கோதை சொல்லியும் கேட்காமல் கையெழுத்து போட்ட ராகினி.. அவமானப்படும் அர்ஜுன்.. ஏமாற்றத்தில் தமிழ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.

tamilum saraswathiyum serial November 2nd promo and episode full update

அதில் கோதை எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ரோகினி தமிழை சேர்மன் ஆவதற்கு கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார்.

அதே நேரத்தில் சொன்ன நேரத்தில் சொன்ன பொருள்களை செய்து கொடுக்க முடியாமல் தமிழ் கஷ்டப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் தமிழ் தன்னுடைய ஆர்டரை முடிப்பதற்காக இரவு பகல் என பார்க்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதனால் கோதையின் மொத்த குடும்பமும் சாப்பாடு சமைத்துக் கொண்டு தமிழ் கம்பெனிக்கு வந்து எல்லோரையும் சாப்பிட வைக்கின்றனர். அப்போது ராகினி கோதைக்கு போன் பண்ணுகிறார்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ராகினி சேர்மன் பதவிக்கு கண்டிப்பா ஒரு ஆளு வேண்டுமாமே நான் இப்போ குழந்தையை பார்த்துகிட்டு இருக்கிறேன். அது போல எனக்கு கம்பெனி பற்றி எதுவும் தெரியாது. அதனால அந்த பதவியில் அர்ஜுனை உட்கார வைக்கப் போகிறேன் என்று சொல்ல அதற்கு கோதை நீ யோசித்து தான் முடிவு எல்லாம் எடுக்கிறியா ?அர்ஜுன் சேர்மன் ஆகிறது திருடன் கையில சாவி கொடுக்கிற மாதிரி தான் என்று திட்டுகிறார்.

tamilum saraswathiyum serial November 2nd promo and episode full update

அதற்கு ராகினி இதனால் தான் நான் உங்ககிட்ட சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். தேவை இல்லாம இந்த இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க இப்படி பேசுவீங்கன்னு எதிர்பார்க்கல என்று கோபமாக போனை வைத்து விடுகிறார். இதனால் கோதை தமிழிடம் அர்ஜுனுக்கு சேர்மன் பதவியை கொடுக்கப் போறாளாம் ராகினி என்று சொல்கிறார்.

அதற்கு தமிழ் எக்கேடோ கெட்டு போகட்டும். நமக்கு 1008 வேலை இருக்கு. அதை பார்க்கலாம் என்று கூறிவிடுகிறார். அடுத்ததாக அர்ஜுன், ராகினி, அர்ஜுன் குடும்பம் என மொத்த பேரும் கம்பெனிக்கு போகின்றனர். அங்கு புதிய சேர்மன் இனிமேல் அர்ஜுன் தான் என்று கூறியதும் அனைவரும் கைத்தட்டாமல் அமைதியாக நிற்கின்றனர்.

அதற்கு அர்ஜுனுடைய மாமா நீ சேர்மன் ஆவது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார். அதற்கு அர்ஜுன் தொழிலாளர்களிடம் என்னடா இவன் தொழிலாளியாக வந்து கம்பெனியை இப்போ ஏமாற்றி வாங்கி இவன் சேர்மனா மாறிட்டான் என்று நினைக்கிறீர்களா? நான் சேர்மன் ஆக இருந்தாலும் முதலாளி கோதையின் மகள் ராகினிதான் என்று சொல்கிறார்.

அது மட்டும் அல்லாமல் ராகினி அனைவரிடமும் எங்க அம்மாவுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தீர்களோ அதுபோல இனி அர்ஜுனுக்கு கொடுக்க வேண்டும். அர்ஜுன் தான் இனி இந்த கம்பெனியின் சேர்மன் என்று பேசுகிறார். அதை தொடர்ந்து அர்ஜுனை சேர்மன் சீட்டில் உட்கார வைத்து ராகினி அழகு பார்க்கிறார். முதலில் மறுத்த மாதிரி நடிக்கும் அர்ஜுன் பிறகு அந்த சீட்டில் கம்பீரமாக அமர்ந்து அனைவரையும் பார்க்கிறார்.

அப்போது ராகினி புதிய ஆர்டர் பற்றி விசாரிக்க அதற்கு வா சுற்றிப் பார்க்கலாம் என்று சொல்லி அர்ஜுன் கூட்டிட்டு போகிறார். அந்த சமயத்தில் அர்ஜுனுடைய குடும்பம் இந்த சேருக்கே இப்பதான் மரியாதை வந்திருக்கு. நம்ம கிட்ட இருந்து ஏமாற்றி வாங்கியது நமக்கே வந்துவிட்டது என்று சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அர்ஜுன் அவருடைய மாமாவிடம் தமிழ் கம்பெனியில் என்ன வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று விசாரிக்க அதற்கு அவர் இன்னும் வேலை முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து தமிழ் கம்பெனியில் 15,000 பீஸ் மட்டுமே டெலிவரிக்கு ரெடி ஆக இருக்கிறது. இன்னும் மூவாயிரம் பீஸ் டெலிவரிக்கு ரெடி பண்ண முடியவில்லை என்று தமிழ் உடைந்து போய் இருக்கிறார்.

tamilum saraswathiyum serial November 2nd promo and episode full update

அதைப்பற்றி சரஸ்வதி இடம் கூறிக் கொண்டிருக்கும்போது கோதை இதுவே மிகப்பெரிய சக்சஸ் தான். 4 நாளில் 1500 பீஸ் அடித்து முடித்துள்ளோம். இதுவே நமக்கு மிகப்பெரிய சக்சஸ் என்று பாராட்டி ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்று ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். இது பற்றி அர்ஜுனனின் ஆல் அவருக்கு போன் போட்டு சொல்லிக் கொடுக்க அதைக் கேட்டு அர்ஜுனுடைய மாமா அர்ஜுனிடம் 70 சதவீத பீஸ் மட்டுமே அடிச்சி இருக்காங்களாம்.

இன்னும் 30 சதவீத பீஸ் அடிக்க முடியவில்லையாமல் தமிழ் முழித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்ல அப்போ இனிமேல் அவங்களால டெலிவரி பன்னமுடியாது. எந்த ஆர்டரும் கிடைக்காது என்று அர்ஜுன் சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+