நல்லது நடக்கணுமா..? ஜோதிடர் சொன்ன நூதன பரிகாரம்.. ஸ்டன்னான தமிழா தமிழா.. இப்படியும் பரிகாரமா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சில ஜோதிடர்கள் சொன்ன நூதன பரிகாரங்கள் பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.
இந்த காலத்திலும் இதை நம்பலாமா? என்று அதிகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
பலர் கேள்வி கேட்கிற மாதிரி.. ஜோதிடர்கள் என்னதான் பரிகாரம் சொன்னார்கள் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஜோதிடம் என்பது உண்மையா..? இல்லையா..? அதை நம்பலாமா, வேண்டாமா? என்ற கேள்விகள் சமுதாயத்தில் அதிகப்படியாக அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு கடந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாதம் வைக்கப்பட்டிருந்தது. அதில் பல ஜோதிடர்கள் கலந்து கொண்டு வித்தியாசமான பரிகாரங்களை கூறியிருந்தனர். அதைக் கேட்டு வியந்து போனவர்கள் ஏராளம்.
அதே நேரத்தில் அதை ஏற்கனவே நாங்கள் செய்தாச்சு. ஆனால் எங்களுடைய வாழ்க்கையில் இன்னமும் மாற்றம் வரவில்லையே என்று ஒரு சிலர் கேள்வி எழுப்புவதையும் காணமுடிகிறது. அதையே கூட தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒரு பெண் கேட்டிருந்தார். அப்படி வித்தியாசமாக ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்கள் பற்றி ஒரு அலசல் பார்க்கலாம்.
அதில் ஒரு பெண் ஜோசியர் ஒருவர் ஒரு பரிகாரத்தை சொல்லி இருக்கிறார்." ஒரு மனிதர் ஒரு பொருள்களை செய்து அடுத்தவருக்கு கொடுத்து, அதை விற்பனை செய்துவிட்டார். ஆனால் அதற்கான பணம் வராமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு பரிகாரம் இருக்கு" அதற்கு என்ன செய்யனும்னா," ஒரு கண்ணாடி பவுலை வாங்கி, தன்னுடைய பிரச்சனையை நினைத்து அதை சுக்கு நூறாக உடைத்து அதை ஓரமாக தூக்கி வீசி விட்டால் பணம் தானாக வந்துவிடும்" என்று கூறி இருக்கிறார்.

அதோடு நான் இப்போ சொன்னது இது நவீன பரிகாரம். ஆனால் இதற்கு பாரம்பரிய பரிகாரம் ஒன்று இருக்கு. அது "பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைகிறது" தான். அதுதான் நம்ம பாரம்பரியமா செஞ்சு வருது. அதை தான் இப்போது கண்ணாடி பாத்திரத்தை உடைத்தால் கிடைக்கும் நன்மையாகவும் மாறி இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்டு பலருக்கும் அதிசயமாக இருந்திருக்கும். ஆனால் இன்னொரு நவீன பரிகாரத்தையும் அவர் கூறி இருக்கிறார்.
அது என்னன்னா, "ஒருவர் தன்னுடைய பிசினஸில் முன்னேற்றமடைய வேண்டும் என்றால் தன்னுடைய மனைவிக்கு புது செருப்போ, அல்லது புது கொலுசோ வாங்கி கொடுத்து பழையதை கழித்து விட்டால் அந்தக் கணவர் அதாவது அந்த பிசினஸ்மேனுடைய தொழில் அபரிமிதமாக வளர்ச்சி அடையும்" இதுவும் ஒரு நவீன பரிகாரம் என்று சொல்லி இருக்கிறார். (ஒருவேளை இது நடக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த பரிகாரம் எப்படியும் பெண்களுக்கு ரொம்ப பிடித்ததாக தான் இருக்கும்.)
அதுபோல அந்த நிகழ்ச்சியில் இன்னொரு விசித்திரமான பரிகாரமும் சொல்லப்பட்டது. அதாவது, "சந்திராஷ்டமம் அன்று தன்னை ஒரு செல்பி எடுத்து அந்த போட்டோவை டெலிட் செய்து விட்டால் தன்னுடைய பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும்" என்று சில ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதுவெல்லாம் நம்பவா? வேண்டாமா? என்று இப்போது அதிகப்படியான கேள்விகளும் விவாதங்களும் எழுந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இது போன்ற பரிகாரங்கள் தவறானது என்று பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் நீங்கள் இதுபோன்ற பரிகாரங்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? இந்த மாதிரி பரிகாரங்களுக்கு உங்களுடைய பதில் என்ன என்பதை சொல்லுங்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications