தமிழுக்கு விரிச்ச வலையில் சிக்கிய அர்ஜுன்.. ஆனால் மேக்னா சொன்ன வார்த்தை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜனவரி 10ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் தமிழை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுன் போட்ட நாடகம் எல்லாம் முடிவுக்கு வந்திருக்கிறது. கடைசியில் அர்ஜுனே அதில் மாட்டி இருக்கிறார்.

கோர்ட்டில் அர்ஜுன் ஆக்சிடென்ட் செய்த ரவுடி தமிழுக்கு எதிராக வாக்கு சொல்ல அதைக் கேட்டு மேக்னா அதிர்ச்சியில் நான் தான் தப்பு செய்ததாக மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மொத்த உண்மைகளையும் தமிழ் அங்கு உடைத்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அர்ஜுனுக்காக அவருடைய மாமா ஜெயிலுக்கு மீண்டும் போய் இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 tamilum saraswathiyum serial January 10th episode Tamil has broken the whole truth

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மேக்னா ஜெயிலில் இருப்பதால் அவரை எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும் என்று தமிழ் முயற்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கு தமிழ் தடையாக இருக்கிறார். அதற்கு எப்படி மேக்னாவை வெளியே எடுக்க என்று கோதை குடும்பத்தினர் கேட்க அதற்கு தமிழ் எனக்கு நம்பிக்கை இருக்கிறது கண்டிப்பாக நான் மேக்னாவை வெளியே எடுப்பேன்.

நம்ம கம்பெனியையும் என்னையும் காப்பாற்றிய அவங்களை என் உசுர கொடுத்தாவது வெளியே எடுப்பேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் கோர்ட்டுக்கு எல்லோரும் வருகிறார்கள். அங்கே அர்ஜுன் தமிழிடம் என்னை ஜெயிலுக்கு அனுப்பின மாதிரி உன்னை ஜெயிலுக்கு அனுப்புவேன் என்று சவால் விட்டு பேசுகிறார். அப்போது கண்டிப்பாக நீ தான் உள்ளே போவா என்று அர்ஜுனுக்கு தமிழ் மீண்டும் சவால் விடுகிறார்.

அடுத்த காட்சியில் நீதிமன்றத்தில் தமிழ் தானே காரை ஓட்டி சென்றது என்று மேக்னாவிடம் விசாரிக்கிறார்கள். ஆனால் அதற்கு மேக்னா நான் தான் காரை ஓட்டி சென்றேன் என்று பதில் சொல்கிறார். அதற்கு அடிபட்ட நபர் தமிழ் தான் காரை ஓட்டி வந்து என்னை கொல்ல முயற்சி செய்தார் என்று வாக்குமூலம் கொடுக்கிறார். அடுத்ததாக தமிழை விசாரிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள்.

அப்போது தமிழிடம் நீங்க தானே காரை ஓட்டி போனீங்க என்று கேட்க அதற்கு தமிழ் ஆமாம் நான் தான் காரை ஓட்டிப் போனேன். ஆனால் நான் எடுக்கவில்லை என்று சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் என் தரப்பு நியாயத்தையும் சொல்ல வேண்டும் என்று கேட்க, அதற்கு எதிர் தரப்பு வக்கீல் அதெல்லாம் முடியாது என்று மறுக்கிறார். ஆனால் ஜட்ஜ் நீங்கள் சொல்லுங்கள் என்று சொல்கிறார் உடனே தமிழ் ஆக்ஸிடெண்ட் ஆன கார் என்னுடைய காரின் ரைட் பக்கத்தில் அடிபட்டுள்ளது.

 tamilum saraswathiyum serial January 10th episode Tamil has broken the whole truth

ஆனால் பைக்கில் லெப்ட்சைடில் அடிபட்டுள்ளது. அதை நீங்கள் கவனித்தீர்களா? என்று கேள்வி கேட்கிறார். அதோடு ஆக்ஸிடெண்டான நேரத்தில் நான் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளேன். அதற்கான பில் போட்டோ இதோ என்று அதையும் காட்டி நான் இடிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறார். அடுத்ததாக இதை செய்தது என்னுடைய தங்கச்சி புருஷன் அர்ஜுன் தான் என்னை பழிவாங்குவதற்காகத்தான் இப்படி செய்தார் என்று சொல்லி...

 tamilum saraswathiyum serial January 10th episode Tamil has broken the whole truth

அதற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு மெக்கானிக் செட்டில் விட்டு காரை சரி செய்துள்ளான். இதோ அதற்கான பில் என்று அதையும் கொடுக்கிறார். உடனே அர்ஜுன் பதறி அடித்து போய் நான் இடிக்கவில்லை இடிக்கவில்லை என்று கத்துகிறார். அதோடு தன்னுடைய மாமாவிடம் நான்தான் இடித்தேன் என்று ஒப்புக்கொள்ளுங்கள் என்று அவரை மாட்டி விடுகிறார்.

 tamilum saraswathiyum serial January 10th episode Tamil has broken the whole truth

அதற்கு அர்ஜுனுடைய மாமாவும் நான் தான் இடிச்சேன். எங்களை ஜெயிலுக்கு போக வெச்சதால தான் நான் ஆள் வச்சு இடித்தேன், பணம் கொடுத்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். இப்படியாக தமிழுக்கு விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்டு அர்ஜுன் திணறிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+