தமிழுக்கு முக்கிய இடத்தில் இருந்து வந்த போன் கால்.. பதட்டத்தில் சரஸ்வதி.. அடுத்த பிரச்சனை வந்தாச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் தமிழ் மற்றும் கார்த்திக் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை தெரிந்து கொண்ட அர்ஜுன் புது ப்ளான் போடுகிறார்.
அதே நேரத்தில் தமிழ் கம்பெனியில் சில பொறுப்புகளுக்கு சீக்கிரமாக ஆட்களை வைக்க வேண்டும் என்று அவருக்கு ஆடிட்டர் ஆபீஸில் இருந்து போன் வர அதனால் தமிழ் குழப்பத்தில் இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தமிழ் திட்டியதால் கோபத்தில் இருக்கும் கார்த்தியை வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் சமாதானப்படுத்துகிறார்கள். ஆனால் கார்த்தி சமாதானம் ஆவது போல தெரியவில்லை. மனதிற்குள் கோபமாகவே இருக்கிறார். அப்போது அந்த கம்பெனியில் நானும் ஒரு ஸ்டாப். அதனால் தான் அவர் என்னை என்ன வேணாலும் பேசுவார்...
எனக்கு அந்த கம்பெனிக்கு போகவே பிடிக்கல என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். அடுத்த நாள் காலையில் சரஸ்வதி எக்ஸாம்க்கு கிளம்பி கொண்டிருக்கும் போது பதட்டமாக இருக்க அதற்கு வசு என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். அதற்கு எனக்கு எக்ஸாமை நினைச்சா பயமா இருக்கு என்று சரஸ்வதி சொல்ல அதற்கு வசு ஏற்கனவே எழுதின எக்ஸாம் நல்லா எழுதி இருக்கீங்க என்னமும் நல்லா எழுதுவீங்க என்று ஆறுதல் கூறுகிறார்.
அதை தொடர்ந்து சரஸ்வதி மொட்டமாடியில் நிற்கும் போது அந்த பக்கமாக வந்த தமிழ் சரஸ்வதி இடம் ஆசையாக பேச போக அப்போது சரஸ்வதி நீங்க எதுக்கு கார்த்திக் கிட்ட அப்படி நடந்துக்கிட்டீங்க? எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல... இந்த மாதிரி நடந்து கொள்வது அவரை ரொம்ப டென்ஷன் ஆக்கும் என்று திட்டுகிறார்.
அடுத்த காட்சியில் தமிழ் நான் உன்கிட்ட ஆசையா பேச வந்தேன். நீ என்னுடைய மூட் அவுட் பண்ணிட்ட என்று சொல்ல அதற்கு சரஸ்வதி எனக்கு படிக்கிற வேலை இருக்கு என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு தமிழும் கார்த்தியும் கம்பெனிக்கு போகின்றனர். அப்போது அர்ஜுன் வழி மறுத்து எங்களுக்கு ஆர்டர் கொடுத்ததுக்கு நன்றி என்று சொல்ல அதற்கு தமிழ் திட்டி விடுகிறார்.
அதோடு நாங்க உனக்காக எல்லாம் இதை பண்ணல எங்க அம்மா உருவாக்குன கம்பெனியில் வேலை பார்க்கிறவங்க சம்பளம் இல்லாம கஷ்டப்படக்கூடாது என்று தான் நான் எப்படி பண்ணுனேன் அதுபோல சீக்கிரமா? உன் கையால அந்த கம்பெனியை எங்களுக்கு கொடுக்கிற நாள் வரும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார்.
அப்போது கார்த்தி சோகமாக இருப்பதை கவனித்த அர்ஜுனும் பரமுவும் கார்த்தி சோகமாக இருக்கிறதை பார்த்தா இவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை இருக்கிற மாதிரி இருக்கு அதை பற்றி விசாரிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து கம்பெனியில் இருக்கும் நபரிடம் விசாரிக்க அவர்கள் ஏற்கனவே நடந்த பிரச்சனையை போட்டுக் கொடுக்கின்றனர்.
அப்போது அர்ஜுன் இதை வைத்து தமிழ் குடும்பத்திற்குள் நாம் பிரச்சனை பண்ணனும் என்று அர்ஜுன் பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டதாக கட்டத்தில் அர்ஜுனும் பரமுவும் ஐடி பைல் பண்ண போகிறார்கள். அப்போது ஆடிட்டர் தமிழ் கம்பெனி நல்லா வளர்ந்துட்டு அவங்க கம்பெனியில் இன்னும் பொசிஷன் போடல, அதனால ரிமைண்ட் பண்ண வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதோடு தமிழுக்கு போன் பண்ணி உங்க கம்பெனியில் டைரக்டர் மற்றும் சில பொசிஷன் இன்னும் போடாமல் இருக்கிறது. அதனை விரைவாக போடுங்க என்று சொல்கிறார். அதோடு ஒரு வாரத்திற்குள் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்றும் சொல்ல தமிழ் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications