சின்னத்திரை ரவுண்டு அப்: மீண்டும் சீரியலில் சுகன்யா.. சாதனை படைத்த பாக்கியலட்சுமி.. பிக் பாஸ் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த செய்தியில் இந்த வாரத்தில் சின்ன திரையில் நடந்த முக்கியமான செய்திகள் குறித்து தொகுப்பாக பார்க்கலாம்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் சர்ச்சைகளைத் தாண்டி ஆயிரம் எபிசோடுகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

அதே நேரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை போல பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7இல் பல சர்ச்சைகளான விஷயங்களும் நடந்து இருக்கிறது.

 tamil serial This Weeks Serial Update actress sukanya reentry serial

அந்த வகையில் சினிமா ரசிகர்களை விடவும் சின்னதிரை ரசிகர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் டிவியில் மட்டுமல்லாமல் கையில் இருக்கும் மொபைல் மூலமாகவும் பலர் சீரியல்களை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். அந்த மாதிரி தீவிரமான சீரியல் ரசிகர்களுக்கு இந்த வாரத்தில் நடந்த சின்னத்திரை அப்டேட் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக ரசிகர்களால் கலாய்க்கப்பட்டும் வருகிறது. குடும்பத்தை தனி ஆளாக தூக்கி சுமக்கும் பெண் பற்றிய கதைதான் இந்த சீரியல். இந்த சீரியலில் பாக்கியா பல போராட்டங்களை தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெறுவதை பலர் பாராட்டி வருகின்றனர்.

 tamil serial This Weeks Serial Update actress sukanya reentry serial

அதே நேரத்தில் பாக்கியா செய்யும் தியாகி வேலையையும் பலர் கலாய்க்க மறப்பதில்லை. ஆனால் இந்த சீரியல் தற்போது இந்த வாரத்தில் புது சாதனையை செய்திருக்கிறது. அதாவது இந்த சீரியல் ஆயிரம் எபிசோட்களை கடந்து இருக்கிறது. இதை சீரியல் டீம் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்து இருக்கின்றனர்.

 tamil serial This Weeks Serial Update actress sukanya reentry serial

அதுபோல வெள்ளி திரையில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பலருக்கும் பரிட்சயமான நடிகை சுகன்யா சின்னத்திரை ரசிகர்களுக்கும் பிரபலமானவர்தான். ஆனந்தம் சீரியல் மூலமாக சின்னத்திரையில் பல பெண்களும் கொண்டாடி மகிழ்ந்து இருந்தனர். ஆனால் சமீப காலமாக வெள்ளித்திரை, சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்த சுகன்யா மீண்டும் சீரியலில் நடிக்க வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்.

 tamil serial This Weeks Serial Update actress sukanya reentry serial

அதைத்தொடர்ந்து பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாக நடிகர் அமர்தீப் வெற்றி பெற்று இருந்தார். நடிகர் அமர்தீப் வேறு யாரும் இல்லை. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் ஒன் சீரியலின் கதாநாயகி தேஜஸ்வினியின் கணவர் தான். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது.

 tamil serial This Weeks Serial Update actress sukanya reentry serial

திருமணத்திற்கு பிறகு ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஜோடியாக அமர்தீப் மற்றும் தேஜஸ்வினி கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இப்போது பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் ரன்ன ரப் ஆக இருக்கும் அமர்தீப் வெளியே வந்ததும் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நடிகை தேஜஸ்வினியும் கலந்து கொண்டு இருந்த நிலையில் அவரையும் ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே அமர்தீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரும்போது டைட்டில் வின்னர் பல்லவி பிரசாத் ரசிகர்கள் அமர்தீப் காரை அடித்து நொறுக்கி அவரையும் துரத்தி சென்று இருந்த நிலையில் அமர்தீப் தனக்கு இத்தனை நாட்களும் வரவேற்பு தந்த ரசிகர்களை சந்தித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+