ஸ்வேதா முகத்துல எம்புட்டு சந்தோஷம் பாருங்க.. எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்!
சென்னை: லாக்டோன் கொஞ்சம் தளர்வு பண்ணினதும் பொதுமக்கள் முதல் நடிகர்கள் வரை வீட்டு பங்க்ஷன் களை எளிமையாக நடத்தி முடித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த வரிசையில் சின்னத்தம்பி, வள்ளி சீரியல்களில் நடித்த ஸ்வேதா சுப்பிரமணியனும் தன்னுடைய திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார்.
நலுங்கு வைக்கும் போது இவர் போட்ட ஆட்டமும் போட்டோஸ்களும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. செம ஹேப்பியாக இருக்கிறார் ஸ்வேதா.. ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

விஜய் டிவி ஸ்டார்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மூலமாக அறிமுகமானவர்தான். ஸ்வேதா சுப்பிரமணியன் சென்னையில் பிறந்தவர். அங்கே தான் பள்ளி கல்லூரியில் படித்து இருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தான் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜோடி நம்பர் 1
இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செம ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார். தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கி கொண்டிருந்த இவருக்கு வள்ளி சீரியல் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது .சன் டிவியில் சீரியலிலும் போல்டான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் சின்னத்தம்பி சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

காதலருடன் திருமணம்
அதைத்தொடர்ந்து கார்த்திகை பெண்கள், அழகி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இந்தநிலையில் அவருக்கும் அவரது காதலர் அருன் என்பவருக்கும் கடந்த ஜூலை 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜூலை மாதம் லாக் டவுன் என்பதால் வெளியே யாருக்கும் சொல்லாமல் சிம்பிளாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துவிட்டார்கள். தற்போது அவருக்கு திருமணமும் முடித்து விட்டது.

ஜெனீபர் கலக்கல் ஆட்டம்
திருமணத்திற்கு முந்தைய நாள் நலுங்கு பங்ஷனில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு செம ஆட்டம் போட்டிருக்கிறார்கள் .கில்லி படத்தில் விஜயின் தங்கச்சியாக நடிக்க ஜெனிபர், மதன் உள்ளிட்ட பல சீரியல் ஆக்டர்ஸ்களும் இதில் கலந்துகொண்டு செமையாக என் ஜாய் பண்ணி இருக்கிறார்கள். அவருடைய நிச்சயதார்த்த போட்டோஸ் களும் திருமண போட்டோஸ்களும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிங்க் கலர் சேலையில் சூப்பர்
நிச்சயதார்த்தத்திற்கு பிங்க் கலரில் சேலை கட்டி ஒரு போட்டோ இணையதளத்தில் போட்டிருக்கிறார் .இதை பார்த்ததும் பல ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் நான் என்கேஜ்ட் என்று ஒரு போட்டோ இணையதளத்தில் போட்டு வைத்திருக்கிறார். இவருக்கு எங்கேஜ்மென்ட் முடிந்ததே யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த இவர் திருமணத்தின் போதுதான் இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு விட்டு ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.

வித்தியாசமான திருமணம்
திருமணம் என்பது எல்லோருக்கும் இளிமையானது தான். ஆனால் அது எனக்கு ரொம்பவும் வித்தியாசமானது மற்றும் மறக்க முடியாதது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவருடைய சக நடிகர்களுடன் இவர் கலக்கலான போஸ் கொடுத்து செல்பி எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார் . நலுங்கு பங்ஷனுக்கு இவர் போட்டிருக்கும் மஞ்சள் கலர் டிரஸ் இவருக்கு மிகவும் அழகாக இருக்கிறது.

லாக்டவுனிலும் வெட்லாக்
இவருடைய காஸ்ட்யூம் மற்றும் டிரஸ்சை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். எளிமையான முறையில் திருமணத்தை முடித்து இருந்தாலும் திருமண போட்டாவில் அவரும் அவரது கணவரும் இணைந்து அழகாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகிறார்கள். லாக்டோனில் பலருக்கும் இப்படி வெட் லாக் ஆவது அதிகரித்து வருவது சந்தோஷம்தான்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications