டிரெண்ட் செட்டர் டி.ஆர் வாழ்த்து... உத்வேகமான விஷால்! - மகுடம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த அதிசயம்
சென்னை: திரைப்பட உலகில் டி ராஜேந்தர் ஒரு லெஜண்ட்! அவரது ஸ்டைல், வசனங்கள், அதிரடியான டான்ஸ் என எல்லாமே தனி ரகம். இந்த சகலகலா வல்லவர், இப்போ ஒரு புதிய படப்பிடிப்புத் தளத்துக்கு நேரில் போய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நடிகர் விஷால் நடித்து வரும் மகுடம் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத்தான் டி.ஆர் போயிருக்கிறார்.

மகுடம் படப்பிடிப்பில் சர்ப்ரைஸ்
ரவி அரசு இயக்கத்தில் உருவாகி வரும் மகுடம் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ரொம்ப மும்முரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தப் படத்தில் விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா, அர்ஜெய் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தை நம்ம ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் இது 99-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்தப் படத்துக்கான ஷூட்டிங் சென்னையில் இருக்கும் டி.ஆர் கார்டன் படப்பிடிப்புத் தளத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ஒரு செட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த இடத்துக்குத்தான் டி.ஆர் ராஜேந்தர் திடீரென சென்றிருக்கிறார். அங்கு இருந்த படக்குழுவினர் எல்லாரும் அவரைப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். அவர் படக்குழுவினருக்குத் தன் பாணியில் வாழ்த்துச் சொல்லி, எல்லாரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார்..
டி.ஆர் மனிதாபிமானம்
டி.ஆர் அண்ணனைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவரது மனிதாபிமானம் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. அவர் தனக்கு உதவி செய்தவர்களை ஒருநாளும் மறக்க மாட்டார். சில சமயங்களில் அவரது படத்தில் வேலை செய்த தொழிலாளர்கள், உதவியாளர்கள் என எல்லாரும் தனது சொந்த செலவில் உதவிகள் செய்துள்ளார். எந்தப் பிரபல்யமும் இல்லாமல், பலரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவர் ஒரு நல்ல நண்பர், ஒரு நல்ல வழிகாட்டி என்று பலர் பேசி இருக்கிறார்கள்.
அதேபோல நடிகர் விஷால் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் நடிகர் சங்கத்தின் பொறுப்பாளர். பல வருடங்களாக சங்கத்துக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார். கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவிகள் செய்வது, இயற்கைச் சீற்றங்கள் வரும்போது மக்களுக்காகக் களத்தில் இறங்கி வேலை செய்வது என விஷாலுக்கும் சமூக அக்கறை அதிகம் தான்.
விஷால் சொன்ன வார்த்தை
டி. ராஜேந்தர் தனது படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தது குறித்து விஷால் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருக்கிறார். "எனக்கு மிகவும் விருப்பமான நடிகரும், சிறந்த மனிதருமான டி.ஆர் சாரிடம் இருந்து இதயபூர்வமான வாழ்த்துக்கள் கிடைத்துள்ளன. இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும். அவர் எனது மகுடம் படத்திற்காகவே இந்த செட்டிற்கு வந்தார். இது ஒரு சர்ப்ரைஸ் மட்டுமல்ல, இது எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம். தற்செயலாக மார்க் ஆண்டனி படப்பிடிப்பு நடந்த அதே இடம்தான் இது. அவரைச் சந்திக்கும் போது எனக்கு ரொம்ப உத்வேகமாக இருந்தது. இன்று முதல் ஆக்ஷன் தொடங்கட்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications