Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் திருமணத்தால் பெண்ணுக்கு நடந்த அவலம்.. தம்பியே அரிவாளால் வெட்ட வந்த துயரம்.. குழந்தையைக் கூட..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இந்த வார நிகழ்ச்சியில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தவர்கள் VS பெற்றோர் சம்பந்தமில்லாமல் காதல் திருமணம் செய்தவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

Tamizha Tamizha Show August 20th promo discussion on Love Marriage with Parental Consent

அதில் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணை சொந்த தம்பியே அரிவாள் எடுத்து வெட்ட வந்தது குறித்து பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் அதிக அளவில் ரசிகர்களால் விரும்ப பட்ட நீயா நானா நிகழ்ச்சியை போன்று ஜீ தமிழ் சேனலிலும் தமிழா தமிழா என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் மத்தியில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகள் குறித்த விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இப்போது பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்திலேயே நவீன ஜோதிடர்களின் பரிகாரங்கள் என்ற தலைப்பில் விவாதம் செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்ட நடிகர் மாரிமுத்து பேசிய வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுவரைக்கும் பெரிய அளவில் தமிழா தமிழா நிகழ்ச்சி தெரியாமல் இருந்தாலும் இப்போது அதிகமான ரீச் கிடைத்திருக்கிறது. அடுத்தடுத்து தமிழா தமிழா நிகழ்ச்சிகளில் பல நல்ல தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் பெற்றோர் சம்மதத்தோடு காதல் திருமணம் செய்தவர்கள் VS பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற தலைப்பில விவாதம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வார எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு பெண்," என்னுடைய கல்யாணத்துக்கு மூணு நாளுக்கு முன்னாடி தான் என்னுடைய காதல் வீட்டிற்கு தெரிய வந்தது. காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும் என்னுடைய தம்பி அருவாளை எடுத்து வெட்ட வந்தான் சார். பையன பார்த்தா மனசு மாறும் என்று சொல்லுவாங்க ஆனால் இவனை தூக்கி வெளியே போடுங்கடா என்று சொல்றாங்க" என்று கூறுகிறார்.

மேலும் அவருடைய கணவர், "இவங்கள இன்னைக்கு வரைக்கும் வீட்டுல சேர்த்துக்கல, பெத்தவங்கள விட மத்தவங்களுக்காக தான் வாழ்ந்து கொண்டுட்டு இருக்காங்க" என்று சொல்கிறார். அதோடு எல்லா இடத்திலும் சொந்தக்காரங்க தான் பிரச்சனையாக இருக்காங்க. இதை பத்தி என்ன நினைக்கிறீங்க என்று அங்கிருந்த வயது முதிர்ந்த பெண்மணியிடம் ஆவுடையப்பன் கேள்வி கேட்கிறார்.

அதற்கு அந்தப் பெண்மணி, "சொந்தக்காரங்களை எல்லாம் நம்பாதீங்க. நம்ம கிட்ட சொத்து சேர்ந்திருந்தால் அந்த சொத்துக்காக வந்து நிப்பாங்க" என்று கூறுகிறார். இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஜாதி வெறியில் காதலை எதிர்க்கும் பலருடைய கொடுமைகள் வெளிவருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்களின் நிலைமையும் வெளிவரும் என்று இந்த எபிசோடிற்காக ரசிகர்கள் காத்திருப்பதாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+