சரஸ்வதியை மாட்டிவிட்ட ஆட்டோக்காரர்.. மீண்டும் வரும் மேக்னா? பணம் கொடுத்து மாட்டிய அர்ஜுன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா மீண்டும் உயிரோடு வருவாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் மேக்னாவாக நடிக்கும் நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு பிப்ரவரி 7ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அது பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சரஸ்வதி வந்த ஆட்டோக்காரர், போலீஸ் மற்றும் தமிழ் இடம் நடந்த உண்மைகளை எல்லாம் சொல்லி இருந்தார். அதோடு நான் கோர்ட்டில் வந்து உங்களுக்காக உண்மையை சொல்கிறேன் அந்த கர்ப்பமாக இருக்கும் பொண்ணை பார்க்கும்போது எனக்கு பாவமாக தான் இருந்தது. ஆனால் என்னுடைய குழந்தைகள் மற்றும் என்னுடைய குடும்பத்தை நான் பார்க்க வேண்டுமே அதனால் தான் நான் அந்த பெண்ணை வழியில் இறக்கி விட்டுட்டேன். என்னை மன்னிச்சிருங்க என்று சொல்லி இருந்தார்.

tamilum saraswathiyum serial february 7th episode full update

இதை நம்பி தமிழும் சரஸ்வதியிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆட்டோக்காரர் சாட்சி சொல்லுவார் அதனால் நீ வெளியே வந்து விடலாம் என்று வாக்கு கொடுத்துட்டு வந்திருந்தார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் சரஸ்வதியின் நிலைமையை சொல்லி வீட்டில் எல்லோரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து கோர்ட்டுக்கு சரஸ்வதியை கூட்டிட்டு வர அங்கு வரும் குடும்பத்தினர்கள் அனைவரும் சரஸ்வதி இடம் நலம் விசாரிக்கின்றனர். அதற்கு சரஸ்வதி அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல நான் நிம்மதியாக இருக்கிறேன். நீங்க எல்லாம் என் கூட இருக்கிறதுனால எனக்கு சந்தோஷம்தான் என்று சரஸ்வதி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். அதை தொடர்ந்து கோர்ட்டில் கேஸ் வருகிறது.

அப்போது நீதிபதி விசாரிக்கிறார். அந்த நேரத்தில் எங்களிடம் ஒரு சாட்சி இருக்கிறது அவரை விசாரிக்க வேண்டும் என்று வக்கீல் சொல்ல அதற்கு ஜட்ஜ் சரி என்று சொல்கிறார். பிறகு சரஸ்வதி போன ஆட்டோகாரர் வருகிறார். அவரிடம் மேக்னாவை காப்பாற்றத்தானே சரஸ்வதி போனார் என்று விசாரிக்க அதற்கு இல்லை உன்னை எப்படி இருந்தாலும் கொன்னுடுவேன் என்று தான் மேக்னாவிடம் இவர் பேசினார். அதனால்தான் கொலை செய்திருப்பாரா இருக்கும் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர்

அதை தொடர்ந்து அடுத்த கட்டத்தில் சரஸ்வதி நான் கொலை செய்யவில்லை என்று கத்த அதற்கு நீதிபதி அமைதியா இருக்கணும் என்று சொல்லி தமிழ் தரப்பு வக்கீலையும் இன்ஸ்பெக்டரையும் திட்டுகிறார். அதை தொடர்ந்து சரஸ்வதியை வெளியே கூட்டிட்டு வருகின்றனர். அப்போது அங்கு இருக்கும் அர்ஜுன் சரஸ்வதியை பார்த்து நக்கலாக நலம் விசாரிக்க அதற்கு சரஸ்வதி உண்மைகள் எல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக வெளிவரும், அன்னைக்கு உன்னுடைய முகத்திரை கிழிந்து உன்னுடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும் என்று சபதம் போடுகிறார்.

ஆனால் அர்ஜுன் அதற்கெல்லாம் கவலைப்படற மாதிரி தெரியவில்லை... பிறகு தனியாக சென்று ஆட்டோக்காரரை சந்தித்து அவருக்கு பணம் கொடுக்கிறார். அதோடு சரஸ்வதி ஜெயிலில் இன்னும் சித்திரவதை அனுபவிக்கனும்னு ஜெயில் வார்டனுக்கும் லஞ்சம் கொடுக்கப் போகிறார். மறுபக்கத்தில் சரஸ்வதியை ஜெயிலிலிருந்து வெளியே எடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் தமிழ் சோகத்தில் இருக்கிறார்.

ஆனால் எப்படியாவது நான் சரஸ்வதியை வெளியே எடுத்து விடுவேன் என்று தைரியமாக பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதுபோல சரஸ்வதியை வெளியே எடுக்க முடியாத அளவிற்கு அர்ஜுன் பக்காவாக பிளான் போட்டு காய் நகர்த்தி வரும் நிலையில் இனி மேக்னா உயிரோடு வந்தால் தான் கதை நன்றாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் இந்த சீரியலில் மேக்னாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய சின்ன பயணம் முடிவடைந்தது. இனி மீண்டும் ஒரு நீண்ட பயணத்தில் சீக்கிரத்தில் நீங்கள் பார்க்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் அவர் இனி தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வர மாட்டார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+