மகனை பற்றி அர்ஜுனிடம் கோதை சொன்ன வார்த்தை.. கண்கலங்கிய தமிழ்.. எதிர்பாராத இழப்பில் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியின் சீரியலின் அக்டோபர் 9ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அர்ஜுன் செய்த சூழ்ச்சிகளை தெரிந்து கோதை கன்னத்தில் அடித்து அவமானப்படுத்துகிறார்.
அதே நேரத்தில் கோதை தன்னை பற்றி சொன்ன வார்த்தையை கேட்டு தமிழ் கண் கலங்கி அழுதிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் தமிழில் சரஸ்வதியின் சீரியலில் தமிழை அவமானப்படுத்த முடியவில்லை என்ற கோபத்திலிருந்து அர்ஜுன் தன்னுடைய கம்பெனியில் இருந்து தமிழ் கம்பெனிக்கு போன ஆட்களில் இருவரின் மனதை மாற்றி அவர்கள் மூலமாக தமிழ் கம்பெனியை தீ வைத்து கொளுத்துகிறார்.

தன்னுடைய குழந்தைக்கு சரஸ்வதிக்கு ஆக்சிடென்ட் ஆன பிறகும் எதுவும் ஆகவில்லை என்ற சந்தோஷத்தில் இருந்த தமிழுக்கு தன்னுடைய கம்பெனி தன் முன்பே எரிந்து நாசமாவதை பார்த்து அதிர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மொத்த குடும்பமும் தமிழ் உடைய இந்த நிலைமையை நிறுத்தி நினைத்து கஷ்டத்தில் இருக்கின்றனர்.
அப்போது தமிழ் கஷ்டப்படுவதை பார்த்து ரசிப்பதற்காக அங்கு வந்த அர்ஜுன் துக்கம் விசாரிப்பது போன்று பேசி சந்தோஷப்படுகிறார். அப்போது ஒரு கட்டத்தில் கோதை அர்ஜுனனின் கன்னத்தில் அடித்து," என் மகன் தமிழ் பத்தி உனக்கு முழுசா தெரியாதுடா, அழன் எத்தனை கஷ்டம் வந்தாலும், அவனால் அதையெல்லாம் தாண்டி மேல வர முடியும். அவன் ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி டா. இதிலிருந்து மீண்டு அவன் திரும்பத் திரும்ப வருவான்டா" என்று கோபமாக பேச அர்ஜுன் அங்கிருந்து அவமானப்பட்டு போகிறார்.

இதையெல்லாம் கோதையின் பின்னாடி நின்று கேட்டுக் கொண்டிருந்த தமிழ் கோதையை பார்த்து அம்மா என்று கூப்பிட கோதை கண்கலங்கியபடி அர்ஜுனன் கட்டியணைத்துக் கொள்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளிவந்திருக்கிறது. அதை பார்த்த அதிகமான ரசிகர்கள் ஒரு வழியாக கோதையை தமிழ் புரிந்து கொண்டதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது என்று அதிகமான ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இந்த உணர்வுபூர்வமான கதையை பார்க்கும் போது திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும் என்பது போன்று இருப்பதாகவும் அதிகமான ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் தமிழும் கோதையும் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கும் நிலையில் இனி அர்ஜுன் பற்றிய ரகசியங்கள் ராகினிக்கு தெரிய வரும்போது என்ன மாதிரி முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் ராகினி பெயரில் இருக்கும் சொத்துக்களை ஆக்ஷன் பெயருக்கு மாற்றி விட வேண்டும் என்று குடும்பத்தினர் பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications