Tamil selvi serial: காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலின் நேரத்தை மதியம் ஒரு மணிக்கு என்று மாற்றி ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.முதலில் மாலை ஆறு மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. நேர மாற்றத்தால் முன் கதை சுருக்கத்தையும் சொல்லி சீரியலை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

தமிழ்ச்செல்வி தனது மாமனை திருமணம் செய்ய இருந்த நேரத்தில், மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று பாட்டியுடன் சேர்ந்து நாடகமாடி மயக்கம் போட்டு விழுந்துடறா. டாக்டர் குடும்ப டாக்டர் என்பதால், இன்னும் நாலு வருஷத்துக்கு தமிழ்ச்செல்விக்கு கல்யாணம் செய்ய கூடான்னு பொய் சொல்றார்.

உடனே தமிழ்ச்செல்வி டவுனுக்கு மேல் படிப்பு படிக்க போறேன்னு சொல்ல , வீட்டாரும் கல்லூரியில் சேர்த்து விடறாங்க. முதலில் கிராமத்திலிருந்து நகரத்து கல்விக்கு தமிழ்ச்செல்வி திணறினாலும், பிற்பாடு கோல்ட் மெடலுடன் ஊருக்கு வர்றா.

சரவணன் தமிழ்ச்செல்வி

சரவணன் தமிழ்ச்செல்வி

இப்போது சரவணன், தமிழ்ச் செல்வியை கல்யாணம் செய்துக்க தயாராகிறான். தமிழ் செல்வியின் பாட்டியும் முன்பு போல என் உடம்பு இல்லை, உடனே சரவணன், தமிழ்ச்செல்வி கல்யாணத்தை நடத்திருங்கன்னு சொல்றாங்க. திடீர்னு பாட்டிக்கு உடம்பு சரி இல்லாமல் போயி, அவங்க நடு ரோட்டில் விழுந்து கிடக்க, அமுதன் பாட்டியை தனது சித்தப்பா ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறான்.

டாக்டர் அமுதன்

டாக்டர் அமுதன்

அமுதனை தமிழ்ச்செல்வி டவுனில் படிக்கும்போது அமுதனை ஒரு முறை பார்த்து இருக்கிறாள், அன்றிலிருந்தே தமிழ்ச் செல்வியை அமுதன் லவ் பண்ண ஆரம்பிச்சுடறான். ஆனால், அவனின் சித்தப்பா தமிழ்ச் செல்வியின் குடும்ப டாக்டர். அவர் அமுதனுக்கு புத்திமதி சொல்லி அவனை கண்டிக்கிறார்.ஆனால், சித்தி அமுதனுக்கு எப்படியும் தமிழ்ச்செல்வியை கல்யாணம் செய்து வைப்பேன் என்று அமுதனுக்கு ஊக்கம் தர்றாங்க.

பாட்டியை காப்பாத்திய

பாட்டியை காப்பாத்திய

பாட்டியை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்து அவங்களை அமுதன் காப்பாத்தினான் என்று தமிழ்ச்செல்வி குடும்பமே அவன் மீது பாசம் வச்சு இருக்காங்க. இந்த நேரத்தில் கோயிலில் வச்சு உன்னை காதலிக்கிறேன்னு அமுதன் தமிழ்ச்செல்விகிட்ட கேட்க, அதை சரவணன் பார்த்துடறான்.தமிழ்ச்செல்வி, எனக்கும், சரவணன் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது.இப்போ இதை நீங்க சொல்லலாமான்னு கேட்கறா .

அமுதன் தமிழ்ச்செல்வி

அமுதன் தமிழ்ச்செல்வி

அமுதன் தமிழ்ச்செல்வியை கல்யாணம் செய்தே தீருவது என்கிற முடிவில் சித்தியுடன் இருக்க, சரவணன் அமுதனை ஊரை விட்டு உடனே ஓடிப்போயிரு. உங்க சித்தப்பாவுக்காக உன்னை நான் விட்டு வைக்கிறேன். எனக்கும் தமிழ்ச் செல்விக்கும் கல்யாணம்னு பத்திரிக்கை எல்லாம் வந்தாச்சு. உன்னை பத்தி எங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா அவ்ளோதான்னு எச்சரிக்கிறான்.

காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போறதா..எப்படி இருக்குது பாருங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+