பப்லு அவர் முகத்த கண்ணாடியில் பார்க்கவில்லைனு நினைக்கிறேன்.. முகத்துக்கு நேராக திட்டிய காதல் சந்தியா
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் எபிசோடில் ஜாதகத்தை நம்புபவர்களும் அதை உண்மை இல்லை என்று விமர்சிப்பவர்களும் கலந்துகொண்டு வாதிடுகிறார்கள். அப்போது ஜாதகத்தை நம்புகிறவர்கள் என்ற அணியில் நடிகை சந்தியா கலந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக ஜாதகம் பொய் என்று சொல்லும் அணியில் நடிகர் பப்லு கலந்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வந்திருக்கிறது அதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக நிஜ வாழ்க்கையில் ஜாதகம் உண்மையா? பொய்யா? ஜாதகத்தில் உள்ளது போல தான் வாழ்க்கையில் நடக்கிறதா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. திருமணத்திற்கு ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து பலர் திருமணம் செய்தாலும் அந்த திருமணம் அதிக நாட்கள் நிலைப்பதில்லை. ஆனால் ஜாதகமே பார்க்காமல் காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு கூட சில நேரங்களில் மகிழ்ச்சியான வாழ்க்கை நிலைத்திருக்கிறது.

இதனால் ஜாதகம் பொய் என்று பலர் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஜாதகத்தில் தான் எங்களுடைய எதிர்காலம் எங்களுக்கு தெரிந்தது... எங்களுடைய வாழ்க்கையே மாறியது என்றும் பலர் சொல்லி வருகிறார்கள். இப்போது ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில் ஜாதகத்தை பற்றி தான் விவாதம் நடக்கிறது. அதில் சாதாரண மக்களோடு பல திறை பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஜாதகத்தால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் குறித்தும், சிலர் தங்களுக்கு ஜாதகத்தில் சொன்ன பலன்களால் தங்களுடைய வாழ்க்கை மாறிவிட்டது என்றும் வாதிடுகிறார்கள். அந்த வகையில் நடிகை சந்தியா தனக்கு ஜாதகத்தால் தன்னுடைய வாழ்க்கை மாறியது என்ற அணியில் பேச வந்திருக்கிறார். அவர் பேசுகையில் எனக்கு ஆரம்பத்தில் ஜாதகத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது நான் காதல் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தேன்.
அதற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் ஜோதிடராக இருக்கிறார். அவர் உனக்கு ஜாதகத்தில் ஒரு முக்கிய திருப்பம் இருக்கிறது என்று சொல்லி திருத்தணி கோயிலுக்கு போயிட்டு வர சொல்லி இருந்தார். நானும் அவர் சொன்னது போலவே திருத்தணி கோயிலுக்கு போயிட்டு வந்தேன். அந்த கோவிலுக்கு போயிட்டு வந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கை மாறியது. இப்போது நான் சொந்தமாக ஸ்டுடியோ வைத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு முன்பு ஜாதகம் பொய் என்ற அணியில் இருந்து பேசிய பப்லு என்னுடைய மகன் பிறந்ததும் வீட்டில் எல்லோரும் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஜோதிடர்களிடம் என்னுடைய மகன் பிறந்த தேதி நேரம் எல்லாவற்றையும் சொல்லி இருந்தார்கள். அவர்கள் அதை பார்த்துவிட்டு உங்களுடைய மகன் பெரிய பிரபலமாக வருவார், ப்ரோஃபசராக வருவார், சயின்டிஸ்ட் ஆக வருவார், நிறைய திருமணம் செய்வார்... நிறைய பெண்களோடு காதலில் ஈடுபடுவார் என்றெல்லாம் சொன்னார்கள்.
நானும் என்னை போலவே என்னுடைய மகனும் வரப்போகிறார் என்று சந்தோஷப்பட்டேன். ஆனால் மூன்று வயதில் அவனுக்கு ஆட்டிசம் பாதித்துவிட்டது என்று சொன்னார்கள். இப்ப வரைக்கும் என்னுடைய மகனால் சரியாக பேச கூட முடியவில்லை, எழுந்து நடக்க முடியவில்லை. அப்போ ஜாதகம் எல்லாம் பொய்தானே என்று பப்லு கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு சந்தியா பப்லு பேசும்போது ஜாதகம் எல்லாம் பொய் என்று சொன்னார்.

அதோடு நான் 50 வருடம் ஆக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு ஜாதகம் நல்லா இருக்கு என்று பலர் சொன்னாங்க. ஆனால் எனக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது என்று சொல்லி இருந்தார். இந்த ஸ்டுடியோவுக்குள் வந்ததும் பப்லுவை பார்த்ததும் இவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. அப்படி பார்த்தால் பப்லு அவருடைய முகத்தை சரியாக கண்ணாடியில் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.
அவர் பார்த்திருந்தால் அவருடைய நிலைமை அவருக்கு தெரிந்திருக்கும் என்று சந்தியா பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஜாதகம் உண்மை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது அது ஏமாற்று வேலை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஜாதகத்தால் உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் பற்றி கமெண்டை தட்டி விடுங்க பாஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications