அர்ஜுனை ஜெயிலில் தள்ளிய மேக்னா.. உண்மை தெரிந்து தமிழ் எடுத்த முடிவு.. கலங்கி நிற்கும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் டிசம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் அர்ஜுன்தான் தமிழ் உடைய கம்பெனி பொருட்களை ஆள் வைத்து திருடியது என்ற உண்மையை மேக்னா கண்டுபிடித்து போலீஸிடம் அர்ஜுனை ஒப்படைத்து இருக்கிறார்.
இதுவரைக்கும் தமிழுக்கு பிரச்சினை கொடுத்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு மேக்னா பிரச்சனை கொடுத்திருக்கும் நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தமிழும் மேக்னாவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொள்கின்றனர். அந்த சமயத்தில் நீங்கள் தான் என்னுடைய உயிரை காப்பற்றியது என்று தமிழ் கூற, நீங்களும் தான் என் உயிரை காப்பாற்றி இருக்கீங்க என்று மேகனா கூறுகிறார்.

இப்படி மாறி மாறி புகழ்ந்து கொண்டிருக்கும் போது அர்ஜுன் பயங்கர கேடி ஆச்சே அவனை எப்படி நீங்கள் சமாளிச்சீங்க என்று தமிழ் கேள்வி கேட்கிறார். அதற்கு மேக்னா தமிழிடம் நடந்த கதையை சொல்கிறார். அதாவது மினிஸ்டரை பார்க்க மேக்னா போய் இருக்கிறார். அப்போது அர்ஜுன் தான் இந்த மெட்டீரியலை திருடினான் என்பதற்கு ஆதாரமில்லை என்று மேக்னா கூற எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது என்று எல்லா டிபார்ட்மென்ட் ஆபீஸ்ல இருந்து அவனுக்கு ரெய்டு அனுப்புங்க என்று மேக்னா சொல்ல அதுபடி மினிஸ்டர் ரைடு அனுப்புகிறார்.
அப்போது குவாலிட்டி செக்கிங், மின்சாரத்துறை, இன்கம் டேக்ஸ் ரைடு என்று எல்லா துறையில் இருந்தும் அர்ஜுன் கம்பெனிக்கு செல்கின்றனர். அவர்கள் அனைவரும் அங்கிருக்கும் ஒவ்வொரு குறையாக கண்டுபிடித்து சொல்ல குவாலிட்டி செக்கில் இருந்த பொருள் நல்ல குவாலிட்டியாக இருக்கிறது. இது இவர்களுடைய குவாலிட்டியே இல்லையே என்று கேட்க அந்த நேரத்தில் மேக்னா அங்கு வந்து இது தமிழ் கம்பெனியில் இருந்து வந்த பொருள் அதனால்தான் இது இவ்வளவு குவாலிட்டியா இருக்கு என்று சொல்கிறார்.

அதோடு ஒழுங்கா நடந்த எல்லா பிரச்சனையையும் சொல்லு இல்லனா நடக்கிறது வேற என்று சொல்ல அர்ஜுன் மாமா என்னால் அடி வாங்க முடியாது என்று உண்மையை கூறிவிடுகிறார். அதே நேரத்தில் அர்ஜுன் கம்பெனியில் இன்னும் இரண்டு ரைட் சென்று கொண்டு தான் இருக்கிறது. அந்த சமயத்தில் தமிழ் மற்றும் மேக்னா இருவரும் அர்ஜுனை பார்க்க கம்பெனிக்கு போகிறார்கள்.
அங்கு அர்ஜுனை பார்த்ததும் நீ என் மேல கைய வச்சிருந்தா கூட தப்பிச்சி இருக்கலாம். நீ கையை வெச்சது மேக்னா மேல அவங்க பொருளையே தூக்க உனக்கு தைரியம் வந்துடுச்சா? நீ எல்லாம் அவங்க முன்னாடி ஒரு தூசிக்கு சமம் என்று தமிழ் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு மேக்னா நீ தமிழ் மேல கையை வைக்கிறாயா? தமிழுக்கு இவ்வளவு தொல்லை கொடுத்து இருக்கியா? இனிமேல் உன்னை விட்டு வச்சா தானே என்று பேசிக் கொண்டிருக்கும் போது கவர்மெண்டில் இருந்து ஒரு ஆர்டர் வந்துவிட்டது.

அதாவது அர்ஜுன் கம்பெனியை காலவரையின்றி மூடுவதற்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். அதற்கு அர்ஜுன் நீங்க இப்படி பூட்டிட்டா எங்க வேலை பார்க்கிறவங்க என்ன பண்ணுவாங்க எதுக்கு தேவையில்லாத வேலை பாக்குறீங்க என்று பேச அதற்கு நீ பண்ண வேலைக்கு தான் உனக்கு பனிஷ்மென்ட். இனிமே யாரு வாழ்க்கையிலும் இனிமே நீ விளையாடவே கூடாது என்று மேக்னா பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications