Box office: தலைவன் தலைவி Vs மாரீசன் யாரு அதிக வசூல்? அதுவும் இவ்வளவு வித்தியாசம்?
சென்னை: ஜூலை மாதம் தமிழ் சினிமாவில் முதல் மூன்று வாரங்களில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால், பாக்ஸ் ஆபீஸ் வசூல் மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில், நான்காவது வாரத்தில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' மற்றும் பகத் பாசில், வடிவேலு நடித்த 'மாரீசன்' ஆகிய திரைப்படங்கள் ஜூலை 25 ஆம் தேதி போட்டி போட்டு ரிலீசானது. இந்த இரண்டு படங்களின் முதல் மூன்று நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. வசூலில் 'தலைவன் தலைவி' திரைப்படம் முன்னிலை வகித்து வசூல் வேட்டையாடி வருகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவான ரொமாண்டிக் நகைச்சுவைப் படமான 'தலைவன் தலைவி', ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.

கதைக்களம்
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளராக நடித்துள்ளார். நித்யா மேனன் அவரது மனைவியாக, பேரரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே. சுரேஷ், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இந்தப் படத்தை, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.
தலைவன் தலைவி வசூல் நிலவரம்
முதல் நாள்: ₹4.5 கோடி, இரண்டாம் நாள்: ₹7.25 கோடி, மூன்றாம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) ₹8.25 கோடி (புதிய உச்சம்!) மூன்று நாட்கள் மொத்த வசூல் (இந்தியா)** ₹20 கோடி உலகளவில் மொத்த வசூல் ₹25 கோடியைத் தாண்டியுள்ளது. இதே வசூல் வேகத்தில் சென்றால், 'தலைவன் தலைவி' திரைப்படம் விரைவில் ₹100 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமைந்துள்ளதால், அடுத்தடுத்த வாரங்களிலும் வசூல் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
மாரீசன் - கலவையான வரவேற்பு
சுதீஷ் சங்கர் இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ள 'மாரீசன்' திரைப்படம், அந்நிறுவனத்தின் 98வது படைப்பாகும். 2023ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்திருப்பதால், இந்தப் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்ரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மாரீசன் வசூல் நிலவரம்
முதல் நாள்:₹75 லட்சம் ,இரண்டாம் நாள்: ₹1.37 கோடி (வசூலில் ஒரு பிக் அப் இருந்தது),மூன்றாம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) ₹1.21 கோடி (இரண்டாம் நாளைக் காட்டிலும் குறைவு), மூன்று நாட்கள் மொத்த வசூல் (இந்தியா): ₹3.33 கோடி.'மாரீசன்' திரைப்படம் முதல் நாளில் மந்தமான வசூலுடன் தொடங்கினாலும், இரண்டாம் நாளில் சற்றுப் பிக் அப் ஆனது. ஆனால், விடுமுறை தினமான மூன்றாம் நாளில் வசூல் குறையத் தொடங்கியிருப்பது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. இது படத்திற்குக் கிடைத்த கலவையான விமர்சனங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
மொத்தத்தில், ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியான இந்த இரண்டு படங்களில், விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. 'மாரீசன்' திரைப்படம் சராசரி வசூலுடன் பின்தங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரம் எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications