நடிகை சந்தியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பப்லு.. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் அனு மோகன்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில் ஜாதகத்தை நம்பும் பிரபலங்களும் அதை தவறு என்று சொல்லும் பிரபலங்களும் வாதிடுகிறார்கள். அதில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் மற்றும் காதல் சந்தியா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஜோதிடராகவும் நடிகராகவும் இருக்கும் அனு மோகன் அந்த நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அதிகமாக பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது.

கடந்த வாரத்தில் கூட குழந்தைத்தனமாக இருக்கும் மனைவிமார்களும் அவர்களை சமாளிக்க முடியாமல் திணறும் கணவர்மார்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதிலும் ஒரு பெண், "ஐஸ் கிரீமை குத்தி குத்தி வெந்நீரில் சூடு பண்ணி சாப்பிடுவேன்" என்று சொன்னது இணையத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வாரத்தில் ஜோதிடத்தை வைத்து அடுத்த பிரச்சனையை உருவாக்கி இருக்கின்றனர்.
ஏற்கனவே இதுபோல ஒரு எபிசோடு சில மாதங்களுக்கு முன்பு வந்தது. அதாவது ஜோதிடத்தை நம்பும் நடிகர்கள் மற்றும் அதை நம்பாதவர்கள் என்று இரண்டு தரப்பினர்கள் விவாதித்தனர். அப்போதுதான் மறைந்த நடிகர் மாரிமுத்து ஜோதிடம் பொய் என்று பேசி இருந்தார். அதற்கு ஜோதிடர்கள் பலரும் அவர் மீது புகார் கொடுத்திருந்தனர். ஆனால் அவர் பேசி சில வாரங்களில் மாரடைப்பால் இறந்துவிட்ட நிலையில் அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இது ஒரு பக்கம் இருக்க இப்போது மீண்டும் அதே தலைப்பில் விவாதம் தொடங்கி இருக்கின்றனர். அதற்கான ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் பப்லு ஜோதிடத்தை நம்பாதவர்கள் அணியில் இருக்கிறார். அவர் என்னுடைய மகன் பிறந்ததும் அவனுடைய ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடர்களிடம் காட்டி இருக்கிறார்கள். அப்போது உங்க மகன் படித்து டாக்டராக மாறுவான் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் 27 வயதாகிறது என்னுடைய மகனால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. அது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று கோபத்தில் பேசுகிறார். மறுபக்கத்தில் ஜாதகத்தை நம்பும் அணியில் இருந்து நடிகை காதல் சந்தியா பேசியிருக்கிறார். அவர் பேசுகையில் 2016 இல் இருந்து நான் நடிக்கல. எனக்கு அந்த நேரத்தில் ரொம்ப பிரச்சனைகள் இருந்தது. அப்போ என்னுடைய பிரண்டு அஸ்ட்ராலஜி பார்க்கிறார் அவர் சொன்னது போல நான் திருத்தணிக்கு போயிட்டு வந்தேன்.
அதற்கு பிறகு தான் நான் ஒரு ஸ்டூடியோ வைத்து ரன் பண்ணுகிறேன் என்று சொல்கிறார். இதற்கு பப்லு நீங்க வந்து உழைச்சிங்க உங்க மூளையை கொஞ்சோண்டு பயன்படுத்தினீங்க. திருத்தணிக்கு போனதாலையோ தாம்பரத்துக்கு போனதனாலையோ உங்க ஸ்டூடியோ திறக்கலை என்று சொல்ல, அதற்கு காதல் சந்தியா அதெல்லாம் அவர் சொல்லக்கூடாது நான் அவருடைய கருத்தில் தலையிட்டேனா என்று கத்தி பேசுகிறார்.

அதற்கு ஜாதகம் உண்மை என்று சொல்லும் அணியில் இருந்த நடிகர் அனுமோகன், கோவில் வாசலில் இருந்து ஒருத்தர் பிச்சை கேட்டா தான் அவனுக்கு பணம். இவருக்கு ஜாதகத்தில் கட்டம் சரியாக இருப்பதால்தான் இவர் நடிகராக இருக்கிறார் என்று பப்லு பற்றி பேசுகிறார். அதற்கு கோவப்பட்ட பப்லு எழுந்து நின்று, "நீங்க பேசுறது நான்சென்ஸ்" என்று கத்திப் பேச உடனே நடிகரும் ஜோதிடருமான அனு மோகன் நிகழ்ச்சியிலிருந்து வெளியே கிளம்பி போகிறார்.
இந்த பரபரப்பான ப்ரோமோ இப்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மானாட மயிலாட நிகழ்ச்சியில் இதுபோல்தான் நடிகர் பப்லு மற்றும் சிம்பு இடையே சண்டை வந்து பரபரப்பு ஏற்படுத்தியது. அதுபோல இப்பொழுது ஜீ தமிழில் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications