இந்த வார டாப் 10 சீரியல்கள்.. வியப்பு கொடுத்த எதிர்நீச்சல், கயல்.. விஜய் டிவியில் “பிரபல” சீரியல் செம
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தில் 30 வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த தகவல்கள் கிராமப்புறங்களில் மற்றும் நகர்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பியின் அடிப்படையில் வெளியாகி இருக்கிறது

அதில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் பல சீரியல்கள் எதிர்பாராத இடங்களை பெற்றிருக்கிறது. அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
1, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்தது. அதேபோல இந்த வாரமும் 12.48 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்து இருக்கிறது. கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்தாலும் 11.71 புள்ளிகள் தான் பெற்றிருந்தது. இப்போது அதைவிட அதிகமாக பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் இந்த வாரம் 11.55 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இது கடந்த வாரத்தை விட அதிகமானது தான்.
3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 10.09 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

சன் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்.. யாருக்கு அதிகம்? இதை எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க
4, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் 10.05 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
5, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 9.68 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருந்தது. இந்த முறை 9.78 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.26 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.
7, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தை பிடித்திருந்தது. அதேபோல இந்த முறை 8.54 புள்ளிகளை பெற்று அதே இடத்தை தக்க வைத்திருக்கிறது.
8, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் எட்டாவது இடத்தை பிடித்திருந்தது. இந்த வாரம் 7.83 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

9, பாண்டியன் ஸ்டோர் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடந்த முறை ஒன்பதாவது இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் 7.30 புள்ளிகளை பெற்று 9-வது இடத்திலே இருக்கிறது.
10, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரம் பத்தாவது இடத்தில் இருந்தது. இந்த வாரம் 7.25 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்திலேயே தொடர்கிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications