என்னடா இது மாயனுக்கு வந்த சோதனை... இப்படித்தான் இந்த காலத்து பிள்ளைங்க..!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மாயன் கதை இப்போது ரொம்ப பரிதாபத்துல போயிகிட்டு இருக்கு.
அரவிந்த் மாயன்னு ரெட்டை பிள்ளைகள். ஒருத்தனை தன் உறவுக்காரன் மற்றும் நண்பனுக்கு பிள்ளை இல்லை என்று வளர்க்க குடுத்துடறார் .
அதில் அப்பா அம்மா வளர்த்த மாயன் எதுக்கும் உபயோகம் இல்லாமல் ரவுடி என்று பேர் எடுத்துடறான். ஆனா, நண்பன் வளர்த்த பையன் அரவிந்த் நல்ல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஆகிடறான்.

மாயனின் அப்பாவுக்கு ஆபரேஷன்
மாயனின் அப்பா குஸ்தி வாத்தியாருக்கு ஆபரேஷன் நடக்குது.ஆபரேஷனுக்கு ரத்த வகை கிடைக்கலை.மாயனுக்கு மட்டும்தான் அந்த ரத்தம் இருக்குது. மாயனுக்கு தம்பி டாக்டர் அரவிந்த் எத்தனை முறை போன் செய்தும் அவன் போனை எடுக்கலை.

மாயன் பெற்றோர் அறுபதாம் கல்யாணம்
மாயன் அப்பா அம்மா அறுபதாம் கல்யாணத்துக்கு பொண்டாட்டி தேவி வரலைன்ற கவலையில தண்ணியடிசிச்சுட்டு மண்டபத்துல படுத்து கிடக்கான். யார் போன் அடிச்சாலும் எடுக்கலை. ரத்தமும் கிடைக்கலை. ஒரு வழியா மாயனை கண்டு பிடிச்சாலும் ரத்தம் குடுக்க முடியாதபடி மாயன் தண்ணி அடிச்சு இருக்கான்.

எதுக்கும் பிரயோஜனம் இல்லை
மாயனை அவன் அம்மா,அக்கா,தங்கை, தம்பி என்று குடும்பமே திட்டறாங்க மாயன் அழ அழ அவன் பேசுவதை யாரும் கேட்கத் தயாராக இல்லை. டாக்டர் அரவிந்தும் நீ எல்லாம் ஒரு புள்ளையா... அப்பாவுக்கு எப்ப வேணா ஆபரேஷன் நடக்கும்னுதானே சொல்லி இருக்கேன்னு திட்டறான்.

கண் முன்னால நீக்காத
என் கண் முன்னாலநிக்காத வெளியில் போயிடுன்னு மாயன் அம்மா கண்ணீர் விட்டு கதறி அழறாங்க. போதாக் குறைக்கு தேவியும் வந்து நீ எதுக்கும் லாயக்கில்லை..ரவுடின்னு ஊர் பேசினதை நிஜமாக்கிட்டே இல்லை. கொஞ்ச நாள் பழகினத்திலேயே உங்கப்பா மேல எனக்கு பாசம் வந்துருச்சு...உனக்கு ஏண்டா அது இல்லைன்னு திட்டறா...
டபுள் கலர் வேட்டி, டபுள் கலர் காலர் சட்டை, சட்டைக்கு ஒரு கூலிங் கிளாஸ், கண்ணுக்கு ஒரு கூலிங் கிளாஸ்னு கலக்கிக்கிட்டு இருந்த மாயனின் நிலைமை இப்போது காவலிக்கிடம்தான்....!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications