மனைவிக்கு மரியாதை கொடுங்க! நான் பிறந்த நாளை கொண்டாடல! ஆனால் ரசிகர்கள்.. சொந்த ஊரில் கெத்தாக பேசிய சூர்யா
சென்னை: கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யாவின் அடுத்த படமான விஸ்வநாத் & சன்ஸ் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குடும்ப உறவுகள், காதல், எமோஷனல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த படம் ரசிகர்களிடம் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக ரசிகர்கள், குடும்பம், காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து அவர் சொன்ன விஷயம் பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசும் போது, இந்த வருஷம் நான் என்னுடைய பிறந்த நாளை ஒரு சில காரணங்களால் கொண்டாடவில்லை. ஆனால் என்னுடைய ரசிகர்களின் அன்பு மட்டும் குறையவே இல்லை. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடத்திய சமூக சேவைகள் என்னை ரொம்பவே நெகிழ்ச்சி அடைய வைத்து விட்டது. எத்தனையோ பேரு ரத்ததானம் பண்ணி இருக்கீங்க. அதனால பல பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கிறது.

சின்ன வயது நினைவுகள்
அதுபோல சின்ன குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவிகள் செய்து இருக்கீங்க. அதை எல்லாவற்றையும் நான் கவனித்து வருகிறேன். இந்த அன்புக்கு என் மனமார்ந்த நன்றி என்று ரசிகர்களுக்கு ஐஸ் வைத்து விட்டார். பிறகு 12-ம் வகுப்பு வரை ஒவ்வொரு விடுமுறையிலும் கோயம்புத்தூருக்கு வருவேன். ஆடு மாடு மேய்த்து இருக்கிறேன், மாட்டு வண்டி ஓட்டி இருக்கிறேன், கிணற்றில் குளித்திருக்கிறேன்.
கடந்த வருஷம் என்னுடைய மகனையும், மகளையும் கூப்பிட்டு வந்து நான் வளர்ந்த இடங்களையும், என் குலதெய்வ கோவிலையும் காட்டினேன். அந்த நினைவுகள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை என்று எமோஷனலாகவே பேசினார். தற்போதைய வாழ்க்கை முறையை பற்றி அவர் பேசும்போது செல்போனுக்கு நாம் கொடுக்கும் கவனத்தை குடும்பத்திற்கு கொடுப்பதில்லை. இதில் நானும் இருக்கிறேன்.
செல்போன் பயன்பாடு
நானும் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். ஃபோனில் வரும் நினைவுகளை விட வாழ்க்கையில் உண்மையான நினைவுகளை உருவாக்குங்கள். சிறுவயதில் நண்பர்களுடன் விளையாடிய தருணங்கள் தான் இன்று வரை மனதில் நிற்கின்றன என்று கூறினார். அதோடு சமீபத்தில் கருப்பு திரைப்படம் வெற்றி பெற்றதற்கு காரணம் என் ரசிகர்கள் தான். கருப்பு படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றிய அனைவருக்கும் நீ ரொம்ப நன்றி. அந்த படத்தை 100வது நாள் கொண்டாட்டத்தில் சந்திக்கிறேன் என்று உறுதியளித்தார்.
ஆர்ஜே பாலாஜி பேசியதை ஏத்துக்க முடியல! அவமானப்படுத்திட்டாரு! கமலுக்கு அடுத்து சூர்யா தான்.. போஸ் வெங்கட் ஆதங்கம்
தொடர்ந்து பேசியவர் விஸ்வநாத் & சன்ஸ் எனக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும். இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தில் குடும்ப உறவுகளை மிகவும் அழகாக சொல்லி இருக்கிறார். மூன்று பெண் கேரக்டர்களுக்கு கதை ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருக்கிறது. குடும்பம், காதல், காமெடி எமோஷனல் என அனைத்து அம்சங்களும் கலந்த படமாக இது இருக்கும். படம் முழுவதும் உங்கள் முகத்தில் ஒரு சின்ன புன்னகை இருந்து கொண்டே இருக்கும் என்றார்.
திருமண வாழ்க்கை அட்வைஸ்
கடைசியாக திருமண வாழ்க்கைய பற்றி பேசும்போது நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் நீங்கள் ஆசைப்படுவது கிடைக்கும். தினமும் காதலியுங்கள், பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், வாழ்க்கையில் எல்லாமே மாறும். மனிதர்களும் மாறுவார்கள். ஆனால் அவர்கள் மீது இருக்கும் காதல் மட்டும் மாறக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் தான் அதிக சமரசங்களை செய்கிறார்கள் ஆனால் மனைவிக்கு காதலை விட மரியாதையை அதிகமாக கொடுங்கள் உறவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்க அன்பும் மரியாதையும் இரண்டும் அவசியம் என்று கூறினார்.
கடைசியாக இது என்னுடைய சொந்த ஊரு, இங்க இருக்கிறவங்க எல்லாம் என்னோட மாமன், மச்சான், அண்ணன்,தம்பிங்க, அக்கா, தங்கச்சிங்க என்று சிங்கம் படத்தில் வரும் டயலாக்கை பேசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இந்த வீடியோ தான் இப்போ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications
