கோதை செய்த உதவியை போட்டுக் கொடுத்த அர்ஜுன்... தமிழ் சொன்ன வார்த்தை... கலங்கி நிற்கும் குடும்பம்
சென்னை: தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து ஆறாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காக தனக்கு உதவி செய்த கோதையை குடும்பத்தினரிடம் அர்ஜுன் மாட்டி விடுகிறார்.
அதற்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை தமிழ் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுனின் தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்த மேக்னாவும் தமிழும் அர்ஜுனை போலீசில் பிடித்துக் கொடுத்திருந்தனர். அதோடு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைக்காது என்று சொல்லி இருந்த நிலையில் அவர்களிடம் ராகினி நான் இனி என்னுடைய புருஷனை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்த என்னுடைய கம்பெனியை நானே எடுத்து நடத்த வேண்டும் என்று சபதம் போட்டிருந்தார்.
இந்த நிலையில் ராகினி கதறி அழுவதையும் குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளாமல் இருப்பதையும் தெரிந்து கொண்ட கோதை ராகினிக்கு உதவி செய்வதற்காக அர்ஜுனை வெளியே எடுப்பதற்கு சம்மதித்திருந்தார். அதோடு தன்னுடைய குடும்பத்திற்கு தெரியாமல் கோதை வக்கீல் இடம் பேசி அர்ஜுனுக்கு எதிராக வாதாடாமல் தடுத்து நிறுத்தி அர்ஜுனை வெளியே வர வைத்திருந்தார்.

ஆனால் அர்ஜுன் வெளியே வந்ததும் தன்னை வெளியே கொண்டு வந்தது கோதை என்றும் அதுவும் தமிழுக்கு தெரியாமல் தான் கோதை தனக்கு உதவி செய்திருக்கிறார் என்பதை தெரிந்து கோதையை எப்படியாவது குடும்பத்தினர் முன்பு அவமானப்படுத்தி குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்து தன்னுடைய மகளின் பெயர் சூட்டு விழாவிற்கு மொத்த குடும்பத்தையும் ராகினியை வைத்து கூப்பிட வைத்திருந்தார்.

ராகினி வீட்டிற்கு வந்து கூப்பிட்ட போது கூட எல்லோரும் நாங்க வர முடியாது என்று சொல்லி இருந்த நிலையில் தமிழ் மட்டும் போயிட்டு வருவோம். ராகினி நம்ம விட்டு பொண்ணு என்று சென்டிமென்ட்டாக பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் எல்லோரும் ராகினியின் வீட்டிற்கு வருகின்றனர்.
அப்போது தமிழின் குடும்பத்தினர் வருவதை தெரிந்து கொண்டு அர்ஜுனின் அம்மா பிரச்சனை செய்ய அதற்கு அர்ஜுன் எப்படியும் இன்னைக்கு கோதையோட இரண்டு பசங்களே கோதையை அவமானப்படுத்த போறாங்க, அதற்கான வேலையை நான் பார்த்தாச்சு என்று சொல்லி இருந்தார். பிறகு தமிழ் குடும்பத்தினர் எல்லாரையும் கூப்பிட்டு வைத்து அர்ஜுன் நீங்க எல்லாரும் பங்ஷனுக்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்...

தமிழ் சார் என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டாரு, அதனால என்னால வெளியே வர முடியாதோனு நான் ரொம்ப பயந்துட்டேன். ஆனா அத்தையோட தயவால்ல நான் வெளியே வந்துட்டேன் என்று எல்லார் முன்பும் போட்டு உடைக்க, அதைக் கேட்டு வசு,சரஸ்வதி என எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது கார்த்திக் கோபமாகி பார்த்தீங்களா அண்ணே இந்த கிரிமினல்ல அம்மா தான் சப்போர்ட் பண்ணி இருக்காங்க என்று சொல்ல, அதற்கு தமிழ் அமைதியா இரு...

என்னதான் இருந்தாலும் ராகினி நம்ம விட்டு பொண்ணு. அதனால அவங்க பக்கமும் நியாயம் இருக்கின்றது, நான் புரிஞ்சுகிட்டேன். எங்க அம்மா செஞ்ச உதவி உனக்காக இல்ல, ராகினி நல்லா இருக்கணும் என்கிறதுக்காக தான் இப்படி பண்ணி இருக்காங்க. இதுல எந்த தப்புமே இல்லையே என்று சொல்லி அர்ஜுன் குடும்பத்திற்கு தமிழ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications