Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட்.. மாஸ் காட்டிய விஜய் டிவி! சன் டிவி டிஆர்பி போட்டி
சென்னை: தமிழ்நாட்டில் சீரியல்களுக்கு இருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விறுவிறுப்பான கதைக்களம், உணர்வுபூர்வமான திருப்பங்கள், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட காட்சிகள் என பல காரணங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியல்களை விரும்பிப் பார்க்கிறார்கள். ஓடிடி தளங்களின் வரவால், எந்த நேரத்திலும் சீரியல் பார்க்கும் வசதி கிடைத்திருப்பதும் பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர காரணமாகியுள்ளது.
இந்த சீரியல்களின் வரவேற்பை மதிப்பிடுவதற்கு முக்கியமான அளவுகோலாக பார்க்கப்படுவது டிஆர்பி ரேட்டிங். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் 4வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவது தெளிவாக தெரிகிறது.

இந்த வாரம் டாப் 10 இடம்பிடித்த தமிழ் சீரியல்கள்
1. சிங்கப்பெண்ணே - மூன்று முடிச்சு மகா சங்கமம் (சன் டிவி)
இந்த வாரம் முதலிடத்தை தக்க வைத்துள்ளது இந்த தொடர். 9.58 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
2. கயல் (சன் டிவி)
போன வாரம் கயல் சீரியலில் பல அதிரடியாக சம்பவங்கள் நடந்தது. அதை தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வரும் கயல், 8.82 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3. அய்யனார் துணை (விஜய் டிவி)
கடந்த வாரத்தை விட ஒரு இடம் முன்னேறி, 8.48 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
4. சிறகடிக்க ஆசை (விஜய் டிவி)
கடந்த வாரம் 6வது இடத்தில் இருந்த இந்த தொடர், இந்த வாரம் 4வது இடத்திற்கு தாவி 8.04 புள்ளிகளை பெற்றுள்ளது.
5. மருமகள் (சன் டிவி)
கடந்த வாரம் 3வது இடத்தில் இருந்த மருமகள், இந்த வாரம் சற்று சரிந்து 5வது இடத்தை பிடித்துள்ளது. 8.03 புள்ளிகள் பெற்றுள்ளது.
6. அன்னம் (சன் டிவி)
கடந்த வாரத்தை விட ஒரு இடம் பின்னடைவை சந்தித்து, 7.96 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
7. எதிர்நீச்சல் (சன் டிவி)
திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர், கடந்த வாரம் போல் இந்த வாரமும் 7வது இடத்திலேயே நீடிக்கிறது. 7.55 புள்ளிகள் பெற்றுள்ளது.
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (விஜய் டிவி)
குடும்ப ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு பெற்று வரும் இந்த தொடர், 7.15 டிஆர்பி புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.
9. சின்ன மருமகள் (விஜய் டிவி)
6.50 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது.
10. செல்லமே செல்லமே (சன் டிவி)
சன் டிவியின் புதிய தொடர் ஆன செல்லமே செல்லமே, கடந்த வாரம் போலவே இந்த வாரமும் 10வது இடத்தில் உள்ளது. ஆனால் டிஆர்பி புள்ளிகள் 5.29 இலிருந்து 5.62 ஆக உயர்ந்துள்ளன.
Sangavi : விஜய், அஜித் பட நடிகை சங்கவியை நினைவிருக்கா? இப்போ சீரியலில் அறிமுகமாகிறார்!
இந்த வார டாப் 10 பட்டியலில், சன் டிவி சீரியல்கள் அதிகமான இடங்களை பிடித்துள்ளன. அதே நேரத்தில் விஜய் டிவி சீரியல்கள் டாப் 4 இடங்களில் இரண்டு இடங்களை கைப்பற்றி, போட்டியை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. மொத்தத்தில், இந்த வார டிஆர்பி பட்டியல் சின்னத்திரையில் போட்டி எவ்வளவு கடுமையாக நடக்கிறது என்பதற்கான தெளிவான சான்றாக இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த வரிசையில் மேலும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications