இந்த வயசுல இம்புட்டு வில்லத்தனமா.. கடைந்து எடுக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: என்னதான் கத்திக் கதறி கேவிக் கேவி அழுதாலும் மொட்டை சுரேஷ் மீதான எரிச்சல் சிலருக்கு இன்னும் போகவே இல்லைங்க.
இந்த சுரேஷ் மட்டும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து இப்ப வரைக்கும் நல்லா பண்ணி கொண்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது தற்போது இவர் செய்த செயலைப் பார்த்து இவரா இப்படி எல்லாம் இருந்திருக்கிறார்.
இப்படித்தான் அவரை பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள் .அதிலும் கொஞ்சம் ஓவரா போறீங்க என்றெல்லாம் பலரும் கமெண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சுரேஷ் சக்கரவர்த்தி
போட்டின்னு வந்து விட்டா வேற லெவலில் பர்பாமன்ஸ் பண்ணிக் கொண்டிருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி தான் இந்த பிக்பாஸ் 4 சீசனில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வயசானாலும் என்னுடைய வாலிபம் மாறவில்லை குறும்பும் கூடியிருக்கும் என்று அனைவரிடமும் குறும்புபையும் கோபத்தையும் காட்டி எவ்வளவு நல்ல மனுஷன் என்று ரசிகர்கள் கூறுமளவிற்கு வலம் வந்து கொண்டிருந்தார்.

விளக்குமாற்றால் அடி
ஆனால் இப்போ இவர் சனத்துக்கு இவருக்கும் பிரச்சனை இருப்பதை மனதில் வைத்துக் கொண்டு விளையாடும் போது தலையில் விளக்குமாற்றை கொண்டு அடித்திருக்கிறார். அதிலேயும் சனம் கோபமாக திட்டும் போது அவர் ஒய்யாரமாக கட்டிலில் போய் படுத்துக் கொண்டுவிட்டார் .இதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்துொ கமெண்ட் போட்டு வருகின்றனர்.

முகமூடி
அதிலேயும் பலர் இவர் அடுத்தவர்களின் முகத்திரையைக் கிழிக்கிறார் என்று பார்த்தால் இவரே முகமூடி அணிந்து கொண்டுதான் இருக்கிறார் .இவருடைய உண்மையான குணமும் இதுதான் இந்த கேமில் முழுக்க முழுக்க கேமரா அவரையே சுற்ற வேண்டும் என்பதற்காக அடிக்கடி பிக்பாஸில் பேசுகிற அதுவும் தனியாக நின்று கொண்டு கேமரா முன்பு பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்படில்லாம் இல்லை
அதனாலும் சில ரசிகர்கள் கடுப்பாகி இவரை விதவிதமாக யோசித்து யோசித்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் சனம்தான் வாயாடி திமிரு பிடித்தவர் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் கூட நேற்று நடந்த சம்பவத்தினால் சனத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. கேம் என்று வந்துட்டா நாங்கல்லாம் வெறித்தனம் என்று கேப்ரில்லாவை முதுகில் சுமந்தபடி இவர் விளையாடிய விளையாட்டு தான் வைரலாகி வந்தது.

சனத்திடம் செய்த சயெல்
அதற்கு பிறகுதான் சுரேஷ் சக்கரவர்த்தி தான் இந்த வீட்டிற்குள் ஹீரோ என்றெல்லாம் பலரும் கூறி வந்தனர் .ஆனால் தற்போது இவர் சனத்திடம் செய்த செயலை வைத்து பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். செய்வதையும் செய்து விட்டு பிக்பாஸில் ரூமுக்குள் போய் இவர் அழுததைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் பலர் பீல் ஆகி விட்டனர் .ஆனால் நெட்டிசன்கள் இதுதான் முதலைக் கண்ணீர் என்று வகைவகையாக இவரை கலாய்த்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications