தமிழா தமிழா: நாப்கின் கூட மாத்த முடியாத நிலைமை.. மாமியார் செய்த கேவலம்.. இப்படியும் பாகுபாடா..?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் எந்த வாரம் friendly மாமியார் VS lovely மருமகள்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் தன்னுடைய மாமியார் செய்த செயல் குறித்து மருமகள் நிகழ்ச்சியில் போட்டு உடைத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் தான் எதற்காக அப்படி செய்தேன் என்பதை பற்றி மாமியார் சொன்ன வார்த்தைக்கு பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சி தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை கரு பழனி ஐயப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பிரெண்ட்லி மாமியார் லவ்லி மருமகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பல சின்னத்திரை பிரபலங்களும் தங்களுடைய மாமியாரோடு கலந்து கொண்டிருக்கின்றனர். தங்களுக்கு மாமியார் தரும் ஆதரவு, அதனால் தாங்கள் சாதித்துக் கொண்டிருப்பது குறித்தும் பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் ஒரு பெண் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் என்னுடைய வீட்டில் இரண்டாவது மருமகள் ஆனால் என்னுடைய மாமியாருக்கு எப்போதுமே மூத்த மருமகள் மீதுதான் பாசம் அதிகம். அவருக்கு ஒரு விதமாக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனால் நான் வீட்டில் வேலைகளை செய்வதற்காக இருக்கிறேன்.
மூத்த மருமகள் காட்டில் வேலை செய்றாங்க. நான் இல்லன்னு சொல்லல அவங்க ஆடு மாடுகளை பார்த்துட்டு சாயங்காலம் வீட்டுக்கு தான் வருவாங்க. ஆனா நான் வீட்ல எல்லா சின்ன சின்ன வேலைகளையும் செஞ்சுகிட்டு இருக்கேன். ஆனா அவங்க வந்ததும் வீட்டில் ஆட்டை மாமாவ கட்ட சொல்லிடுவாங்க, அத்தையை மாட்ட புடிச்சி கட்ட சொல்லிட்டு போயிருவாங்க. ஆனா வீடு வாசல் பெருக்குவது, சாணி அள்ளுவது என எல்லா வேலையும் நான் செஞ்சாலும் அவங்க வீட்டுக்கு வந்து எந்த வேலையும் செய்றது கிடையாது.
எங்க அத்தையும் எந்த வேலையும் செய்ய சொல்றதே கிடையாது. எனக்கும் அவங்களுக்கும் எங்க அத்தை பாகுபாடு காட்டுறதா தோணுது. அது போல இன்னொரு விஷயமும் இருக்கு. எனக்கு ரெண்டு பெண் குழந்தை. மூத்த மருமகளுக்கு ஒரு பையன் இருக்கான். அதனால் எனக்கு இப்படி பாகுபாடு காட்டுறாங்களோன்னு தோணுது.
எனக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அப்போ எங்க அத்தை குழந்தையை பார்க்க வந்துகிட்டு இருந்திருக்காங்க. அந்த நேரத்துல அவங்களுக்கு பெண் குழந்தை விஷயம் தெரிஞ்சு இருக்கு. அதனால என்னையும் பார்க்கல. என் குழந்தையும் பாக்கல. வெளியவே இருந்துட்டு போயிட்டாங்க. எனக்கு அம்மா அப்பா கிடையாது இவங்க தானே எல்லாம் பாக்கணும். ஆனா அந்த நேரத்துல என் கூட இல்லை.
சொல்லணும்னா எனக்கு நாப்கின் மாத்த கூட முடியாம நான் கஷ்டப்பட்ட அந்த நேரத்தில் எங்க ஹவுஸ் ஓனர் அம்மா தான் கூட இருந்து பாத்துக்கிட்டாங்க. இவங்க பொண்ணு பிறந்ததுனால என்னையும் பார்க்கல குழந்தையும் பாக்கல என்று தன்னுடைய வேதனையை சொல்ல, அது குறித்து தொகுப்பாளர் ஆவுடையப்பன் அந்த பெண்ணின் மாமியாரிடம் ஏன் அப்படி செஞ்சீங்க என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு அவர் அந்த நேரத்துல இரண்டாவது பெண் குழந்தை பிறந்துட்டேன்னு எனக்கு கொஞ்சம் வருத்தம். அதனால அப்படி பண்ணிட்டேன் என்று அந்த மாமியார் கூறி இருக்கும் நிலையில் இந்த காலத்திலும் இந்த பாகுபாடு பல குடும்பத்தில் இருக்கத்தான் செய்கிறது. என்னைக்கு தான் இந்த மாதிரி பெண்கள் திருந்த போகிறார்களோ? தெரியவில்லை. என்று அதிகமான ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
-
சென்னையை விட்டு கிராமத்துக்கு போக போறேன்.. இதுதான் காரணம்! உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் 5 டைட்டில் வின்னர் அபிஷேகா... ரூ.1 கோடி மதிப்பிலான வீடு பரிசு! யார் இந்த குட்டி பாடகி? -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications