ஆனாலும் மொட்டைக்கு இம்புட்டு லொள்ளுத்தனம் ஆகாது..!
சென்னை: பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கதாநாயகனே சுரேஷ் சக்கரவர்த்தி தான். இவரை எல்லாரும் தாத்தா என்றும் மொட்டை சுரேஷ் என்றும் செல்லமாக அழைத்து வருகின்றனர் .
ஆனால் தற்போது இவர் செய்திருக்கும் செயல்தான் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வேற லெவல் பிகு பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் கூட இவருக்கு எதிராக மாறி வருகின்றனர்.
இந்த மாதிரி பல லட்சம்பேர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் இப்படி பண்ணலாமா என்று பலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.

சாதியெல்லாம் தேவையா
எப்பவுமே இந்த வீட்டிற்குள் பிரச்சினைகளை உண்டு பண்ணிக் கண்டன்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது வேற லெவலில் பண்ணிவிட்டார். அவர் எதார்த்தமாக பண்ணினாலும் அவர் பேசிய தாகத்தை புரிந்து கொள்ளாமல் மீண்டும் வீம்பு பிடித்துக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து பலரும் இவருக்கு இது ஓவர் என்று கூறி வருகின்றனர்.

ரசிகர்களுக்குப் பிடிக்கலைப்பா
சிலர் எதிர்த்தும் திட்டி தீர்த்து வருகின்றனர் .ஏற்கனவே இந்த வீட்டிற்குள் வந்த முதல் நாளே கன்டஸ்டன்ட் ஒருவரிடம் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பிறகும் இவர் பல பிரச்சினைகளை உண்டு பண்ணிக் கொண்டிருந்தாலும் இவர் மட்டும் தான் உண்மையாக இருக்கிறார் என்று இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகியது.

சர்ச்சையாவே பேசினா எப்படி
தற்போது மீண்டும் அந்த மாதிரி ஒரு சர்ச்சையான பேச்சை தான் பேசி இவர் அனைவரையும் வாயிலையும் அவுல்லை கொடுத்திருக்கிறார். நேற்று முன்தினம் எபிசோடு 4 மணி நேரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது . முதலில் ஆரம்பித்த நேரத்திலிருந்து சுரேஷ் சக்கரவர்த்தி கலக்கலாக தான் சுற்றிக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் அனைவரையும் கலாய்த்துக் கொண்டும் நன்றாக கேம் விளையாடிக் கொண்டும் இருந்தார்.

கொலுவில் வெடித்த பிரச்சினை
போனவாரம் இவர் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று நன்றாக தான் ஆரம்பித்தார். ஆனால் நிகழ்ச்சி பாதியில் இவர் பேசிய பேச்சுதான் பெரும் கலகத்தில் முடிந்திருக்கிறது .பிக் பாஸ் நேற்று பொம்மைகளை கொடுத்து அதற்கு கலர் செய்து கொலுவில் வையுங்கள் என்று கொடுத்திருந்தது. அனைவரும் நன்றாக கலர் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தனர்.

மஞ்சல் போட்ட அனிதா
அந்த நிலையில்தான் ஒரு பானையில் மஞ்சள் போட வேண்டும் என்று சுரேஷ் சக்கரவர்த்தி முதலில் சுமங்கலிப் பெண்கள் வாங்க என்று கூறினார். அப்போ பக்கத்தில் இருந்த அனிதா போய் முதலில் பானையில் மஞ்சள் தூக்கிப்போட்டார் . பின்பு அனைவரும் போட்டனர். இந்த நிகழ்ச்சி அதோடு முடிந்துவிட்டது என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு பிறகு பட்டிமன்றமும் நடந்தது.

அழகாக பேசிய அனிதா
நிகழ்ச்சியில் மொத்தமாக தொகுப்பாளராக அனிதாதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் பட்டிக்காடா கிராமமா என்றும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது இவர் நகரத்திற்கு பேவராக பேச வருகிறேன் என்று பேசினார். அப்போது கிராமத்தில் இப்ப வரைக்கும் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்கும் பழக்கமும் இருக்கிறது. என்னுடன் பணிபுரிந்த சில கிராமத்து இளைஞர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள்.

தள்ளி வைப்பாங்க
இதற்கு முன்பு நாங்கள் வேலை பார்த்த இடங்களில் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்பார்கள் அதற்கு பிறகு எங்களை அவர்கள் வேற மாதிரி நடத்திருக்கிறார்கள் ஆனால் இங்கு யாருமே கேட்டதில்லை என்று கூறியிருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். அதற்கு அடுத்ததாக கிராமங்களில் இன்றும் கணவனை இழந்த விதவைப் பெண்களை கொஞ்சம் தள்ளி தான் வைக்கிறார்கள்.

சுரேஷும் கூட அப்படித்தான்
இன்று கூட இந்த நிகழ்ச்சியில் சுமங்கலி வாங்க என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூட கூறியிருந்தார் .இதைக் கேட்டதும் கேட்க கூடாததை கேட்டது போல சுரேஷ் சக்கரவர்த்தி மூஞ்சி அப்படியே மாறிவிட்டது. அவர் பேசியதை தான் அனிதா பட்டிமன்றத்தில் கூறியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இந்த மாதிரி அபசகுனமாக பேசக்கூடாது என்று போர்க்கொடி தூக்கி ஆரம்பித்துவிட்டார். அதற்கு பிறகு நடந்த நிகழ்ச்சிகளிலும் இவர் சண்டை வைத்துக்கொண்டுதான் இருந்தார்.

ஹர்ட் பண்ணிட்டாரே
எல்லோரும் சமாதானப் படுத்தியும் சமாதானமாகாத இவரிடம் மீண்டும் அனிதா மன்னிப்பு கேட்க செல்லும்போது கூட அவர் உன் காலில் விழுகிறேன். தயவு செய்து என்னிடம் பேசாதே என்று கூறிவிட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தான் தற்போது இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். யார் என்ன சொன்னாலும் கவலையில்லை என் பக்கம் தான் நியாயம் இருக்கிறது எனக்கு சப்போர்ட்டுக்கு நீங்கள் வாருங்கள் நீங்கள் வாருங்கள் என்று இவர் கன்டஸ்டன்ட் ஒவ்வொருரிடமாக கூறிக் கொண்டிருக்கிறார் .

இதெல்லாம் ஓவர் மொட்டை சார்!
இதை பார்த்து தான் இருந்தாலும் இந்த மொட்டைக்கு இந்த அளவிற்கு வில்லத்தனம் ஆகாது .பேசுவதையும் பேசிவிட்டு ஒருவர் மன்னிப்பு கேட்க வந்தால் இப்படி பேசுகிறீர்கள் என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இதுவரைக்கும் இருந்த நல்ல பெயரை தற்போது வீராப்பு பிடித்துக்கொண்டு கெடுத்து விடுவாரோ என்று அவருடைய ரசிகர்களும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள் .
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications