Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க குரலை உசத்தி பேசினா சரின்னு ஆகாது.. ரேகா நாயருடன் கடும் வாக்குவாதத்தில் நடிகர் பப்லு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நேற்று செப்டம்பர் எட்டாம் தேதிக்கான எபிசோடில் ஜாதகத்தை உண்மை என்று நம்புவர்களும், அது உண்மை இல்லை என்று விமர்சிப்பவர்களும் கலந்து கொண்டு விவாதித்து இருந்தனர். அப்போது நடிகை ரேகா நாயர் மற்றும் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கிறது.

ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஜோதிடத்தை நம்பும் பிரபலங்களும் அதை பொய் என்று சொல்பவர்களும் கலந்து கொண்டு விவாதித்து இருந்தார்கள். அந்த நேரத்தில் நடிகர் மாரிமுத்து ஜோதிடம் பொய் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு ஜோதிடர்கள் பொய் பேசுபவர்கள் என்றும் அவர் அப்போது பேசியதற்கு எதிர்ப்பாக பல ஜோதிடர்கள் அவர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தனர்.

television zee tamil tamizha tamizha show

அதற்குப் பிறகு மாரிமுத்து திடீரென மாரடைப்பால் இறந்ததும் அவர் ஜோதிடர்களை பற்றி தவறாக பேசியதால்தான் அவருக்கு இப்படி ஒரு இறப்பு வந்துவிட்டது என்று கூட சிலர் வதந்தி பரப்பி வந்தனர். ஆனால் இதை மாரிமுத்துவின் குடும்பத்தினர் மறுத்திருந்தனர். இந்த பிரச்சனை முடிவடைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நேற்று தான் மாரிமுத்து இறந்து ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடத்தை நம்பும் பிரபலங்கள் மற்றும் அதை விமர்சிப்பவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஜோதிடத்தை நம்புபவர்கள் அணியில் நடிகை காதல் சந்தியா, ரேகா நாயர் உட்பட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஜோதிடத்தை நம்பாதவர்கள் அணிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர், நடிகர் பப்லு பிருத்திவிராஜ், கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஆதவன் உட்பட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் நடிகை ரேகா நாயர் தன்னுடைய வாழ்க்கையில் ஜோதிடத்தை தான் நம்பிய விஷயம் பற்றி பேசி இருந்தார். அப்போது அவர் பேசுகையில் நான் என்னுடைய 19 வயதில் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் என்னுடைய கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தேன். அந்த வீட்டில் ஒரு நாள் கோடங்கி ஒருவர் வந்து இந்த வீட்டில் வண்டிக்கு ஏத்த சக்கரம் இல்ல.. அது பிரிஞ்சு போய்விடும் என்று சொன்னார். அதுபோலவே என்னுடைய கணவர் என்னை விட்டு பிரிந்து போய்விட்டார்.

காலையில் வேலைக்கு போய்விட்டு வருகிறேன் என்று போனவர் மாலையில் வீடு திரும்பவில்லை. அதற்கு பிறகு அவர் எங்கே போனார் என்று நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்தோம். 18 வருடங்கள் ஆகிறது ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று இன்னும் தெரியாது. நான் கடந்த மூன்று வருடத்திற்கு முன்புதான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். ஆனால் என்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் நான் தொகுப்பாளராக கலந்து கொண்டேன்.

அப்போது பல ஜோதிடர்கள் அதில் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நான் நீங்கள் ஜோதிடம் சரியாக சொன்னால் ஏன் புயல் வருவதை உங்களால் சொல்ல முடியவில்லை? சுனாமி வருவதை உங்களால் ஏன் கணிக்க முடியவில்லை என்று கேள்விகள் எழுப்பி இருந்தேன். அதற்கு பிறகு ஜோதிடர் ஒருவர் நீங்கள் அதிகமாக கேள்வி கேட்கும் இடத்தில் தான் இருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருக்கிறது.

நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும். நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து விட்டு என்னை வந்து பாருங்கள் என்று சொன்னார். ஆனால் நான் இப்ப வரைக்கும் அந்த ஜோதிடரை பார்க்கவில்லை. ஆனால் என்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை மாறி இருக்கிறது. அதுபோல நான் என்னுடைய முதல் கணவருக்கு பிறந்த மகளோடு ஒன்றாக இருந்தால் ஒன்று அவள் இறந்து போய்விடுவாள், அல்லது நான் இறந்து போய் விடுவேன்.

அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் சண்டை வரும். அதற்கு காரணம் ராசியும் நட்சத்திரம்தான். அதனாலே என்னுடைய மகள் தனியாக போடிங் ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து எதிரணியில் இருந்து நடிகர் பப்லு பிரித்திவிராஜ் பேசுகையில் இங்கு எல்லாருமே படிச்சவங்க. ஒரு விஷயம் இருக்கு என்று நினைத்தால் இருக்கு. இல்லை என்று நினைத்தால் இல்லை.

எங்க வீட்டில் ஒருதங்க வேலை பார்க்கிறாங்க. அவங்க ஒரு நாள் படபட வருதுன்னு ஒரு மாதிரி இருந்தாங்க என்னன்னு கேட்டு மாத்திரை முடிஞ்சுச்சுன்னு சொன்னாங்க நானும் அவங்க சொன்ன மாத்திரையை ஓடிப்போய் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். அதை போட்டதும் சரியாயிடுச்சுன்னு சொன்னாங்க. ஆனா அந்த மாத்திரை எடுத்து பாத்தா அது வைட்டமின் சி மாத்திரை. ஆனா அவங்க என்ன நினைக்கிறாங்க இந்த மாதிரி சாப்பிடலன்னா நமக்கு ஏதாவது வந்துரும்னு நினைக்கிறாங்க.

அது சாப்பிடலன்னா பெரிய எஃபெக்ட் இல்லை என்கிறது அவங்களுக்கு தெரியல. அந்த மாதிரி தான் நீங்க எந்த விஷயம் நடந்தாலும் அதை ஜோதிடத்தோடு கனெக்ட் பண்ணி பேசுறீங்க என்று பேசிக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் கோபமான பப்லு நீங்க குரலை ஒசத்தி பேசினா சரின்னு ஆயிடுமா? ஸ்டுப்பிட் மாதிரி பேசுறீங்க... ஸ்டுப்பிட்... என்று ரேகா நாயரை பார்த்து கோபமாக கத்தி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+