அடுத்த பரபரப்பு.. சிவகார்த்திகேயன் பற்றி கூடவே நண்பனா இருந்த தமிழும் சரஸ்வதியும் தீபக் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி இமான் சொன்ன வார்த்தை சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் தீபக் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் தீபக்கும் சிவகார்த்திகேயனின் ஏற்கனவே விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக பணிபுரிந்து இருக்கின்றனர்.

tamilum saraswathiyum serial Deepaks words about Sivakarthikeyan

இந்த நிலையில் தீபக் சிவகார்த்திகேயன் பற்றி பேசிய வீடியோவை இணயத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருந்த நிலையில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் பல நடிகர்களின் இசை வெளியீட்டு விழா போன்ற பெரிய பங்க்சனை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு பின்பு அவருடைய திரைப்பட இசை வெளியீட்டு விழாவே பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதிலும் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

குழந்தைகள் முதல் பெண்கள் வரைக்கும் பல தரப்பட்ட ரசிகர்களும் இவருக்கு ரசிகர்களாக மாறியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் பேசிய வீடியோவால் பல ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருந்த பல நெட்டிசன்கள் அவரைப் பற்றி இப்போது இணையத்தில் வன்மத்தை கக்கி கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் இது உண்மையா? பொய்யா? என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தன்னால் மன்னிக்கவே முடியாத ஒரு துரோகத்தை தனக்கு செய்ததாகவும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் அதை வெளியே கூற விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு ரசிகர்கள் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி இதனை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ஒரு சிலர் இமானுக்கு ஆறுதலாகவும் பேசி வருகின்றனர். இப்படியாக இருக்கும் சூழ்நிலையில் இது பற்றி சிவகார்த்திகேயன் இதுவரைக்கும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தன்னுடைய புது திரைப்படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பிரபல சீரியல் நடிகர் ஆன தீபக் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

தென்றல், தமிழும் சரஸ்வதியும் போன்ற பல சீரியல்களின் மூலமாக மக்களிடையே பிரபலமான தீபக் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சியின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமானவர். ஆரம்ப காலகட்டத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இவரும் ஒரு காரணமாகத்தான் இருந்துள்ளார்.

அந்த வகையிலே தற்பொழுது, சிவகார்த்திகேயன் அப்படிப்பட்டவர் இல்லை. மேலும் இன்னொருவர் வாழ்வில் நடந்த எந்த ஒரு விஷயத்திற்கும் சாட்சிகள் இல்லாமல் நாம் நம்ப கூடாது எனவும் பேட்டி ஒன்றில் தீபக் கூறி இருக்கிறார். அதோடு அப்படி சாட்சிகள் இல்லை என்றால் மற்றவர்களை பற்றி பேசவே செய்யாதீர்கள் என்றும் தீபக் குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+