“மஞ்சும்மல் பாய்ஸ்”க்கு நடந்த கொடுமை.. திடீரென போடப்பட்ட வழக்கு.. விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசு
சென்னை: சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி தமிழ்நாடு, கேரளா மற்றும் இன்றி பல இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் 2006 ஆம் ஆண்டு நடந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டது போல போலீஸ்காரர்கள் நிஜத்தில் ரியல் மஞ்சும்மல் பாய்ஸை தாக்கியது குறித்து சமூக ஆர்வலர் வழக்கு தொடுத்திருக்கும் நிலையில் அது பற்றி தமிழ்நாடு அரசு விசாரணை செய்ய அறிவித்திருக்கிறது.
அந்த வகையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் சினிமா ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருக்கும் நிலையில் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் 2006 ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள் குணா குகைக்கு செல்வதும் அந்த குகையில் ஒருவர் தவறி விழுவதும் அந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

120 அடி ஆழத்தில் விழுந்த தன்னுடைய நண்பரை சக நண்பர்கள் காப்பாற்றிய உணர்வுபூர்வமான கதையை இயக்குனர் சிதம்பரம் அழகாக காட்டியிருப்பார். அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் தன்னுடைய நண்பரை காப்பாற்றுவதற்காக உதவி கேட்டு கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு சில நண்பர்கள் போவார்கள். அப்போது போலீசார் அவர்களை அடிப்பதும், அவர்களை திட்டி உதவி செய்யாமல் காக்க வைத்திருப்பதும் காட்டப்பட்டு இருக்கும்.
அந்த காட்சிகள் படம் பார்த்த அனைவரையும் மிகவும் பாதித்து இருக்கும். அது பற்றி கேரள மாநிலம் நிலம்பூரை சேர்ந்த சிஜூ ஆபிரகாம் என்பவர் 18 வருடங்கள் முன்பு போலீசார் ரியல் மஞ்சும்மல் பாய்ஸ் இடம் கடுமையாக நடந்த அந்த சம்பவம் பற்றி தமிழக உள்துறை செயலாளரிடம் புகார் அளித்திருக்கிறார். அது குறித்து தமிழக உள்துறை செயலாளர் பி அமுதா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த நிலையில் போலீசார் தங்களை அடித்து கொடுமைப்படுத்தியது பற்றி ரியல் மஞ்சும்மல் பாய்ஸ் போலீசார் எங்களிடம் நடந்து கொண்டது 10% சதவீதம் கூட படத்தில் காட்டப்படவில்லை என்றும் அந்த அளவிற்கு எங்களை காவல்துறையினர் கொடுமைப்படுத்தினார்கள் என்று பேட்டி அளித்திருந்தனர். அதே நேரத்தில் இந்த சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த சம்பவத்தை நாங்கள் மீண்டும் பெரிதுபடுத்த விரும்பவில்லை.
அப்போது பணியில் இருந்த பலர் இப்போது அதிக அளவில் வயதாகி விட்டார்கள். அதுபோல இப்பொழுது நாங்கள் அதற்கு புகார் கொடுக்க விரும்பவில்லை என்று கூறி இருந்தனர். ஆனால் இது பற்றி சமூக ஆர்வலர் இப்போது புகார் கொடுத்திருக்கும் நிலையில் அதற்கு அவர் கொடுத்த விளக்கத்தில் கொடைக்கானலில் 18 ஆண்டுகளுக்கு முன்பு ரியல் மஞ்சும்மல் பாய்ஸ்களுக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து அவர்கள் புகார் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் நான் இப்போது புகார் கொடுத்தது ரியல் மஞ்சும்மல் பாய்ஸ்க்காக மட்டுமல்ல. இதுபோல பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான். இப்போது 18 வருடங்கள் கழித்து இந்த பிரச்சனை பேசப்படுவது போல நம்மிடம் அடைக்கலம் தேடி வருபவர்களிடம் நாம் மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்டால் எப்போது வேண்டுமென்றாலும் பிரச்சனை வரும் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் இப்போது கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறேன் என்று சமூக ஆர்வலர் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications