முன்னணி ஹீரோவுடன் நயன்தாரா நெருக்கம்? அதைவிடுங்க, சூப்பர் ஸ்டார் சொன்னது 100% சரி: பிரபலம் நச்
சென்னை: என்னதான் லேடி சூப்பர் என்றாலும், கல்யாண ஆவண படம் வெளியிட்டு சீன் போட்டாலும், நயன்தாராவின் வாழ்க்கையே, பல பெண்களின் கண்ணீரில்தான் உள்ளது.. இதை நயன்தாரா முதலில் உணரவேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா காட்டமாக தெரிவித்துள்ளார்.
BBTCinema யூடியூப் சேனலுக்கு, சேகுவேரா தந்துள்ள பேட்டியில், "அண்ணா பல்கலை மாணவி வழக்கை, அரசியலாக்கிவிட்டார்கள்.. இதுகுறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அரசியல் கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்று ரஜினி சொல்லியிருக்கிறார்.. ரஜினி இப்படி பதிலளித்தது சரியானதுதான்.

சூப்பர் ஸ்டார்: காரணம், ரஜினிக்கு 75 வயதாகிறது.. அவர் இந்த வயதில் அவர் படங்களில் நடிப்பதே பெரிய விஷயம்.. ஆனால், அவர் பணத்தாசையால் இப்போது சினிமாவில் நடிக்கவில்லை.. அவரிடம் இல்லாத பணமா? ஆனால், உழைக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறார்.
அன்று ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று சீமான் சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது அரசியல் பேச்சை சீமான் எடுத்தபோதுகூட, அரசியல் பேச வேண்டாமே என்று சீமானிடம் சிரித்து கொண்டே சொன்னாராம் ரஜினி.. இதை சீமானும் உறுதிபடுத்தியிருக்கிறார்.
மன உளைச்சல்: ரஜினிக்கு இதயத்தில் ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது, கிட்னியில் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது.. பலவித மன உளைச்சல்களில் உள்ளார்.. இப்படிப்பட்ட நேரத்தில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதே பெரிய விஷயம். அவர் நினைத்திருந்தால், இந்த சந்திப்பை அவர் தவிர்த்திருக்கலாம்.
எத்தனையோ பேர் இன்னமும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசாமலேயே உள்ளனர்.. அவ்வளவு ஏன், ஆளுநரை சந்தித்துவிட்ட வந்த விஜய், இன்னமும் செய்தியாளர்களை சந்திக்காமல் இருக்கிறார்.
திமுக விழா: ஆனால், ரஜினியோ, இப்போதுவரை செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.. எனினும், அரசியலில் அவருக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களால், தற்போது அரசியலை பேச வேண்டாம் என்று நினைக்கிறார். சமீபத்தில்கூட திமுக விழாவில் துரைமுருகன் பேசியிருந்தது ரஜினிக்கு பாதிப்பை தந்திருக்கலாம்.. இந்த விஷயம் முதல்வர் ஸ்டாலின் வரை சென்றுள்ளது.. ரஜினி பற்றி துரைமுருகன் மேடையில் பேசியிருந்தது, முதல்வருக்கும் வருத்தத்தை தந்ததாக சொன்னார்கள்.
அதுமட்டுமல்லாமல், அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தை நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.. தேசிய மகளிர் அமைப்பு விசாரித்து கொண்டிருக்கிறது. எல்லாம் சரியாக நடந்துவரும்போது, இதிலென்ன ரஜினி கருத்து சொல்ல முடியும்?
சங்கடத்தில் மனம்: தான் எது பேசினாலும் அதை சோஷியல் மீடியாவில் டிரோல் செய்வதால், அவரது மனம் சங்கடப்படுகிறது. மேலும், இந்த வயதில், எல்லாருடனும் இணக்கமாக செல்லவே அவர் விரும்புகிறார். எனவே, அரசியல் விவகாரங்களை ரஜினி தவிர்க்க நினைப்பது சரியான விஷயம்தான்.
அதேபோல, "சிவாஜி புரொடக்ஷனுக்கும், நயன்தாராவுக்கும் பிரச்சனை துவங்கியிருக்கிறது.. சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த சந்திரமுகி படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அதற்குரிய பணத்தையும் அப்போதே வாங்கிவிட்டார். அத்துடன் அப்படத்துடனான உரிமை நயன்தாராவுக்கு முடிந்துவிட்டது.. ஆனால், அந்த படத்திலிருக்கும் சில காட்சிகளை தன்னுடைய, திருமண ஆவண படத்துக்காக பயன்படுத்தி கொண்டுள்ளார் நயன்தாரா.. இதற்கான அனுமதியை பிரபுவிடம் ஏன் கேட்கவில்லை?
ஆவண படம்: ஒரு படத்தில் நடித்துவிட்டதாலேயே, உரிமையை எடுத்துக் கொள்ள முடியாது. திருமண ஆவண படத்தை இலவசமாக வெளியிடவில்லையே? அதுக்கும் காசு வாங்கியாச்சே நயன்தாரா? நீங்க மட்டும் முறைப்படி காசு வாங்கிக்கிட்டீங்க? சிவாஜி புரொடக்ஷன்கிட்ட முறைப்படி அனுமதி கேட்கணும்தானே? தனுஷை அன்னைக்கு அவ்ளோ குறை சொன்னீங்க.. பிரபுவை அப்படி சொல்ல முடியுமா?
எத்தனையோ பெண்களின் கணவர்களுடன், லிவிங் டூ கெதரில் நயன்தாரா இருந்தார்.. பல பெண்களின் கணவர்களை ஆட்டைய போட்டாங்க.. அதுக்காக அந்த மனைவிகள், நயன்தாராவின் தலைமுடியை பிடித்து சண்டை போட்டார்களா? அத்தனை பெண்களும், தங்கள் கணவர்களை விட்டு விலகிதானே போனார்கள்.. சிலர் டைவர்ஸ்கூட செய்துவிட்டார்கள். உரிமையானவர்கள் எல்லாம் கணவன்களை விட்டு அன்று விலகி சென்றுவிட்டுதால், சினிமாவையும் அதேபோல நயன்தாரா எடுத்து கொள்ள கூடாது
பணத்திமிர்: பணத்திமிரின் அடையாளம் இது.. பணத்திமிரின் வெளிப்பாடு இது.. இதுக்கு காரணம் பல மூத்த நடிகர்களே, நயன்தாராவிடம் ஜொள்ளுவிடுவதுதான். லேடி சூப்பர், நம்முடைய காலுக்கு கீழே எல்லாரும் என்ற நினைப்பு நயன்தாராவுக்கு உள்ளது.. என்னதான் லேடி சூப்பர் என்றாலும், கல்யாண ஆவண படம் வெளியிட்டு சீன் போட்டாலும், நயன்தாராவின் வாழ்க்கையே, பல பெண்களின் கண்ணீரில்தான் உள்ளது.. இதை நயன்தாரா முதலில் உணரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார் சேகுவேரா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications