தமன்னாவிடம் தவறாக நடந்த அந்த ஸ்டார்! ரசிகர்கள் போட்ட லிஸ்ட்! இவரும் இருக்கிறாரே!
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் நடிக்க வந்த புதிதில் தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய ஸ்டார் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்து, அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். இந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தமன்னாவின் வாக்குமூலம்
சம்பவம்: "தென்னிந்தியாவில் ஒரு பெரிய ஸ்டாராக இருப்பவரின் படத்தில் நடித்தேன். அப்போது, சில காட்சிகளில் நடிக்க எனக்குச் சங்கடமாக இருந்தது. அதிலும், குறிப்பாக ஒரு காட்சியில், நடிக்க முடியாது என்று நான் சொன்னேன். உடனே, அந்த ஸ்டார் கோபப்பட்டு, 'ஹீரோயினை மாற்றுங்கள்' என்று கூறிவிட்டார். மறுநாள், அவரே வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார்," என்று தமன்னா தெரிவித்தார்.
ரசிகர்களின் தேடல்: தமன்னாவை மோசமாக நடத்திய அந்த நடிகர் யார் என்பதை, அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ரசிகர்கள், தமன்னா நடிக்க வந்த புதிதில், அவருக்கு ஜோடியாக நடித்த பெரிய ஸ்டார்களின் பெயர்களைப் பட்டியல் போட்டு, அந்த நடிகர் யாராக இருக்கும் என்று யூகித்து வருகிறார்கள்.
விராட் கோலியுடன் காதல்
வதந்தி: பல ஆண்டுகளாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், தமன்னாவும் காதலித்து வந்தார்கள். ஆனால், என்ன நடந்தது என்று தெரியாமல் பிரிந்துவிட்டார்கள். அதன் பிறகுதான், கோலியின் வாழ்க்கையில் நடிகை அனுஷ்கா ஷர்மா வந்தார் என்று ரசிகர்கள் பேசி வந்தனர்.
தமன்னாவின் விளக்கம்:இந்த வதந்தி குறித்து, தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில், " நானும் கோஹ்லியும் ஒருபோதும் காதலித்தது கிடையாது. அதோடு கோஹியும் தானும் ஒரே ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் பார்த்துக் கொண்டதற்கே இப்படி காதல் வதந்தி கிளம்பி விட்டது" என்று தெளிவுபடுத்தினார்.
அதுபோல தனக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கிற்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக கூட பேசப்பட்டது அதுவும் உண்மை கிடையாது என்று தமன்னா கூறியிருந்தார். ஆனால் கடை திறப்பு விழாவில் தமன்னாவும் அப்துல் ராசாக்கும் நகைகளுடன் சேர்ந்து நின்று போஸ் கொடுத்த போட்டோவால் அப்படி ஒரு வதந்தி கிளம்பியது.
தமன்னாவின் சினிமா பயணம்
பாலிவுட்டில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய தமன்னாவுக்கு, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா தான் பெரிய புகழையும், பெயரையும் வாங்கிக் கொடுத்தது. தற்போது, அவர் இந்திப் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
தமன்னா, சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை தைரியமாகப் பேசியிருப்பது, பலருக்கும் ஒரு ஊக்கமளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அந்த நடிகர் யார் என்பதைப் பற்றி ரசிகர்கள் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், சினிமா உலகிலும் இந்தச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
அதுபோல பாலிவுட் நடிகரான விஜய் வர்மா ஏன் தமன்னாவை பிரிந்தார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். விஜய் வர்மாவும் தமன்னாவும் சூப்பர் ஜோடி விஜய் பேசாமல் தமன்னாவை திருமணம் செய்து இருக்கலாம் நல்ல பெண்ணை மிஸ் பண்ணி விட்டார் என்று சிலர் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் விஜய் வர்மாவிற்கும் தமன்னாவுக்கும் இந்த ஆண்டு திருமணம் என்று கூறப்பட்டது. ஆனால் விஜய் வர்மாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இந்த காதல் முறிந்து விட்டது என்று செய்திகள் பரவி வந்தது. விஜய் வர்மா மற்றும் தமன்னா இருவரும் பல இடங்களில் ஜோடியாக வலம் வந்தனர். ஆனால் இப்போது அவர்களுக்குள் பிரேக்கப் ஆனது பற்றி தமன்னாவோ விஜய் வர்மாவோ எந்த இடத்திலும் விளக்கம் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications