Top 10 Tamil Serial: மீண்டும் முதலிடத்தில் சன் டிவி.. இந்த முறை டாப் 10 சீரியல் லிஸ்ட்டை பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் முன்னிலை வகித்து வருகிறது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகமாக கவரப்படுகிறது. தொலைக்காட்சியில் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்ட சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 31-வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் தரவரிசை வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே சன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அதற்கு போட்டியாக பல சேனல்கள் புதியது புதிதாக தொடங்கி இருக்கின்றனர். அதிலும் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களையும் ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனாலேயே இந்த இரண்டு சேனல்களும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் சீரியல்களில் பல திருப்பங்களை கொண்டு வந்திருக்கின்றனர்.

கடந்த வாரத்தில் வெளியான டிஆர்பி ரேட்டிங்படி முதல் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பிடித்திருந்தாலும் அதைத் தொடர்ந்து அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் முன்னணி வகித்தது. ஆனால் இந்த வாரத்தில் நிலைமையே வேறு விதமாக மாறி இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 4வது முறையாக இந்த வாரமும் சிறகடிக்க ஆசை சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதன்படி மற்ற சீரியல்கள் இந்த வாரத்தில் பெற்ற இடத்தை பார்க்கலாம்.
அதில் முதல் இடத்தில் பல வாரங்களுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் 9. 11 புள்ளிகளை பெற்று வந்திருக்கிறது. கடந்த வாரத்தில் பல டுவிஸ்ட்கள் இருந்த நிலையில் இந்த சீரியல் மீண்டும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 8. 86 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
மூன்றாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 8.76 புள்ளிகளை பெற்று இருக்கிறது. நான்காவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகளே சீரியல் 8.27 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 7.65 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 7.44 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.
அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.43 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் 7.16 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6.76 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்திலும் அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் 5.77 புள்ளிகளைப் பெற்று பத்தாவது இடத்திலும் இருக்கிறது.
இது கடந்த வார நிலவரப்படி தொலைக்காட்சியில் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் ஒளிபரப்பாகி இந்த வருடத்தில் 31 வது வாரத்தில் பார்க்கப்பட்ட அடிப்படை தகவலின் இருந்து இன்று வெளியான டாப் 10 சீரியல் வரிசைதான். அடுத்த வாரத்தில் இதன் நிலைமை எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications