கருப்பு கதையின் பின்னால் ஹைகோர்ட் மகாராஜாவா?.. ஆர்.ஜே. பாலாஜி சொன்ன உண்மை.. இப்படியும் நடந்ததாம்!
சென்னை: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் செம ஹிட்டாக ஓடி வருகிறது. மாஸ் ஆக்ஷன், ஆன்மீக நம்பிக்கை, நீதிக்கான போராட்டம் என ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. சூர்யாவுக்கு மிக முக்கியமான கம்பேக் ஹிட்டாக பார்க்கப்படும் இந்த படத்தைச் சுற்றி தற்போது ஒரு சுவாரஸ்யமான விவாதம் கிளம்பியுள்ளது.
அதாவது, 'கருப்பு' படத்தின் கதை திருநெல்வேலியில் பிரபலமாக பேசப்படும் ஹைகோர்ட் மகாராஜா கதையை தழுவியது போல இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். "தன்னை நம்பிய பக்தருக்காக நீதிமன்றத்திலேயே சாட்சி சொல்ல வந்த தெய்வம்" என்ற அந்த கதை பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதனால் 'கருப்பு' படமும் அதே கதையை அடிப்படையாக கொண்டதா என்ற கேள்வி எழுந்தது.

இந்த சர்ச்சைக்கு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ஜே. பாலாஜி நேரடியாக விளக்கம் கொடுத்துள்ளார். அவர் பேசும்போது, "இந்த படம் வெளியான பிறகுதான் சமூக வலைதளங்களில் சில ரீல்ஸ்கள் மூலம் ஹைகோர்ட் மகாராஜா பற்றிய கதையை கேள்விப்பட்டேன். திருநெல்வேலியில் இருக்கும் ஹைகோர்ட் மகாராஜா தன்னுடைய பக்தருக்காக கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொன்னார் என்று சொல்கிறார்கள். அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது" என்று கூறினார்.
அதோடு, இந்த கதையின் உண்மையான inspiration என்ன என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார். "நான் மாசாணி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட போனபோது இந்த ஐடியா தோன்றியது. நமக்கு ஒரு பிரச்சனை வந்தால் கடவுளை நம்புகிறோம். அந்த கடவுளே நீதிக்காக நேரடியாக நீதிமன்றத்துக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அதுதான் இந்த படத்தின் கதைக்கான ஆரம்பம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சூர்யாவுடன் இந்த படம் எப்படி உருவானது என்பதையும் சுவாரஸ்யமாக பகிர்ந்தார். "ஏற்கனவே ஒருமுறை சூர்யா சார் தரப்பில் இருந்து எனக்கு போன் பண்ணினார்கள். அப்போது நான் படம் பண்ணும் ஐடியாவில் இல்லை என்று சொன்னேன். பிறகு ஒரு நாள் வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது மீண்டும் சூர்யா சார் சைடில் இருந்து போன் வந்தது. அப்போ இது கடவுள் சொல்ற சிக்னல் போல தோணிச்சு. அதற்குப் பிறகுதான் இந்த படத்தை பண்ண முடிவு செய்தேன்" என்று ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.
ஹைகோர்ட் மகாராஜா யார்?
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நாட்டுப்புற தெய்வக் கதையாகவே ஹைகோர்ட் மகாராஜா பார்க்கப்படுகிறார். தூத்துக்குடி ஆறுமுகநேரி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு பக்தருக்காக நீதிமன்றத்துக்கு நேரடியாக சென்று சாட்சி சொன்னார் என்ற நம்பிக்கையால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. தென் மாவட்ட மக்களிடம் இந்த தெய்வ நம்பிக்கை மிகவும் ஸ்ட்ராங்காக உள்ளது.
கருப்பு செய்த மாயாஜாலம்
அதேபோல கருப்பு படத்தை பார்ப்பதற்காக திருச்செந்தூரில் இருந்து ஒரே நபர் தன்னுடைய குடும்பத்தினர் 217 பேரை தியேட்டருக்கு கூட்டிக்கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய கனவில் இந்த படத்தை பார்க்க சொல்லி கடவுள் சொன்னதாகவும் அதனால் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் கூட்டிக்கொண்டு வந்ததாகவும் அவர் சொல்லி இருந்தார். இதைத்தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இப்போது திருச்செந்தூருக்கு சென்று அந்த நபர் மற்றும் அவருடைய குடும்பத்தை சந்தித்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.
கருப்பு படத்தின் கதை
ஆக்ஷன், எமோஷன், ஆன்மீகம் மூன்றையும் கலந்த இந்த படத்தில் சூர்யாவின் மாஸ் ஸ்கிரீன் பிரசென்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதனால்தான் படம் பாக்ஸ் ஆபிஸிலும் ஸ்ட்ராங்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் கிளம்பிய "ஹைகோர்ட் மகாராஜா காப்பி" சர்ச்சைக்கு ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த இந்த விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் படம் வசூல் சாதனை படைத்து கொண்டிருக்க, மறுபக்கம் அதன் கதைக்குப் பின்னாலிருக்கும் உண்மையான inspiration ரசிகர்களிடம் புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.













Click it and Unblock the Notifications