டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டி ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த சசிகுமார்.. இதுதான் பெருந்தன்மை! செம வரிகள்
சென்னை: இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். இதை சசிகுமார் பெருமையாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் பலரும் சசிகுமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
கடத்த மே ஒன்றாம் தேதி வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் பல தரப்பட்டவர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து வசூல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பட்ஜெட்டை விடவும் அதிக லாபம் சம்பாதித்து இருக்கிறது. அதுபோல இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சசிகுமாருக்கு அதிகமான பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி
சமீபத்தில் அவர் நடித்த அயோத்தி திரைப்படம் சசிகுமாருக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுத்தது. அதேபோல இப்போது டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் சசிகுமார் உடன் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் மற்றும் எம் எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சசிகுமாரை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார். அதை மகிழ்ச்சியுடன் சசிகுமார் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சசிகுமார் பதிவு
சசிகுமார் பதிவில், "படம் சூப்பர் என்று யார் சொன்னாலும் மனம் சொக்கி போகும். ஆனால், சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் என்று சொன்னால் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும்? அயோத்தி, நந்தன் படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்து சூப்பர்ர்ர்... சசிகுமார் என்று அழைத்து சொன்னார். சொல்ல வார்த்தையே இல்லை, அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க. தர்மதாஸாகவே வாழ்ந்து இருக்கீங்க, சொல்ல வார்த்தைகளே இல்ல, பல சீன்களில் கலங்கடிச்சுட்டீங்க, சமீபகாலமாக உங்களுடைய கதை தேர்வு வியக்க வைக்கிறது சசிகுமார்" என்று ரஜினிகாந்த் சொல்ல சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ரஜினியோடு புகைப்படம்
"படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் மனதில் நிறுத்தி அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் டூரிஸ்ட் ஃபேமிலி பட குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம்". "தட்டி கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு இந்த நன்றி ரஜினி சார்" என்று ரஜினியோடு எடுத்த ஒரு புகைப்படத்தையும் சசிகுமார் பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வினியோகஸ்தர் பாராட்டு
அதேபோல டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியான அதே மே ஒன்றாம் தேதி தான் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படமும் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரெட்ரோ திரைப்படத்தை டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வசூலில் முறியடித்து விட்டதாக சமீபத்தில் திரைப்பட விநியோகம் ஸ்ரீதர் என்பவர் பேசியிருந்தார்.
பாராட்டு
ஏற்கனவே சசிகுமார் தன்னுடைய படம் வெற்றி அடைந்தாலும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த மாட்டேன் என்று பேசி இருந்தார். அதை பலரும் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில் இந்த திரைப்படம் தான் கடந்த ஐந்து மாதங்களில் வெளியான திரைப்படங்களில் அதிகமான வரவேற்பை பெறும் திரைப்படமாக இருக்கிறது என்பது பலருடைய பாராட்டாக இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications