ராகினியை அடக்கி வைக்கும் அர்ஜுன் குடும்பம்.. ஆனால் நடந்தது வேறு.. இப்பவாவது இந்த முடிவு எடுத்தாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் சரஸ்வதியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆபத்தான நிலைமையில் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். அதை ராகினி கேட்டு அதிர்ச்சி அடைகின்றார். ராகினி மூலமாக சரஸ்வதியின் குழந்தையின் நிலைமையை தெரிந்து கொண்ட அர்ஜுன் குடும்பத்தினர் அடுத்த பிளான் போடுகின்றனர்.
ஆனால் அர்ஜுன் பேச்சை மீறி ராகினி தமிழ் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் சரஸ்வதியின் இந்த நிலைமைக்கு காரணம் அர்ஜுன்தான் என்று நடேசன் சொல்ல அதைக் கேட்டு ராகினி கோபப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராகினி மருத்துவமனையில் தன்னுடைய கம்பெனியில் வேலை செய்யும் நபருக்கு ஆபரேஷன் செய்தது பற்றி சொல்லிக் கொண்டிருக்க அதை கேட்டு அர்ஜுனின் அம்மாவும் அக்காவும் பாராட்டுகின்றனர். அப்போது பரமு உனக்கு படிச்சதெல்லாம் இப்போதும் ஞாபகம் இருக்கா? நீ டாக்டர் என்கிறதுக்கே நாங்க மறந்துட்டோம். நல்ல வேலை நீயும் ஒரு படத்தில் வர்ற மாதிரி ஆபரேஷன் பண்ணும் போது வாட்ச் வைத்து தைத்து விடல என்று கிண்டல் செய்ய இதனால் ராகினி கோபப்படுகிறார்.
அப்போது அர்ஜூனின் அக்கா பரமுவை திட்டுகிறார். பிறகு ராகினி மீண்டும் அர்ஜுனிடம் தான் வேலைக்கு போவது பற்றி கேட்க அதற்கு அர்ஜுன் அது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது. நீயே ஒரு ஓனர் நீ எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கிற இடத்தில் இருந்துட்டு இப்படி இன்னொரு இடத்தில் வேலை பார்க்க போக வேண்டாம். நீ படித்த படிப்பு இப்போ திடீர்னு பயன்பட்டது போல எப்பவாவது பயன்படும் அது போதும் என்று ராகினியை வேலைக்கு போகாமல் தடுக்கிறார்.
அடுத்த கட்டத்தில் தமிழும் சரஸ்வதியும் ஹாஸ்பிடலுக்கு போகின்றனர். அப்போது சரஸ்வதியின் உடல்நிலை சரி இல்லை என்று தமிழ் மருத்துவரிடம் சொல்ல அங்கே டெஸ்ட் எல்லாம் பார்த்த பிறகு நீங்கள் ஜெயிலில் இருக்கும்போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் உங்கள் மனம் கஷ்டப்பட்டதை தொடர்ந்து குழந்தையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
அதுபோல அங்கு இருக்கும்போது நீங்கள் சாப்பிட்ட சாப்பாடால் குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுப் போயிருக்கிறது. நீங்கள் இனி தைரியமாக இருக்க வேண்டும். அதுபோல நீங்கள் சந்தோஷமாக இருந்தால் குழந்தை சீக்கிரமாக சரியாகிவிடும் என்று சொல்லி மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்புகின்றனர். பிறகு எல்லோரும் வீட்டிற்கு வந்ததும் ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு ஹாஸ்பிடலில் சொன்னதை தமிழ் குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது இனி பழையதை நினைக்க வேண்டாம் என்று எல்லோரும் சரஸ்வதிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு ராகினியும் வருகிறார். அன்னிக்கு உடம்பு சரியில்லை என்றதும் நான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது உனக்கு எப்படி தெரியும் என்று சரஸ்வதி கேட்க அதற்கு கோதை நான் தான் சொன்னேன் என்று சொல்கிறார்.
பிறகு சரஸ்வதியின் ரிப்போர்ட்டை ராகினி பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது நடேசன் சரஸ்வதியின் இந்த நிலைமைக்கு காரணம் உன் புருஷன் தான் அதனால தான் சரஸ்வதி ஜெயிலுக்கு போனா என்று சொல்ல ராகினி கோபப்படுகிறார். எப்போதும் நீங்க இப்படித்தான் சொல்லிட்டே இருக்கீங்க என்று அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வருகிறார்.
அந்த நேரத்தில் குழந்தை அழுது கொண்டிருக்க அதை சாதகமாக்கிக் கொண்ட அர்ஜுன் குடும்பத்தினர் நீ இப்படி வீட்டை விட்டு அடிக்கடி போனா குழந்தை இப்படித்தான் அழுது கொண்டிருக்கும் என்று சொல்லி திட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராகினி சரஸ்வதியின் உடல்நிலை சரியில்லாதது பற்றி சொல்ல அதைக் கேட்டு அர்ஜுனும் அவருடைய குடும்பத்தினரும் சந்தோஷப்படுகின்றனர்
பிறகு ராகினி குழந்தையை கொண்டு ரூமிற்கு போனதும் அர்ஜுன் நாம செஞ்ச வேலைக்கு இப்பதான் விடை கிடைச்சிருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு இதை இப்படியே விடக்கூடாது. அந்த தமிழ் இதை நான் தான் செய்தேன் என்று தெரிந்து அதற்கான ஆதாரத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான். ஆனால் அதைக் கிடைக்க விடக்கூடாது என்று அர்ஜுன் தன்னுடைய மாமா பரமுவை கூட்டிக்கொண்டு அங்கிருந்து போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதே நேரத்தில் அந்த வார்டன் விஷயத்தில் மீண்டும் கம்ப்ளைன்ட் கொடுத்து அதை செய்ய சொன்ன அர்ஜுனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தமிழ் குடும்பத்தினர் எல்லோரும் முடிவெடுத்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications