தமிழா தமிழா.. ஆளுநர் தமிழிசைக்கு நடந்த அவமானம்.. எம்எல்ஏ விஜயதாரணி.. என்ன சொன்னாங்க பாருங்க
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது VS போதுமானதாக இல்லை என்று தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கிறது.
இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், எம்எல்ஏ விஜயதாரணி என பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி சில வருடங்களாகவே ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி இருந்த நிலையில் தற்போது அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.

அதனால் சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பத்திரிகையாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டிருக்கிறார். முதல் முறையாக சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவை ஆவுடையப்பன் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிலையில் அவர் தொகுத்து வழங்கும் முதல் வாரம் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது VS போதுமானதாக இல்லை என்ற தலைப்பில் விவாதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் கீதா ஜீவன், விஜயதாரணி என பெண் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அவர்கள் எல்லாம் இப்போது ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ரேகா நாயர், சாந்தி மாஸ்டர், கோவை தனியார் பஸ் கண்டக்டர் ஷர்மிளா போன்ற பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆவுடையப்பன், தமிழிசை சௌந்தர்ராஜன் இடம் நீங்க ரெண்டு மாநிலத்திற்கு ஆளுநர் உங்களுக்கு இந்த அதிகாரம் அங்கீகாரத்தை கொடுத்து இருக்கிறதா? அல்லது இன்னமும் பல பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கத்தான் செய்கிறதா? என்று கேட்க, அதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டிப்பா இன்னமும் போராட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியான ஆவுடையப்பன் இன்னமும் இருக்கா? என்று கேட்க, ஆமாம் உத்திர பிரதேசத்தில் ஒரு கவர்னர் மீட்டிங் நடைபெற்றது. நாங்க எல்லாம் லைனாக நிற்கிறோம். அப்போ பொக்கே கொடுத்தது ஒரு ஐஏஎஸ் ஆபிஸர். லைனா எல்லோருக்கும் கொடுத்துட்டு வந்துட்டு என்ன தாண்டி எனக்கு அடுத்த ஆளுநருக்கு கொடுத்துட்டாங்க. இதே இடத்துல ஒரு ஆண் ஆளுநராக இருந்தால் இந்த அளவிற்கு உதாசீனப்படுத்துவாங்களா? என்று கேட்கிறார்.
அதற்கு விளவங்கோடு தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் விஜயதாரணி, "திட்டமிட்டு கரெக்டா நடக்கும். மேடையில ஏறினா உடனே சேருக்கு நம்ம தேடணும்" என்று சொல்ல, ஆவுடையப்பன் அப்போ உங்களுக்கு சேர் எல்லாம் போட மாட்டாங்களா? என்று கேட்க, ஆமாங்க சேர் கூட கிடைக்காது என்று விஜயதாரணி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். தற்போது இந்த பிரமோ வைரல் ஆகி வருகிறது.
-
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications