2014–2022 சின்னத்திரை மாநில விருது, ‘இந்த’ சீரியல் மற்றும் நடிகர்களுக்கு தான்.. தெய்வமகள் பிரகாஷ் உருக்கம்
சென்னை: சின்னத்திரை ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியாக, தமிழக அரசு சார்பில் 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான சின்னத்திரை மாநில விருதுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சின்னத்திரையில் தரமான கதைகள், சிறந்த நடிப்பு, சமூக தாக்கம் கொண்ட தொடர்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த எட்டு ஆண்டுகளில் ஒளிபரப்பான பல்வேறு ஹிட் சீரியல்களும், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர்-நடிகைகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

2014 - 2022 : சிறந்த சீரியல்கள்
அழகி
ரோமாபுரி பாண்டியன்
ராமானுஜர்
நந்தினி
பூவே பூச்சூடவா
செம்பருத்தி
ராசாத்தி
சுந்தரி
எதிர்நீச்சல்
இந்த சீரியல்கள் அனைத்தும் TRP மட்டுமல்லாமல், குடும்ப ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று இருந்தது.
சிறந்த நடிகர்கள் பட்டியல்
எம். ராஜ்குமார்
ஆர். பாண்டியராஜன்
கௌசிக்
கிருஷ்ணா
தலைவாசல் விஜய்
வ. சஞ்சீவ்
ஜெய் ஆகாஷ்
கார்த்திக் ராஜ்
சஞ்சீவ்
சிறந்த நடிகைகள் பட்டியல்
ராதிகா சரத்குமார்
வாணி போஜன்
நீலிமா ராணி
சங்கவி
ரேவதி
ரேஷ்மா
சபானா ஷாஜகான்
கேப்ரியல்லா செல்லஸ்
சைத்ரா ரெட்டி
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பலர் சின்னத்திரையைத் தாண்டி சினிமாவிலும் தங்களின் திறமையை நிரூபித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வமகள் கிருஷ்ணா பதிவு
இந்த வரிசையில் இடம் பெற்றுள்ள நடிகர் கிருஷ்ணா, தன்னுடைய முதல் மாநில விருது கிடைத்த மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். "My First State Award" எனும் வாசகத்துடன் அவர் பகிர்ந்த பதிவிற்கு ரசிகர்கள், சக நடிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கிருஷ்ணாவிற்கு தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் என்ற கேரக்டரில் நடித்ததற்காக சிறந்த கதாநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு பிறகு அவர் தொடர்ச்சியாக சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆனாலும் இப்போது மக்கள் மனதில் அவருக்கு பிரகாஷ் என்ற இடம் தான் அதிகமாக இருக்கிறது.
அதேபோல், சிறந்த நடிகை விருது பெற்ற கேப்ரியல்லா செல்லஸ் கூட தன்னுடைய மகிழ்ச்சியை சமூக வலைதள பதிவாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "கனவுகள் நிஜமாகும் தருணங்கள் துவங்கியது" என அவர் குறிப்பிட்டுள்ள இந்த பதிவு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சின்னத்திரைக்கு கிடைத்த அரசு அங்கீகாரம்
சின்னத்திரை கலைஞர்களின் நீண்ட கால உழைப்புக்கு கிடைத்த இந்த மாநில விருதுகள், தொலைக்காட்சி துறைக்கு மேலும் ஒரு மதிப்பை சேர்த்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அரசு அளவில் கிடைக்கும் இந்த அங்கீகாரம், எதிர்காலத்தில் இன்னும் தரமான சீரியல்கள் உருவாக ஊக்கமாக இருக்கும் என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications