சரஸ்வதியை தாங்கி தாங்கி பார்க்கும் தமிழ்.. கோபத்தில் திட்டிய கோதை.. வசு சொன்ன அதிரடி வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ் மற்றும் சரஸ்வதி விஷயத்தில் கோதை அதிரடியான முடிவு எடுத்திருக்கிறார்.

அதே நேரத்தில் தமிழ் சரஸ்வதி இடம் வேண்டுகோள் ஒன்றும் வைத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தமிழ் வீட்டில் எல்லோரும் படுப்பதற்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சரஸ்வதி வெளியே படுப்பதற்காக தயாராக கோதை சரஸ்வதியை தடுத்து வீட்டிற்குள் உள்ளே சென்று படுக்கும் படி கூறுகிறார். அதற்கு சரஸ்வதி வேண்டாம் அத்தை நான் வெளியே படுக்கிறேன் என்று சொல்ல, அதற்கு கோதை எதிர்த்து பேசுகிறா, இந்த மாதிரி டைம்ல வெளியில படுக்க கூடாது போய் மெத்தையில் படு என்று திட்டி அனுப்பி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து தமிழும் வெளியே படுக்க முயற்சி செய்ய, தமிழையும் உள்ளே போய் படுக்க சொல்லி கோதை சொல்கிறார். பிறகு வேறு வழியில்லாமல் தமிழும் உள்ளே தூங்க போகிறார். அப்போது சரஸ்வதி இந்த மாதிரி டைம்ல நீங்க என் பக்கத்துல இருந்தா நான் சந்தோஷப்படுவேன் என்று தான் அத்தை நம்ம ரெண்டு பேரையும் உள்ள படுக்க சொல்லி இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது தமிழ் உனக்கு என்ன வேணுமோ கேள் அதை நான் வாங்கி தரேன் என்று சொல்ல, அதற்கு சரஸ்வதி நீங்க என் பக்கத்துல இருக்கிறது தவிர எனக்கு வேறு என்ன வேண்டும் என்று இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வசுவின் குழந்தை அழுகிறது. அந்த சத்தத்தை கேட்டு சரஸ்வதி எழும்பி குழந்தையை தூக்கி வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது தமிழ் எழுந்து வந்து நான் பெரியப்பா, என்னை பாரு என்று கொஞ்சி கொண்டு குழந்தைக்கு பால் காய்ச்சி எடுத்து வந்து கொடுக்க இருவரும் குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இவர்களின் பேச்சு சத்தத்தை கேட்டு எல்லோரும் எழும்பி விடுகின்றனர். வசு தன்னை எழுப்பி இருக்கலாம் தானே என்று கேட்க சரஸ்வதி பரவாயில்ல வசு என் குழந்தையை நீ வளர்த்துக்கோ உன் குழந்தையை நான் வளர்த்துக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் விடிந்ததும் வசு எல்லோருக்கும் டீ போட்டு கொடுக்கின்றார். அதை குடித்து பார்த்த கார்த்திக்கும், நடேசனும் கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் வெளியே சென்று இருந்த தமிழ் கையில் இரண்டு ஷாப்பிங் பையை தூக்கிக் கொண்டு வருகிறார். அந்த நேரத்தில சரஸ்வதி கையில் சொம்பு ஒன்றை தூக்கிக் கொண்டு வர அதை பார்த்து தமிழ் வெயிட் தூக்காத என்று கத்த, அதற்க்கு வசு, இந்த சின்ன சொம்பு உங்களுக்கு வெயிட்டா என்று கிண்டல் பண்ணுகிறார்.

அதைத்தொடர்ந்து தமிழ் எல்லோருக்கும் காலை உணவு செய்து கொடுத்து பரிமாறி சரஸ்வதியை கவனித்து கொள்கிறார். அத்தோடு இனிமேல் நீ செட்டுக்கு எல்லாம் போக வேண்டாம் என்று தமிழ் சொன்னதை கேட்டு முதலில் சரஸ்வதி மறுப்பு சொல்கிறார். பிறகு சரி என்று சம்மதித்துக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து கம்பெனிக்கு போனதும் நமச்சி தமிழிடம் சரஸ்வதியை இந்த மாதிரி நேரத்துல சந்தோஷமா வச்சிருக்கடா, அவ எது ஆசைப்பட்டாலும் செய்து கொடு என்று பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications