சரஸ்வதியை காப்பாற்ற தமிழ் கொடுத்த ஐடியா.. சிக்கிக்கொண்ட அர்ஜுன்.. போலீசுக்கு கிடைத்த தடையம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் சரஸ்வதியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மினிஸ்டரை சந்தித்து உதவி கேட்க, அதற்கு உதவு மினிஸ்டர் சில உதவிகளை செய்வதால் அர்ஜுன் போலீசில் சிக்க இருக்கிறார்.
அதோடு போலீஸ் சரஸ்வதி தான் குற்றவாளி என்று முதலில் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் இப்போது அவர்களுக்கும் சில தடயங்கள் கிடைத்திருக்கிறது. இதனால் கதையில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் தமிழ், நமச்சி, கோதை, நடேசன், வசு என எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மேக்னா காப்பாற்ற சொல்லி தமிழுக்கு போன் பண்ணியதும் சரஸ்வதி அங்கு போயிருக்கிறா, அதனால்தான் சரஸ்வதி சிக்கிக்கொண்டா அதோடு மேக்னா வயிற்றில் இருந்த கத்தியை சரஸ்வதி எடுத்தது தான் பெரிய தப்பு.
அதனால்தான் அவரை குற்றவாளி என்று எல்லோரும் சொல்கிறாங்க என்று பேசிக் கொண்டிருக்க, இதை கேட்டு தமிழ் எழுந்து நான் சரஸ்வதியை பார்த்தே ஆகணும் என்று மருத்துவமனையில் இருந்து கிளம்ப தமிழை குடும்பத்தினர் தடுத்து பார்க்கின்றனர். ஆனாலும் முடியாது என்று தமிழ் அங்கிருந்து கிளம்பி வந்து வக்கீலை பார்க்க அப்போது தமிழ் என்ன ஆச்சு என்று வக்கீல் இடம் பேச,
அவர் ஜாமீன் கிடைக்கவில்லை 15 நாள் ரிமாண்ட் செய்துள்ளார்கள் என்று பேசுகின்றனர். நீதிமன்றத்தில் வைத்து தமிழ் சரஸ்வதிக்கு ஆறுதல் சொல்கிறார். அதோடு அங்கு மேக்னா கேசை விசாரிக்கும் போலீஸ் வந்ததும் அவரிடம் தமிழ் என்னுடைய சரஸ்வதி குற்றவாளி இல்லை என்று சொல்ல அதற்கு போலீஸ் யார் தான் கொலை செஞ்சிட்டு நான் தான் செஞ்சேன்னு ஒத்துக்கிட்டா?
சரஸ்வதி குற்றவாளி தான் என்று அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் என்று அவர் பேசிக் கொண்டிருக்க, இதை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது என்று தமிழ் மினிஸ்டரை பார்க்க போகிறார். மினிஸ்டர் இடம் நடந்ததை எல்லாவற்றையும் தமிழ் சொல்ல அதற்கு மினிஸ்டர் அதிர்ச்சியாக அதோடு அர்ஜுன்தான் என்னை ஆள் வைத்து அடித்தது அந்த பழியை மேக்னா மேல போட்டது.
இப்போது சரஸ்வதி சிக்க வைத்திருக்கிறான் என்று எல்லாவற்றையும் சொல்ல அதற்கு அவர் இப்படி ஒரு கர்ப்பிணி பெண் கஷ்டப்படக்கூடாது என்று பரிதாபப்பட்டு உடனே மினிஸ்டர் இன்ஸ்பெக்டருக்கு போன் பேசுகிறார். அடுத்த கட்டத்தில் இன்ஸ்பெக்டர் நீங்க மினிஸ்டர் வரைக்கும் போவீங்கன்னு நான் எதிர்பார்க்கல.
ஆனா தப்பு செஞ்ச குற்றவாளியை நாங்க எப்பவும் தப்பிக்க விடமாட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு தமிழ் என்ன அடிச்சு போட்டுட்டு அந்த பழியை மேக்னா மேல போட பாத்தான் அர்ஜுன். ஆனா அப்புறம் தான் தெரிஞ்சது இந்த விஷயமே மேக்னாவிற்கு தெரியாதுன்னு என்று தமிழ் சொல்லிக் கொண்டிருக்கும்போது தமிழை அடித்த ரவுடிகள் அங்கு வந்து சரணடைகின்றனர்.

உடனே கோபப்பட்ட தமிழ் அவர்களை அடிக்க முயற்சி செய்கிறார். அதற்கு போலீஸ் தமிழை தடுத்து நிறுத்தி நீங்க என்ன பண்ணுறீங்க? நாங்க அவங்களை விசாரிச்சுக்குவோம் என்று சொல்ல, அதற்கு அந்த ரவுடிகள் தமிழ் எங்களுடைய நண்பனை அடிச்சான் அதனால தான் நாங்க அவனை அடிச்சோம் என்று சொல்ல,
அதற்கு தமிழ் இப்பதானே நம்ம அந்த ரவுடிகளை பத்தி பேசிட்டு இருந்தோம் அதற்குள் அவங்களே வந்து சரணடைகிறார்கள்.. இதில் இருந்து உங்களுக்கு டவுட் வரலையா சார் என்று போலீஸிடம் கேட்க, அதற்கு போலீஸ் ஆமா எனக்கு இப்போ தான் சந்தேகம் அதிகமாகிறது. சரஸ்வதி மேல் கண்டிப்பாக தப்பு இருக்காதுன்னு எனக்கு தோணுது. நீங்க சொல்ற மாதிரியே விசாரிச்சா தான் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியும் என்று கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications