இந்த வார டாப் 10 சீரியல்கள்.. யாரும் எதிர்பார்க்காத தரவரிசை.. மாற்றத்திற்கு காரணம் அந்த நபர் தானா?
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தில் 36 ஆவது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இதில் கடந்த வாரத்தில் இருந்த நிலையை விட பல சீரியல்களில் தரவரிசையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

அதுபோல இந்த தகவல்கள் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி யின் அடிப்படையில் வெளியாகியிருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.
1, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த முறை இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 10.79 புள்ளிகளை பெற்று முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. கடந்த வாரம் இந்த சீரியல் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று இறந்து விட்டதால் அவருக்காகவே அவருடைய ரசிகர்கள் பலரும் தொலைக்காட்சியில் இந்த சீரியலை பார்த்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த சில வாரங்களாகவே முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 10.74 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்தது. அதுபோலவே இந்த முறையும் 9. 79 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
4, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 9.53 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. கடந்த வாரமும் இந்த சீரியல் 4வது இடத்தில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் ஐந்தாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த வாரத்தில் 8.82 புள்ளிகளை இந்த சீரியல் பெற்றிருக்கிறது.
6, மிஸ்டர் மனைவி சீரியல்: மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இந்த வாரத்தில் 8.34 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
7, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தை போலவே பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளி ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 8.26 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் விஜய் டிவி சீரியல்களில் முதல் இடத்தில் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், இந்த வாரம் டாப் 10 சீரியல்களில் 8.23 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது.

9, பாண்டியன் ஸ்டோர் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் 7.21 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.
10, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் 6.89 புள்ளிகளை பெற்று கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் பத்தாவது இடத்தை தக்க வைத்து இருக்கிறது.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications