ஜோதிடர் ராகிணியிடம் சொன்ன ரகசியம்.. வசமாக சிக்கிய அர்ஜுன்.. கடைசியில் தமிழ் இப்படி பண்ணிட்டாரே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் தமிழை மாட்டி விட வேண்டும் என்று மறைந்திருந்து நாடகம் போட்ட அர்ஜுன் தமிழிடம் சிக்கி இருக்கிறார்.
அதே நேரத்தில் ராகிணி அர்ஜுன் பற்றி விசாரிக்க போன இடத்தில் ஜோதிடர் ராகிணிக்கு சில விஷயங்களை சொல்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் சில சுவாரசியமான காட்சிகள் ஒளிபரப்பானது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தமிழிடம் சரஸ்வதி நீங்கதான் அர்ஜுனை மறைச்சு வச்சிருக்கீங்களா? அவனை என்ன செய்யப் போறீங்க என்று கேட்க அதற்கு கோபமான தமிழ் நீயே என் மேல இவ்வளவுதான் நம்பிக்கை வச்சிருக்கியா? நான் அவனை எதுவும் செய்யல... அன்னைக்கு உண்மையை தெரியனும் என்பதற்காக தான் அவனல கடத்தி அடிச்சேன்.
ஆனா இன்னைக்கு அவன் பிசினஸுக்கு இடைஞ்சலா இருக்கான்னு அவனை கடத்துவேனா? என்ன நீ இவ்வளவுதான் புரிஞ்சிகிட்டியா? ஆனால் எங்கேயோ மறைஞ்சிருந்து தான் அவன் ஆட்டம் போட்டுட்டு இருக்கிறான்.. நான் அவனை பத்தி பேசியதால் என்னை மாட்டி விடுவதற்காக அவன் இப்படி பிளான் பண்ணிக்கிட்டு இருக்கான். ஆனால் அவனை நான் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் ராகிணி தன்னுடைய மாமியாரோடு ஒரு ஜோசியக்காரர் ஒருவரை பார்க்க வந்திருக்கிறார். அவரிடம் அர்ஜுன் காணாமல் போன விஷயத்தை சொல்லி அர்ஜுன் நிலைமை இப்ப எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார். அதற்கு அர்ஜூன் அம்மா எங்களுக்கு ஒருத்தன் மேலே தான் சந்தேகமா இருக்கு. அவன் தான் கடத்தி வச்சிருப்பானு எங்களுக்கு தோணுது எங்க பையனோட நிலைமை எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க என்று சொல்ல அதற்கு ஜோதிடர் உங்க கணவருக்கு எதுவும் ஆகாது.
அவருடைய உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல நல்லபடியாத்தான் இருக்கிறார் என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் பரமு அர்ஜுனை பார்ப்பதற்காக சாப்பாடு வாங்கிக் கொண்டு கிளம்ப அதை ஃபாலோ பண்ணி மீண்டும் தமிழும் நமச்சியும் பரமு பின்னாடியே வருகின்றனர். ஆனால் இந்த முறை பரமு அவர்களை பார்க்கவில்லை. அதோடு அர்ஜுன் இருக்கும் வீட்டு வாசலில் நின்று பரமு கத்த அர்ஜுன் வெளியே வந்து கதவை திறந்ததும் தமிழும் நமச்சியும் பார்த்து விடுகிறார்கள்.
பிறகு ஜன்னல் வழியாக இவர்கள் இருவரும் அந்த வீட்டிற்குள் என்ன பேசுகிறார்கள் என்பதை தமிழும் நமச்சியும் கவனிக்கிறார்கள். அப்போது அர்ஜுன் நீங்க வந்ததை அந்த தமிழ் பாக்கலயே என்று கேட்க அதற்கு பரமு, இல்லை நான் அவங்கள ஏமாற்றி விட்டேன். ராகிணி தான் வீட்ல ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கா என்று சொல்ல அதற்கு அர்ஜுன் ராகிணியை நல்லபடியா பார்த்துக்கோங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் நமச்சியும் தமிழும் இவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று வெளியே பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு அர்ஜுனும் பரமுவும் சாப்பிடும் போது ஹாலிங் பெல் அடிக்க இவர்கள் இருவரும் என்னவென்று வெளியே வந்து பார்க்கும் நேரத்தில் தமிழ் அர்ஜுனுடைய போனை எடுத்துக் கொண்டு ஓடி போய் விடுகிறார்கள்.
இதனால் அர்ஜுன் யாருக்கோ போன் பண்ண முடியாமல் திணறிக் கொண்டிருக்க வீட்டு கதவையும் பூட்டி சாவியை தமிழ் எடுத்து விடுகிறார். இதனால் வீட்டுக்குள் அர்ஜுனும் பரமுவும் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications