தமிழ்ப் பசங்கதான் கெத்து... அவன்தான் எனக்கு வேணும் மாப்பு..சீனியர் சுட்டீஸ் கலகல.!
சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் தினமும் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலின் நடிகைகள் வந்திருந்தாங்க.
இமான் அண்ணாச்சிதான் வழக்கமா எல்லாரையும் கலாய்ச்சு சிரிக்க வைப்பார். இதுல வந்திருந்த சந்திரா,லேகா,அஞ்சலி அண்ணாச்சியை ரொம்ப கலாய்ச்சு அவரை குலுங்ககுலுங்க சிரிக்க வச்சுட்டாங்க.
சந்திராவா நடிக்கும், ஸ்வேதா மராட்டி பொண்ணாம். எம்பிஏ படிச்சி இருக்கும் இவருக்கு இவரை மாதிரி படிச்ச மாப்பிள்ளை வேணுமாம்.

கெத்து
ஸ்வேதாவுக்கு தமிழ் பையன்தான் மாப்பிள்ளையா வேணுமாம். மராட்டி பசங்க மொழு மொழுன்னு இருப்பாங்க..ஆனா,தமிழ்ப் பசங்க மீசை,தாடி வச்சுக்கிட்டு கெத்தா இருப்பாங்க. பொண்ணுங்களை மதிப்பாங்க..நல்லா பார்த்துப்பாங்கன்னு சொன்னார்.

செம அழகு
லேகாவா நடிக்கற பொண்ணு சந்திர லேகா சீரியல் ஆரம்பிச்சு 5 வருஷத்துக்கு மேல ஆகப்போகுது. இன்னும் சீரியல் தவிர வேற நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டது இல்லை. சீரியலில் ரொம்ப அழகா இருப்பார்.

நீ இல்லேன்னா
லேகாவிடம் அண்ணாச்சி .காதலிச்ச பையன் நல்லவன் இல்லேன்னு தெரிஞ்சா என்னமா பண்ணுவேன்னு கேட்டப்போ,போடா போ..நீ இல்லேன்னா இன்னொருத்தன்னு சொல்லிருவேன்னு சொல்லி அதிர சிரிக்க வச்சார். கல்யாணம் ஆயிருச்சுனான்னு கேட்டப்போ ...டைவர்ஸ் பண்ணிருவேன்.. சரி,குழந்தை பிறந்ததும் தெரிஞ்சுதுன்னா என்றால் , குழந்தையை வளர்த்துக்கிட்டு அவனை டைவர்ஸ் பண்ணிட்டு ஜாலியா இருப்பேன்னு சொன்னார்.

மருமகள்
மாமியார் மருமகள் சண்டை வரத்துக்கு காரணம் என்னமான்னு கேட்ட போது , சந்திரலேகாவில் போலீஸ் பொண்டாட்டியா நடிச்சு இருக்கும் அஞ்சலி, மாமியார் பெரியவங்க..அனுபவம் அதிகமிருக்கும்.சோ,அவங்க எது சொன்னாலும் நம்மை நன்மைக்குன்னு பேசாம இருந்தா சண்டை வராதுன்னு சொன்னார். பசங்களும் பெத்தவங்களை பார்த்துக்கற மாதிரி பொண்டாட்டியை பார்த்துக்கணும்னு சொன்னார்.

நகரத்து பொண்ணு
கிராமத்து பொண்ணு, நகரத்து பொண்ணு என்ன வித்தியாசம்மான்னு கேட்டார். கிராமத்து பொண்ணுங்க பெத்தவங்களை எதிர்த்து பேச மாட்டாங்க. சோம்பேறியா இருக்க மாட்டாங்க. நகரத்து பொண்ணுங்க பெத்தவங்க பேச்சை கேட்கமாட்டாங்க. ஆனா,அவங்க பேச்சை மீறி அந்த காரியத்தை செய்துட்டு, அங்க ஒரு பாடு பட்டுட்டு வருவோம் பாருங்க..அப்போ தெரியும் பெத்தவங்களோட அருமைன்னு சொன்னார்.

சோஷியல் மீடியா
சோஷியல் மீடியாவை ஜஸ்ட் பார்த்துட்டு விட்டுடனும். அதுலேயே மூழ்கிக் கிடந்தா நம்ம சந்தோஷம் எல்லாத்தையும் இழந்துருவோம்னு மிக அழகாக சொன்னார் அஞ்சலி.
சும்மா சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சி ஜாலிக்காக நடத்துறாங்கன்னு நினைக்கறோம். அதுலேயும் இந்த புள்ளைங்க கருத்து சொல்லுதுங்க...நிகழ்ச்சி நல்லாருக்கு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications