Tamil Selvi Serial: இதுக்கெல்லாம் இன்னுமா சிரிக்கறாங்க? கதையை மாத்துங்க பாஸ்!
சென்னை:சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் சரவணன் படிக்காதவன். தமிழ்க்கல்வி படித்தவள்.இருவருக்கும் கல்யாணம் பேசி முடிக்கறாங்க. தமிழ்ச்செல்விக்கு முறை மாமாதான் சரவணன்
இதனால், அவளின் முழு விருப்பத்தோடுதான் இந்த கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் தமிழ்ச்செல்வி படிக்கப் போன இடத்தில் அமுதன் என்பவன் ரவுடிகளிடம் இருந்து இவளை காப்பாற்ற, அமுதனுக்கு தமிழ்ச்செல்வி மேல் ஆசை வந்துருது.
அவளை தேடி அவளது சொந்த ஊருக்கே வந்துடறான்.கடைசியில் அமுதன் சரவணன் தமிழ்ச்செல்வி குடும்ப டாக்டரின் அண்ணன் மகன்தான் அமுதன். சரவணனுக்கும், தமிழ்ச்செல்விக்கும் கல்யாணம் முடிவாகி பத்திரிகையும் வந்தாச்சு.

சித்தி அமுதன்
டாக்டர் சித்தப்பா அமுதா .இது சரியில்லை.அந்த குடும்பம் இந்த ஊரில் பெரிய குடும்பம். அவங்க வீட்டு பெண்ணுக்கு சரவணன் கூட கல்யாணம் முடிவாகிருச்சு. இந்த மாதிரி நினைப்பு உனக்கு வர கூடாதுன்னு சொல்லியும், சித்தி அமுதனுக்கு நம்பிக்கை கொடுக்கறாங்க.காரணம், பிள்ளை இல்லாமல் அமுதனை வளர்த்த தன்னுடன் அமுதன் இருக்க வேண்டும் என்றால், அவனது ஆசையை நிறைவேற்றி வச்சால்தான் அது நடக்கும்னு கணக்கு போடறாங்க.

சரவணன் அமுதன்
அமுதனை கண்டாலே சரவணனுக்கு பிடிக்கலை. காரணம் என்னன்னு பார்த்தால்,கோயிலில்,அமுதன் படிக்காத உங்கள் மாமனை கல்யாணம் செய்துக்கறதை விட, படிச்ச என்னை கல்யாணம் செய்துக்கோங்கன்னு கேட்டதை சரவணன் பார்த்துடறான். அப்போதில் இருந்தது அமுதனை அவனுக்கு பிடிக்கலை. வேண்டும் என்றே வீட்டுக்கு வருவது, தமிழ்ச்செல்விக்கு கலெக்டருக்கு படிக்க புத்தகம் வாங்கிக் கொடுப்பது என்று இருக்க, சரவணனுக்கு பிடிக்கலை.

தமிழ் சரவணன்
சரவணனும், தமிழ்ச்செல்வியும் வண்டியில் டெயிலர் கடைக்கு துணி தைக்க குடுக்க போக என்று கிளம்புகிறார்கள். அப்போது பாதி வழியில் டயர் பஞ்சர் ஆகிட, அங்கே வருகிறான் அமுதன் தனது காரில். உடனே நல்லவன் மாதிரி இறங்கி வந்து என்னாச்சுன்னு கேட்க, நடந்ததை சொல்கிறாள் தமிழ்ச்செல்வி, சரி வாங்க காரில் கொண்டு போயி விடறேன்னு சொல்றான். சரவணன் மறுக்க, அவனை சமாதானப் படுத்தி அழைச்சுட்டு போறா தமிழ்ச்செல்வி.

எலுமிச்சை தண்ணீர்
பெரிய ஹோட்டலுக்கு அழைச்சுட்டு போயி, அசத்தி விடுகிறான்.அங்கு ஸ்பூனில் சாப்பிட தெரியாமல் சரவணன் அவஸ்தைப் பட, மாமா கையில எடுத்து சாப்பிடுங்க மாமான்னு சொல்லி, தானும் கையில் சாப்பிடுகிறாள் தமிழ்ச்செல்வி. அடுத்து, கை கழுவும் எலுமிச்சை தண்ணீர் பவுலில் இருக்கும் தண்ணீர் எலுமிச்சை ஜூஸ் என்று சரவணன் குடித்துவிட, இதை எதுக்கு குடிக்கறீங்க,அது கை கழுவ வச்சு இருக்கும் தண்ணீர்னு அமுதன் சொல்ல, அனைவரும் சிரிக்கிறார்கள்.
அவமானத்தில் எழுந்து கோபத்தோடு போகிறான் சரவணன். ஒண்ணு புரிஞ்சுக்கோங்க நாட்டில் இப்போது எல்லாம் யாரும் அப்படி கேலி கிண்டல் பண்றதில்லை. அந்த அளவுக்கா மனிதர்களுக்கு மனிதாபிமானம் அத்து போச்சு? கதையை கொஞ்சம் அண்மை காலத்துக்கு கொண்டு வாங்க பாஸ்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications