய் டிவியில் கடந்த வாரத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தேவா ஹிட்ஸ் ஒளிபரப்பானது. இது மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று உள்ளது.

தேவாவின் பாடல்கள் பலவற்றை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாடியிருந்தனர். அதுபோல தேவாவும் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதனாலேயே ரசிகர்கள் தொடர்ச்சியாக இது போன்ற பிரபலங்களை விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த வேண்டும் அவர்கள் பற்றி பல விஷயங்களை இந்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியின் இந்த வரம் யுவன் கிட்ஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் சிறப்பு விருந்தினராக மைக் மோகன் கலந்து கொண்டிருக்கிறார். அவரை நிகழ்ச்சியில் பிரியங்கா வழக்கம் போல படு பயங்கரமான எனர்ஜியோடு வரவேற்று இருக்கிறார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு என்று சொல்லி அங்கிருந்த பாடகர் மனோவை கட்டிப்பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்த நிலையில் எல்லோரும் கைதட்டி அவருக்கு வரவேற்பு கொடுத்து கொண்டிருக்கும் போது ஒரு குட்டி குழந்தைக்கு அருக்காணி வேஷம் போட்டு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
அந்த குழந்தையை பார்த்ததும் மோகன், "அருக்காணியை ஐடென்டிஃபிகேஷன் பண்ணிட்டு ராதாவை ஐடென்டிஃபிகேஷன் பண்ணாம போயிட்டேனே என்று எனக்கு பீலிங்கா இருக்கு" என்று கலகலப்பாக மோகன் பேச அதைக் கேட்டு ஒட்டுமொத்த அரங்கமும் சந்தோஷத்தில் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர்.
அதே நேரத்தில் இதுவரைக்கும் திரைப்படங்களில் மோகனுக்கு டப்பிங் குரல் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அவருடைய ஒரிஜினல் குரலை கேட்டதும் இதுதான் மோகனின் ஒரிஜினல் குரலா? என்று பலர் வியப்பாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் மோகனுக்காகவே இந்த வார எபிசோட்டை பார்க்கலாம் என்று ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
இன்னும் அதிகமான ரசிகர்கள் பல வருடங்கள் கழித்து மோகனை திரையில் பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். அது போல சில ரசிகர்கள் மைக் மோகனுக்கு பல வருடம் கழித்து மீண்டும் மைக் கிடைத்து விட்டது... இந்த முறையாவது நிஜத்தில் பாடுவாரா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அதோடு பாடகர் மனோ மோகனுக்காக "உதயகீதம்" திரைப்படத்தில் இடம் பிடித்த "சங்கீத மேகம் தேன் சிந்தும் வேலை" என்ற பாடலை பாடி இருக்கிறார்.
இந்த பாடலை மோகன் "உதயகீதம்" திரைப்படத்தில் தத்ரூபமாக அவரே பாடுவது போன்று ஆக்டிங் செய்து பலரையும் கவர்ந்திருப்பார். அது போல இந்த பாடலில் இடம் பிடித்த பல வரிகள் மக்கள் மனதில் இப்போதும் இடம் பிடித்தது தான். அதிலும் "போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே" என்ற வரிகள் வாழ்க்கையின் பயணத்தை அடையாளப்படுத்தும்.
அது போல இதே பாடலில் இடம் பிடித்த, "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என்ற வரிகள் இந்தப் பாடலை பாடிய எஸ் பாலசுப்பிரமணியனுக்கு உருத்தானதாக தோன்றும். அவருடைய உடல் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய பாடல் இசையாய் எல்லா இடங்களிலும் மலர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை மையப்படுத்தி மோகன் முன்பு பாடகர் மனோ "சங்கீத மேகம்" பாடலை பாடியிருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications